Crime: இளமையாக மாறலாம்.. முதியவர்களை குறிவைத்து ரூ.35 கோடி மோசடி!

நடைமுறை வாழ்க்கையில் பலவகையான மோசடிகளை நாம் பார்த்திருக்கலாம், கேள்வி பட்டிருக்கலாம். தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில் டிஜிட்டல் மோசடிகள் கூட சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. அதனையெல்லாம் விஞ்சும் அளவுக்கு இந்த கான்பூர் சம்பவம் அரங்கேறியுள்ளது. ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி ஆகியோர் அங்குள்ள கோவிந்த் நகர் காவல் நிலைய பகுதியில் ரிவைவல் வேர்ல்ட் என்ற சிகிச்சை மையத்தை சமீபத்தில் திறந்துள்ளனர்.

Crime: இளமையாக மாறலாம்.. முதியவர்களை குறிவைத்து ரூ.35 கோடி மோசடி!

ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி

Published: 

04 Oct 2024 16:15 PM

பண மோசடி: உத்திரபிரதேசம் மாநிலத்தில் வயதானவர்களை இளமையானவர்களாக மாற்றுவதாக கூறி ரூபாய் 35 கோடி தம்பதியினர் மோசடி செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அங்குள்ள கித்வாய் நகரை சேர்ந்த மூதாட்டி ஒருவர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்து உடனடியாக போலீசில் புகார் செய்தார். இதன்மூலம் இந்த சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்து விசாரணை இறங்கிய காவல்துறையினருக்கு திடுக்கிடும் தகவல்கள் காத்திருந்தது. அதாவது தம்பதியினர் முதியவர்களை இளமையாக காட்டுகிறோம் எனக் கூறி பல கோடி ரூபாய் மோசடி செய்து தம்பதியினர் தலைமறைவாகி  இருப்பது தெரிய வந்தது. இப்படி ஒரு சம்பவம் இதுவரை கேள்விப்பட்டதே இல்லை என கூறும் போலீசார், நொந்துபோகும் அளவுக்கு மக்கள் விழிப்புணர்வு இன்றி இருப்பதாக கவலை தெரிவித்துள்ளனர்.

நடந்தது என்ன?

சினிமாவில் தான் டைம் டிராவல் மிஷின் மூலம் நாம் கடந்த காலத்துக்கும், நம்முடைய இளமை பருவத்தையும் மீண்டும் திரும்பி பார்ப்பது போல காட்சிகள் இருக்கும். இதனைப் பார்க்கும்போது நாமும் அந்த காலத்துக்கே சென்று விடலாம் என நினைப்போம். இதுதொடர்பாக மீம்ஸ் புகைப்படங்களும், வீடியோக்களும் கூட சமூக வலைத்தளங்களில் பார்த்திருக்கலாம். அதில் கூட டைம் டிராவல் மிஷின் வைத்து எப்படியெல்லாம் மோசடி செய்யலாம் என காட்டப்பட்டிருக்கும். ஆனால் நடைமுறை வாழ்க்கையில் பலவகையான மோசடிகளை நாம் பார்த்திருக்கலாம், கேள்வி பட்டிருக்கலாம். தொழில்நுட்பங்கள் பெருகிவிட்ட நிலையில் டிஜிட்டல் மோசடிகள் கூட சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. அதனையெல்லாம் விஞ்சும் அளவுக்கு இந்த கான்பூர் சம்பவம் அரங்கேறியுள்ளது.

ராஜீவ் துபே மற்றும் அவரது மனைவி ராஷ்மி ஆகியோர் அங்குள்ள கோவிந்த் நகர் காவல் நிலைய பகுதியில் ரிவைவல் வேர்ல்ட் என்ற சிகிச்சை மையத்தை சமீபத்தில் திறந்துள்ளனர். இந்த சிகிச்சை மையத்தில் முதியவரையும் இளமையாக மாற்றும் சிறப்பு சிகிச்சை அளிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக இஸ்ரேல்  நாட்டில் இருந்து வயதை மாற்றும் சிறப்பு கால இயந்திரம் ஆர்டர் செய்து வரவழைக்கப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

மேலும் கான்பூர் நகரத்தில் அதிகமாக அசுத்தம் நிறைந்துள்ளதால் இங்குள்ள மக்கள் விரைவாக முதுமை அடைவதாகவும் எனக் கூறி சிகிச்சை மையத்தில் விளம்பரப்படுத்தியுள்ளனர். தங்களிடம் உள்ள இந்த இயந்திரம் மூலம் ஆக்ஸிஜன் சிகிச்சை அளிக்கப்படுவதால் வயதானவர்கள் சிறிது நேரத்திலேயே இளமையாக மாறுவார்கள் எனவும் அந்த தம்பதியினர் தெரிவித்துள்ளனர். அதுமட்டுமின்றி இங்கே சிகிச்சைக்கு ஆள் சேர்த்து விட்டால் சம்பந்தப்பட்டவர்களுக்கு கட்டணம் கிடையாது எனவும் சலுகைகளையும் அறிவித்துள்ளனர்.

இளமையாக மாற யாருக்கு தான் ஆசை இருக்காது. இந்த விஷயத்தை கேள்விப்பட்ட அப்பகுதியைச் சேர்ந்த ஏராளமான முதியவர்கள் தாங்கள் இளமையாக மாற வேண்டும் என ஆசைப்பட்டு ரிவைவல் வேர்ல்ட் சிகிச்சை மையத்துக்கு படையெடுத்துள்ளனர். மேலும் தங்களுக்கு தெரிந்தவர்களையும் அதில் சேர்த்து விட்டுள்ளனர். இதனால் ராஜீவ் துபே மற்றும் ராஷ்மி தம்பதியினருக்கு தடையில்லாமல் பணம் கிடைக்கத் தொடங்கியது. முதியவர்கள் எதிர்பார்த்தபடி சிகிச்சையும் தொடங்கியது.

முதல் சுற்று சிகிச்சைக்கு ரூ.6000 பணம் வசூல் செய்யப்பட்ட நிலையில் சிகிச்சைக்கு வந்தவர்கள் தங்களுடைய வயது மாற்றத்தில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் சந்தேகம் அடைந்தனர். இதுதொடர்பாக ராஜீவ் மற்றும் ராஷ்மியிடம் கேள்விகளை கேட்டு துளைத்தெடுத்துள்ளனர். அப்போது அவர்கள் பல்வேறு காரணங்களை சொல்லி இருவரும் சமாளித்துள்ளனர். ஆனால் ஒரு கட்டத்தில் நிலைமை மோசமாவதை உணர்ந்த தம்பதியினர் இவர்களிடம் மாட்டிக் கொண்டால் தப்பிக்க முடியாது என உணர்ந்தனர்.

உடனடியாக இரவோடு இரவாக ராஜீவ் துபே மற்றும் ராஷ்மி தம்பதியினர் சிகிச்சை மையத்தை மூடிவிட்டு தலைமறைவாகியுள்ளனர். இதனைத் தொடர்ந்து போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு புகார் அளிக்கப்பட்டுள்ளது. அவர்கள் நடத்திய விசாரணையில் இதுவரை 15 பேரிடம் ரூ. 35 கோடி வரை அந்த தம்பதியினர் மோசடி செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த தம்பதியினர் தொடர்பான தகவல்களை மற்ற காவல்நிலையங்களுக்கும் அனுப்பி விரைவில் அவர்களை கைது செய்ய கான்பூர் போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!