இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு!

Sanjiv Khanna: இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக சந்திரசூட் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதி இருந்த நிலையில், அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு!

சஞ்சீவ் கண்ணா (picture credit: PTI)

Updated On: 

24 Oct 2024 22:17 PM

இந்தியாவின் 51வது தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம் செய்யப்பட்டுள்ளார். இது தொடர்பான அறிவிப்பை மத்திய சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் வெளியிட்டார். தற்போது தலைமை நீதிபதியாக உள்ள டி.ஒய்.சந்திரசூட் வரும் நவம்பர் 10ஆம் தேதியுடன் ஓய்வு பெறுகிறார். இதனால், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை மத்திய அரசு நியமித்துள்ளது. உச்ச நீதிமன்றத்தின் மூத்த நீதிபதியான சஞ்சீவ் கன்னாவை தலைமை நீதிபதியாக சந்திரசூட் பரிந்துரை செய்து மத்திய அரசுக்கு கடிதம் எழுதிய நிலையில், அதை ஏற்றுக் கொண்டு புதிய தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னாவை  நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்

இதுகுறித்து சட்டத்துறை அமைச்சர் அர்ஜூன் ராம் மேக்வால் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, ”இந்திய அரசியலமைப்புச் சட்டம் வழங்கிய அதிகாரத்தைப் பயன்படுத்தி, மாண்புமிகு குடியரசுத் தலைவர், மாண்புமிகு இந்தியத் தலைமை நீதிபதியுடன் கலந்தாலோசித்த பிறகு, இந்திய உச்ச நீதிமன்றத்தின் நீதிபதியான நீதிபதி சஞ்சீவ் கன்னாவை இந்தியத் தலைமை நீதிபதியாக நியமிப்பதில் மகிழ்ச்சி அடைகிறார். இவர் நவம்பர் 11ஆம் தேதி பதவியேற்பார்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Also Read: மீண்டும் பதற்றம்.. ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாத தாக்குதல்.. 6 வீரர்கள் காயம்!

யார் இந்த சஞ்சீவ் கன்னா?

1960 மே 14ஆம் தேதி நீதிபதி சஞ்சீவ் கன்னா பிறந்தார். டெல்லி பல்கலைக்கழகத்தின் வளாக சட்ட மையத்தில் சட்டம் படித்த இவர், 1983ஆம் ஆண்டு டெல்லி பார் கவுன்சிலில் வழக்கறிஞராகப் பதிவு வகித்தார். திஸ் ஹசாரி நீதிமன்றத்தில் பயிற்சி பெற்ற அவர், பின்னர் உயர் நீதிமன்றத்தில் பயிற்சி செய்யத் தொடங்கினார்.

நீதிபதி சஞ்சீவ் கண்ணா 14 ஆண்டுகள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் நீதிபதியாக இருந்தார். 2005ல், டெல்லி உயர் நீதிமன்ற கூடுதல் நீதிபதியாக பதவி உயர்வு பெற்று, 2006ல் நிரந்தர நீதிபதியானார். 2019ஆம் ஆண்டு ஜனவரி 18ஆம் தேதி அவர் உச்ச நீதிமன்றத்திற்கு பதவி உயர்வு பெற்றார்.

Also Read: கொந்தளிக்கும் கடல்.. தீவிரமான டானா புயல்.. உஷார் நிலையில் இருமாநிலங்கள்!

நீதிபதி சஞ்சீவ் கண்ணா 2023ஆம் ஆண்டு முதல் 2023 டிசம்பர் 25ஆம் தேதி வரை வரை உச்ச நீதிமன்ற சட்டப் பணிகள் குழுவின் தலைவராக இருந்தார். தற்போது அவர் தேசிய சட்ட சேவைகள் ஆணையத்தின் செயல் தலைவராகவும், போபாலில் உள்ள தேசிய நீதித்துறை அகாடமியின் ஆளும் குழு உறுப்பினராகவும் உள்ளார்.  எந்தவொரு உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக ஆவதற்கு முன்பே உச்ச நீதிமன்றத்திற்கு உயர்த்தப்பட்ட நீதிபதிகளில் நீதிபதி கண்ணாவும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!