Mithun Chakraborty: ஜார்க்கண்டில் பாஜக பிரச்சாரத்தில் பிரபல நடிகரின் பர்ஸ் திருட்டு..!

பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளரான மிதுன் சக்ரவர்த்தி, நேற்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டார். தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிர்சா சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளாளரான அபர்ணா சென்குப்தாவை ஆதரித்து கலியாசோலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற பேரணியாக சென்றார். அந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்தனர்.

Mithun Chakraborty: ஜார்க்கண்டில் பாஜக பிரச்சாரத்தில் பிரபல நடிகரின் பர்ஸ் திருட்டு..!

கோப்பு புகைப்படம்

Published: 

13 Nov 2024 09:10 AM

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்காக பிரச்சாரம் மேற்கொண்டிருந்த பிரபல பாலிவுட் நடிகர் மிதுன் சக்கரவர்த்தியின் பர்ஸ் திருடப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாஜகவின் நட்சத்திரப் பேச்சாளரான மிதுன் சக்ரவர்த்தி, நேற்று இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரச்சாரம் மேற்கொண்டார். தன்பாத் மாவட்டத்தில் உள்ள நிர்சா சட்டமன்ற தொகுதியின் பாஜக வேட்பாளாளரான அபர்ணா சென்குப்தாவை ஆதரித்து கலியாசோலில் நடைபெற்ற தேர்தல் பொதுக்கூட்டத்தில் உரையாற்ற பேரணியாக சென்றார். அந்த பொதுக்கூட்டத்தில் ஏராளமான தொண்டர்கள் கூடியிருந்த நிலையில் சிலர், பொதுக்கூட்டம் நடைபெறும் மேடையில் ஏறி மிதுன் சக்கரவர்த்தியுடன் புகைப்படம் எடுக்க முயன்றனர். இதனைத் தொடர்ந்து தனது பர்ஸ் திருடப்பட்டத்தை மிதுன் சக்கரவர்த்தி உணர்ந்தார்.

உடனடியாக அருகில் உள்ள பாஜக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகளிடம் இதுதொடர்பாக தெரிவித்தார். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக “மிதுன் சக்கரவர்த்தியின் பணப்பையை திருடியவர்கள் யாராக இருந்தாலும் உடனடியாக அதை அவரிடம் திருப்பித் தருமாறு கேட்டுக்கொள்கிறோம் ” என்று பொதுகூட்ட நிகழ்ச்சியின் ஏற்பாட்டாளர்களில் ஒருவர் மேடையில் இருந்தபடி அறிவித்தார். மேலும் மேடையில் மிதுனுடன் புகைப்படம் எடுக்கச் சென்ற அனைவரையும் கீழே இறங்குமாறு தெரிவிக்கப்பட்டது. ஆனால் கடைசி வரை மிதுன் சக்ரவர்த்தியின் பர்ஸை கண்டுபிடிக்க முடியவில்லை. இதனால் அதிருப்தியடைந்த அவர் அங்கிருந்து சிறிது நேரத்திலேயே புறப்பட்டு சென்றார்.

Also Read: Jharkhand Assembly Elections 2024: ஜார்க்கண்ட சட்டமன்ற தேர்தல்.. முதற்கட்ட வாக்குப்பதிவு தொடங்கியது!

இதனிடையே மேடையில் மிதுன் சக்கரவர்த்தி பர்ஸ் கேட்டு வேண்டுகோள் விடுக்கப்படும் வீடியோ சமூக வலைத்தளங்களில் ட்ரெண்டாகியுள்ளது. எதிர்க்கட்சிகள் பாஜகவை இந்த விவகாரத்தில் கடுமையாக சாடியுள்ளது.முன்னதாக நவம்பர் 11 ஆம் தேதி ஜார்க்கண்டின் கிழக்கில் உள்ள சிங்பூம் மாவட்டத்தில் மிதுன் சக்ரவர்த்தி தலைமையில் மாபெரும் சாலைப் பேரணி நடைபெற்றது.

பொட்கா தொகுதியில் பாஜக வேட்பாளரான முன்னாள் முதல்வர் அர்ஜுன் முண்டாவின் மனைவி மீரா முண்டாவை ஆதரித்து பிரச்சாரம் செய்தார். அதற்கு முன்னர் அக்டோபர் 27 ஆம் தேதி மிதுன் சக்ரவர்த்தி தனது பேச்சில் வன்முறை மற்றும் மதவெறியை தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாக குற்றம் சாட்டி சால்ட் லேக் பகுதியைச் சேர்ந்த கௌசிக் சாஹா என்பவர் அளித்த புகாரின் பேரில் மேற்கு வங்க காவல்துறையால் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Also Read: Wayanad By-Election: வயநாடு நாடாளுமன்ற இடைத்தேர்தல்.. ஆர்வமுடன் வாக்களிக்க குவியும் மக்கள்…

விறுவிறுப்பாக நடைபெறும் வாக்குப்பதிவு

ஜார்க்கண்ட் மாநிலத்தில் சட்டமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு இன்று (நவம்பர் 13) விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மொத்தம் 81 சட்டமன்ற தொகுதிகள் உள்ள ஜார்க்கண்ட் இன்று 43 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. காலை 7:00 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கிய நிலையில் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்கள் ஜனநாயக கடமையை ஆற்றி வருகின்றனர். முதற்கட்ட தேர்தலில் 1. 37 கோடி வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி பெற்றவர்களாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு நவம்பர் 20ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இரண்டு கட்டங்களிலும் பதிவாகும் வாக்குகள் அனைத்தும் நவம்பர் 23ஆம் தேதி எண்ணப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த தேர்தலில் ஜார்கண்ட் முக்தி மோர்ச்சா, காங்கிரஸ் ஆகிய கட்சிகள் ஒரு கூட்டணியாகவும், பாஜக மற்றொரு பிற கட்சிகளின் இந்த கூட்டணியாகவும் இணைந்து தேர்தலை சந்திக்கிறது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் அனைவரும் தங்களது தொகுதி மக்கள் கண்டிப்பாக வந்து வாக்களித்து ஜனநாயக கடமையை நிறைவேற்ற வேண்டும். ஜார்க்கண்டில் ஆட்சி மாற்றத்திற்கு வழி வகுக்க வேண்டும் என கேட்டுக் கொண்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

தினமும் காலையில் சிறிது எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் கிடைக்கும் நன்மைகள்..!
சைத்ரா ரெட்டி வீட்டில் விசேஷம்... வைரலாகும் போட்டோ
காலாவின் காதலி ஹூமாவின் நியூ ஆல்பம்
இந்திய குழந்தைகள் தினம் பற்றிய சுவாரஸ்ய தகவல்கள் இதோ!