5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

லின்-இன் உறவில் கொடூரம்.. காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்.. சிக்கியது எப்படி?

Crime News : லின் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை பாலியல் வன்கொடுமை செய்து 50 துண்டுகளாக காதலன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது உடல் உறுப்புகளை தனித்தனியாக காட்டி வீசியுள்ளார்.

லின்-இன் உறவில் கொடூரம்.. காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்.. சிக்கியது எப்படி?
கைதான நபர் (picture credit : Twitter)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 28 Nov 2024 18:17 PM

லின் இன் ரிலேஷன்ஷிப்பில் இருந்த காதலியை பாலியல் வன்கொடுமை செய்து 50 துண்டுகளாக காதலன் வெட்டிக் கொலை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பின்னர் அவரது உடல் உறுப்புகளை தனித்தனியாக காட்டி வீசியுள்ளார். இதற்கிடையே காதலியின் கையை தெரு நாய்கள் கவ்விக் கொண்டு வந்ததால் அவர் போலீசில் சிக்கினார். ஜார்க்கண்ட் மாநிலம் குந்தி மாவட்டத்தைச் சேர்ந்தவர் நரேஷ் பெங்ரா (25). இவருக்கு ஏற்கனவே திருமணம் நடந்துவிட்டது. இவர் அப்பகுதியில் உள்ள ஒரு இறைச்சி கடையில் வேலை செய்து வருகிறார். இவருக்கு குந்தி மாவட்டத்தை சேர்ந்த 24 வயது பெண்ணுடன் பழக்கம் இருந்தது.

காதலியை 50 துண்டுகளாக வெட்டிய காதலன்

இது பின்னடையில் காதலாக மாறியதோடு, இவர்கள் திருமணம் செய்யாமல் லிவ்-இன் உறவில் வாழ்ந்து வந்துள்ளனர். அந்த பெண்ணுக்கு நரேஷ் பெங்கரா ஏற்கனவே, திருமணம் ஆனவர் என்றும் அவருக்கு மனைவி இருப்பதும் தெரியாது.

எனவே, தன்னை திருமணம் செய்து கொண்டு அவரது சொந்த ஊரான ஜோர்டாக் கிராமத்திற்கு அழைத்து செல்ல வேண்டும் என்று அவர் வற்புறுத்தி வந்துள்ளார். தொடர்ந்த வற்புறுத்தி வந்ததால் அவர் ஜோர்டாவுக்கு அந்த பெண்ணை கடந்த 8ஆம் தேதி அழைத்து சென்றிருக்கிறார்.

இவர்கள் ராஞ்சியில் இருந்து பெங்ராவின் சொந்த ஊரான ஜோர்டாக் சென்றதும் தனது காதலியிடம் வீட்டிற்கு செல்வதாக கூறி ஒரு ஆட்டோவில் ஏற்றி பெங்ரா அழைத்து சென்றார். வழியிலேயே அவர் இறக்கிவிட்டு காத்திருக்கும்படி கூறிவிட்டு சென்றார். சிறிது நேரத்தில் கத்தியை மறைத்தப்படி எடுத்து வந்திருக்கிறார்.

Also Read : “அசைவம் சாப்பிடக் கூடாது” டார்ச்சர் செய்த காதலன்.. விபரீத முடிவு எடுத்த பெண் விமானி!

உடல் உறுப்புகளை தனித்தனியாக காட்டில் வீசினார்

பின்னர், காதலியை ஒரு இடத்திற்கு அழைத்து சென்று  பாலியல் வன்கொடுமை செய்து அவரது துப்பாட்டாவல் கழுத்தை இறுக்கி படுகொலை செய்தார். கொலை செய்யப்பட்ட காதலியின் உடலை மறைக்க முடிவு செய்த அவர், ஏற்கனவே தான் தயாராக எடுத்து வந்த கத்தியால் அவரது உடலை 50 துண்டுகளாக வெட்டியுள்ளார்.

பின்னர் அவற்றை பாலிதீன் பைகளில் அடைத்து அருகில் உள்ள வனப்பகுதிக்கு எடுத்துச் சென்றார். அவற்றை அங்கு வனவிலங்குகளுக்கு விருந்து அளித்திருப்பதாக கூறப்படுகிறதது. அதைத் தொடர்ந்து, எதுவும் நடக்காதது போன்று தனது வீட்டில் வந்துவிட்டார்.

இந்த சம்பவம் நடந்து 15 நாட்களுக்கு பிறகு வனப்பகுதியில் சுற்றித்திரிந்த தெருநாய்கள் ஒரு பெண்ணின் கையை கவ்விக் கொண்டு ஊருக்குள் வந்து திண்று கொண்டிருந்தன. அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த ஜோர்டாக் கிராம மக்கள் இதுகுறித்து ஜரியா கார்க் போலீசில் புகார் செய்தனர்.

அதிர்ச்சி பின்னணி

அதைத் தொடர்ந்து, போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர். மேலும், வனப்பகுதிக்கு சென்ற போலீசார் அங்கு தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு ஒரு பெண்ணின் சடலத்தை போலீசார் கண்டெடுத்தனர்.  அப்போது அந்த பெண்ணின் உடல் பாகங்கள் 50 துண்டுகளாக வெட்டப்பட்டு பல்வேறு இடங்களில் வீசப்பட்டிருந்தது.

இதனை மீட்டு போலீசார் பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.  பின்னர், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும், அந்த பெண்ணின் தாயாருக்கு தகவல் கொடுத்தனர். அப்போது, ராஞ்சியில் இருந்து புறப்படும் முன்னர் தனது மகள் தனக்கு போன் செய்து ஜோர்டாக் கிராமம் சென்று காதலனை திருமணம் செய்து கொண்டு வாழ இருப்பதாக மகிழ்ச்சியுடன் கூறியதாக தெரிவித்தார்.

Also Read : ஜார்க்கண்ட் மாநிலத்தின் 14 வது முதல்வர்.. பதவியேற்றார் ஹேமந்த் சோரன்.

மேலும், தனது மகனை அழைத்து வந்த பெங்ராதான் கொலை செய்திருக்க வேண்டும் என்று கூறினார். அதைத் தொடர்ந்து, அவரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தியதில், அந்த பெண்ணை 50 துண்டுகளாக வெட்டி கொலை செய்ததை ஒப்புக் கொண்டார். இதை அடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.

Latest News