5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kanchanjunga Train Accident: மேற்குவங்க ரயில் விபத்துக்கு காரணம்.. சிக்னல் கோளாறா? மனித தவறா? பரபர தகவல்!

மேற்கு வங்கத்தில் இருந்து கொல்கத்தாவிற்கு சென்று கொண்டிருந்த கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது சரக்கு ரயில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 15 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து எப்படி நடந்தது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த ரயில் விபத்தை பார்க்கும்போது சரக்கு ரயில் சிக்னலை கவனிக்காமல் சரக்கு ரயில் அதிகவேகமாக சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.அதாவது, பயணிகள் ரயில் சென்றுக் கொண்டிருந்த தண்டவாளத்தில் அடுத்து செல்ல வேண்டிய சரக்கு ரயிலுக்கு சிவப்பு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கும். ஆனால், சரக்கு ரயிலின் ஓட்டுநர் அதை கவனிக்காமல் தொடர்ந்து சென்றிருக்கலாம். இதனால் தான் விரைவு ரயில் பின்பு சரக்கு ரயில் மோதியுள்ளதாக சொல்லப்படுகிறது.

Kanchanjunga Train Accident: மேற்குவங்க ரயில் விபத்துக்கு காரணம்.. சிக்னல் கோளாறா? மனித தவறா? பரபர தகவல்!
ரயில் விபத்து
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 17 Jun 2024 16:28 PM

ரயில் விபத்துக்கான காரணம்: திரிபுராவின் அகர்தலாவில் இருந்து மேற்கு வங்கம் நோக்கி கஞ்சன் விரைவு ரயில் சென்றுக் கொண்டிருந்தது. அசாம் வழியாக மேற்கு வங்கம் செல்லும் இந்த ரயில் அம்மாநிலத்தின் நியூஜல்பைகுரி ரயில் நிலையம் அருகே நின்றுக் கொண்டிருந்தது. அப்போது யாரும் எதிர்பாராத விதமாக கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் இருக்கும் அதே தண்டவாளத்தில் பின்பக்கமாக சரக்கு ரயில் ஒன்று வந்தது. இந்த ரயில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் மீது மோதியது. இந்த சம்பவத்தில் கஞ்சன்ஜங்கா விரைவு ரயிலில் கடைசியில் இருந்த 3 பேட்டிகள் தடம் புரண்டன. இதனால், 15 பேர் உயிரிழந்த நிலையில், 60க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். இந்த நிலையில், இந்த விபத்துக்கான காரணம் வெளியாகி உள்ளது.

விபத்து ஏற்பட்ட பகுதி ஆட்டோமேட்டிக் சிக்னல் முறையில் ரயில்களை இயக்கும் பகுதியாக இருக்கிறது. இந்த பகுதியில் ரயில் இயங்க மனித உள்ளீடுகள் தேவையில்லை. தானியங்கி முறையிலேயே இயங்கும். இந்த ரயில் விபத்தை பார்க்கும்போது சரக்கு ரயில் சிக்னலை கவனிக்காமல் சரக்கு ரயில் அதிகவேகமாக சென்றிருக்கலாம் என கூறப்படுகிறது.

அதாவது, பயணிகள் ரயில் சென்றுக் கொண்டிருந்த தண்டவாளத்தில் அடுத்து செல்ல வேண்டிய சரக்கு ரயிலுக்கு சிவப்பு சிக்னல் கொடுக்கப்பட்டிருக்கிறது. ஆனால், சரக்கு ரயிலின் ஓட்டுநர் அதை கவனிக்காமல் தொடர்ந்து சென்றிருக்கலாம். இதனால் தான் விரைவு ரயில் பின்பு சரக்கு ரயில் மோதியுள்ளதாக சொல்லப்படுகிறது. இருப்பினும், இது மனித தவறா? சிக்னல் கோளாறா? என பல கோணங்களில் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

நிவாரணம் அறிவிப்பு:

கஞ்சன்ஜங்கா விரைவு ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்த நிலையில், இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் உதவி வழங்கப்படும் என பிரதமர் மோடி அறிவித்துள்ளார். இந்த விபத்து குறித்து குடியரசுத் தலைவர், பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பிரதமர் அலுவலகம் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருப்பதாவது, “மேற்கு வங்கத்தில் ரயில் விபத்தில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பங்களுக்கு பிரதமரின் தேசிய நிவாரண நிதியில் இருந்து தலா ரூ. 2 லட்சம் வழங்கப்படும். காயம் அடைந்தவர்களுக்கு ரூ.50,000 வழங்கப்படும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தனது எக்ஸ் தளத்தில் கூறியிருப்பதாவது, “மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங்க மாவட்டத்தில் ஏற்பட்ட ரயில் விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி அறிந்து வேததனை அடைந்தேன். எனது எண்ணங்களுக்கு பிரார்த்தனைகளும் உயிரிழந்த குடும்பத்தினருடன் உள்ளன. காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடையவும், நிவாரணம் மற்றும் மீட்புப் பணிகளும் வெற்றியடையவும் பிரார்த்திக்கிறேன்” என்றார்.

 

 

Latest News