5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

ஆம் ஆத்மிக்கு டாடா.. வெல்கம் செய்த பாஜக… டெல்லி அரசியலை அதிரவைத்த கெலாட்!

Kailash Gahlot join BJP: ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். நேற்று அமைச்சர் மற்றும் ஆம் ஆத்மியின் உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட், இன்று பாஜகவில் இணைந்துள்ளார்.

ஆம் ஆத்மிக்கு டாடா.. வெல்கம் செய்த பாஜக… டெல்லி அரசியலை அதிரவைத்த கெலாட்!
கைலாஷ் கெலாட் (picture credit : PTI)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 Nov 2024 14:20 PM

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் முன்னிலையில் இன்று பாஜகவில் இணைந்துள்ளார். டெல்லி மாநில போக்குவரத்து துறை அமைச்சராக இருந்த கைலாஷ் கெலாட் அமைச்சரவையில் இருந்தும், ஆம் ஆத்மி கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்தும் விலகுவதாக நேற்று அறிவித்திருந்த நிலையில், இன்று பாஜகவில் இணைந்தார்.  டெல்லியில் ஆம் ஆத்மி ஆட்சி நடைபெற்று வருகிறது. முதல்வராக அதிஷி உள்ளார். அதிஷி அமைச்சரவையில் போக்குவரத்து துறை அமைச்சராக இருந்தவர் கைலாஷ் கெலாட்.

ஆம் ஆத்மி கட்சியில் இருந்து விலகிய கெலாட்

இவர் நேற்று தனது பதவியை ராஜினாமா செய்வதாக அறிவித்தார்.  ஆம் ஆத்மி கட்சியின் தேசிய அமைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு கைலாஷ் கெலாட் தனது ராஜினாமா கடிதத்தை அனுப்பினார்.

அதில் சில முக்கிய விவரங்களை குறிப்பிட்ட அவர், கெஜ்ரிவாலை கடுமையாக விமர்சித்தார்.  அதில், “ஆம் ஆத்மி கட்சி மக்களின் உரிமைகளுக்காகப் போராடுவதற்குப் பதிலாக அதன் சொந்த அரசியல் செயல் திட்டத்திற்காக போராடுகிறது.


டெல்லி அரசு தனது பெரும்பாலான நேரத்தை மத்திய அரசுடன் சண்டையிடுவதில்  செலவிட்டார் டெல்லிக்கு முன்னேற்றம் ஏற்படாது” என்று குறிப்பிட்டிருந்தார்.  இவரது ராஜினாமா கடிதத்தையும் முதல்வர் அதிஷி ஏற்றுக் கொண்டார்.  இதனிடையே, “கைலாஷ் கெலாட் அமலாக்க இயக்குநரகம் மற்றும் சிபிஐ வழக்குகளை எதிர்கொண்டுள்ளார்.

Also Read : பாஜக அரசு கவிழ்கிறதா? கூட்டணியில் சிக்கல்.. மணிப்பூரில் ட்விஸ்ட்!

ஒரே நாளில் பாஜகவில் இணைந்த கெலாட்

எனவே, அவருக்கு பாஜகவில் சேருவதை தவிர வேறு வழியில்லை. இது பாஜகவின் மோசமான அரசியல் சதி. அமலாக்க இயக்குநரகம், சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளை தவறாக பயன்படுத்தி டெல்லி சட்டப்பேரவை தேர்தலில் வெற்றி பெற பாஜக விரும்புகிறது” என்று ஆம் ஆத்மி குற்றச்சாட்டி உள்ளது.

இந்த நிலையில், ஆம் ஆத்மியில் இருந்து விலகிய கைலாஷ் கெலாட் இன்று பாஜகவில் இணைந்தார். மத்திய அமைச்சர் மனோகர் லால் கட்டார் அவருக்கு கட்சி உறுப்பினர் பதவியை வழங்கினார்.

இதன் பின் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கைலாஷ் கெலாட், “இது எனக்கு எளிதான நடவடிக்கை அல்ல. ஆம் ஆத்மியின் ஒரு பகுதியாக இருந்தேன். மேலும் டெல்லி மக்களுக்காக பணியாற்றினேன். சிலர் இது ஒரே இரவில் எடுக்கப்பட்ட முடிவு என்றும் அழுத்தம் காரணமாக இருக்கலாம் என்று நினைக்கலாம்.

டெல்லி அரசியலில் பரபரப்பு

ஆனால் அழுத்தம் காரணமாக நான் எந்த முடிவையும் எடுக்கவில்லை என்று நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். மத்திய புலனாய்வுப் பிரிவு அல்லது அமலாக்க இயக்குநரகத்தின் அழுத்தம் காரணமாக நான் இதைச் செய்தேன் என்று ஒரு கதை உள்ளது.

நான் அவர்களிடம் சொல்ல விரும்புகிறேன். 2015 முதல் ஆம் ஆத்மி கட்சி உறுப்பினராக, எம்எல்ஏவாக, அமைச்சராக நான் எதுவும் செய்யவில்லை. பல்வேறு பிரச்னைகளில் ஆம் ஆத்மி கட்சியின் நம்பகத்தன்மை குறைந்து வருவதே தனது ராஜினாமா முடிவுக்கு காரணம்” என்று தெரிவித்தார்.

கைலாஷ் கெஹ்லோட் பாஜகவில் இணைந்தது குறித்து கெஜ்ரிவால் கூறுகையில், அவர் சுதந்திரமானவர், அவர் எங்கு வேண்டுமானாலும் செல்லலாம் என்று ஒரே வரியில் கூறியுள்ளார். அதே நேரத்தில், கைலாஷ் கெலாட் பாஜகவில் இணைந்தது குறித்து மனோகர் லால் கட்டார் கூறுகையில், ”கைலாஷ் கெலாட் பாஜகவில் சேருவது டெல்லி அரசியலுக்கு ஒரு திருப்புமுனையாக அமையும்.

Also Read : மூச்சு திணறும் டெல்லி… உச்சத்தை தொட்ட காற்று மாசு.. கடும் கட்டுப்பாடுகள்!

ஆம் ஆத்மி மற்றும் பாஜகவின் உள் ஏற்பாடுகளை ஒப்பிட்டுப் பார்த்தும், மோடி அரசின் செயல்பாடுகள் மற்றும் கொள்கைகளைப் பார்த்தும் கெலாட் பாஜகவில் சேர்ந்தார். நஜாப்கர் டெல்லியில் இருந்தாலும் அது ஹரியானாவுக்கு மிக அருகில் உள்ளது. டெல்லியில் பாஜக ஆட்சி அமைக்கும்” என்றார். டெல்லியில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், கெலாட்டின் விலகல் ஆம் ஆத்மிக்கு பின்னடைவாக அமைந்துள்ளது.

Latest News