5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஹேமந்த் சோரன் 4.0.. முதல்வர் பதவியேற்பு விழா.. ஒன்று திரளும் I.N.D.I.A கூட்டணி!

Jharkhand CM Hemant Soren: ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் வரும் 28ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்க உள்ளார்.

ஹேமந்த் சோரன் 4.0.. முதல்வர் பதவியேற்பு விழா.. ஒன்று திரளும் I.N.D.I.A கூட்டணி!
ஹேமந்த் சோரன் (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 24 Nov 2024 19:32 PM

ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் வரும் 28ஆம் தேதி பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதன் மூலம் அவர் ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக நான்காவது முறையாக பதவியேற்க உள்ளார். ஜார்க்கண்ட் மாநில முதலமைச்சராக ஹேமந்த் சோரன் நாளை மறுநாள் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. ஜார்க்கண்ட் சட்டப்பேரவை தேர்தல் இரு கட்டங்களாக கடந்த நவம்பர் 13,20ஆம் ஆகிய தேதிகளில் தேர்தல் நடைபெற்றது. இரு கட்டங்களையும் சேர்த்து 67.74 சதவீத வாக்குகள் பதிவாகின. கடந்த 2000ஆம் ஆண்டுகளில் இருந்து சட்டப்பேரவை தேர்தல்களில் பதிவான அதிகபட்ச வாக்குப்பதிவு இதுவே ஆகும்.

ஜார்க்கண்ட முதல்வராக பதவியேற்கும் ஹேமந்த் சோரன்

81 தொகுதிகள் கொண்ட ஜார்க்கண்டில், ஹேமந்த் சோரன் தலைமையிலான ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா 43 இடங்களிலும், காங்கிரஸ் 30 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 6 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 4 இடங்களிலும் போட்டியிட்டன.

தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 68 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம் 10 இடங்களிலும், ஐக்கிய ஜனதா தளம் 2 இடங்களில், லோக் ஜனசக்தி ஒரு இடத்திலும் போட்டியிட்டன. மொத்தம் 1,211 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.

இந்த நிலையில், நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. அதில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச் 34 இடங்களை கைப்பற்றி, தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. மேலும், காங்கிரஸ் 16 இடங்களிலும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் 4 இடங்களிலும், இந்திய கம்யூனிஸ்ட் 2 இடங்களில் வெற்றி பெற்றன.

Also Read : அதானிக்கு புது சிக்கல்.. சம்மன் அனுப்பிய அமெரிக்கா.. 21 நாட்கள் கெடு!

வரும் 28ஆம் தேதி முதல்வர் பதவியேற்பு விழா

அதேபோல, தேசிய ஜனநாயக கூட்டணியில் பாஜக 21 இடங்களிலும், அனைத்து ஜார்க்கண்ட் மாணவர் சங்கம், ஐக்கிய ஜனதா தளம், லோக் சக்தி ஆகியவை தலா ஒரு இடத்தை கைப்பற்றின. கடந்த 2019 தேர்தலில் பாஜக 25 இடங்களில் வென்ற நிலையில், இம்முறை அக்கட்சியின் பலம் சரிவை சந்தித்தன.

அதேபோல, கடந்த 2019 தேர்தலில் 30 இடங்களை வென்ற ஜார்க்கண்ட முக்தி மோர்ச்சா கட்சி, இம்முறை 4 தொகுதிகளை கூடுதலாக கைப்பற்றியுள்ளது. மேலும், கடந்த தேர்தலில் 47 இடங்களில் வெற்றி பெற்ற நிலையில், இந்த முறை இக்கூட்டணி பலம் அதிகரித்துள்ளது. அதே நேரத்தில் கடந்த தேர்த விட பாஜக பின்னடைவை சந்தித்துள்ளது.


ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த நிலையில், ஹேமந்த் சோரன் மீண்டும் முதலமைச்சராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். வரும் 28ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும் என்று தகவல் வெளியாகி உள்ளது.

ஹேமந்த் சோரன் முதல்வர் முதல்வர் பதவியை ராஜினாமா செய்து ஆளுநரிடம் அளித்து ஆட்சி அமைக்க உரிமை கோரினார் . ஆளுநர் சந்தோஷ் கங்வாரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை அளித்தார்.

Also Read : தனக்கு தானே சிலை திறப்பு.. மேற்கு வங்க ஆளுநர் செய்த சம்பவம்..!

ஒன்று திரளும் I.N.D.I.A கூட்டணி

கங்வாரைச் சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சோரன், “நான் ஆட்சி அமைக்க உரிமை கோரியுள்ளேன், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவு கடிதத்தை ஆளுநரிடம் அளித்துள்ளேன். அவர் எங்களை ஆட்சி அமைக்க அழைத்தார். பதவியேற்பு விழா நவம்பர் 28ஆம் தேதி நடைபெறும்” என்றார்.

ராஞ்சியில் வரும் 28ஆம் தேதி பதவியேற்பு விழா நடைபெறும். முதலமைச்சர் ஹேமந்த் சோரன் மற்றும் அமைச்சர்களுக்கு ஜார்க்கண்ட் ஆளுநர் சந்தோஷ்கு மார்க்ங்வார் பதவிப்பிரமாணமும், ரகசியக் காப்பும் செய்து வைப்பார்.

பதவியேற்பு விழாவில் மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி, மேற்கு வங்க முதல்வரும், திரிணாமல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி, சமாஜ்வாடி தலைவரும், உத்தர பிரதேச முன்னாள் முதல்வருமான அகிலேஷ் யாதவ், டெல்லி முன்னாள் முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தேசிய அமைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால், ராஷ்ட்ரிய ஜனதா தள தலைவரும், பீகார் மாநில முன்னாள் துணை முதல்வருமான தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோல் கலந்து கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

 

Latest News