5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாபநாசம் பட பாணியில் பெண் கொடூர கொலை.. சிக்கிய ஜிம் பயிற்சியாளர்.. துப்பு துலங்கியது எப்படி?

Uttar Pradesh Murder: உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்ணை கொலை செய்து உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜிம் பயிற்சியாளர் 4 மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார்.

பாபநாசம் பட பாணியில் பெண் கொடூர கொலை.. சிக்கிய ஜிம் பயிற்சியாளர்.. துப்பு துலங்கியது எப்படி?
கொலை செய்யப்பட்ட பெண்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Oct 2024 08:39 AM

உத்தர பிரதேச மாநிலத்தில் பெண்ணை கொலை செய்து உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதைத்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஜிம் பயிற்சியாளர் 4 மாதத்திற்கு பிறகு கைது செய்யப்பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தர பிரதேச மாநிலம் கான்பூர் சில் லைன்ஸ் பகுதியைச் சேர்ந்தவர்கள் விமர் சோனி. இவர் அப்பகுதியில் உள்ள ஜிம்மில் பயிற்சியாளராக உள்ளார். இவரது ஜிம்மில் அதே பகுதியில் வசிக்கும் ஏக்ரா குப்தா (32) என்ற பெண் உடற்பயிற்சிக்கு சென்று வந்துள்ளார்.

பாபநாசம் பட பாணியில் பெண் கொலை

இந்த நிலையில், கடந்த ஜூன் மாதம் 24ஆம் தேதி ஜிம்முக்கு சென்ற ஏக்தா குப்தா மாயமானார். இது குறித்து கணவர் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். ஆனால், ஏக்தா குப்தா பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை.

இந்த நிலையில், 4 மாதத்திற்கு பிறகு இந்த வழக்கில் துப்பு துலங்கியுள்ளது. ஏக்தா குப்தாவை கொலை செய்ததாக ஜிம் பயிற்சியாளர் விமல் சோனி கைது செய்யப்பட்டுள்ளார். இவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் சில அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளது.

அதன்படி, ஏக்தா குப்தாவின் கணவர் பங்குச்சந்தை தரகராக உள்ளார். ஏக்தா குப்தாவுடன் விமல் சோனிக்கு நெருக்கமான உறவு ஏற்பட்டுள்ளது. விமல் சோனிக்கு வேறொரு பெண்ணுடன் திருமணம் நடைபெற இருந்தது. இதற்கு ஏக்தா எதிர்ப்பு தெரிவித்தாக கூறப்படுகிறது.

Also Read : உறவினர் வீட்டில் நகை திருட்டு.. கேரளா இன்ஸ்டா பிரபலம் கைது!

துப்பு துலங்கியது எப்படி?

இதுகுறித்து பேசுவதற்காக கடந்த ஜூன் 24ஆம் தேதி ஏக்தா குப்தாவை தனி இடத்திற்கு விமல் சோனி அழைத்து சென்றுள்ளதாக தெரிகிறது. அங்கு விமல் சோனிக்கும், ஏக்தா குப்தாவுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

வாக்குவாதம் நீடித்த நிலையில், ஆத்திரம் அடைந்த விமல் சோனி, ஏக்தா குப்தாவின் கழுத்தில் குத்தியுள்ளார். இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிரிழந்துள்ளார். இதனால் உடலை என்ன செய்வதன்று தெரியாமல் சிறிது நேரம் இருந்துள்ளார்.

இதனை அடுத்து, உடனை அவரது உடலை கான்பூர் மாவட்ட ஆட்சியர் பங்களா வளாகத்துக்கு கொண்டு சென்று விமல் சோனி புதைத்துள்ளார். மாவட்ட ஆட்சியர் வீட்டருகே புதைத்தால் போலீசாருக்கு வந்தேகம் வராது என்பவதால் விமல் சோனி இவ்வாறு செய்திருப்பதாக கூறப்படுகிறது.

சிக்கிய ஜிம் பயிற்சியாளர்

மேலும், உடலை புதைக்கும்போது விமல் சோனி தன் செல்போனை பயன்படுத்தாமல் திட்டமிட்டு செயல்பட்டுள்ளார். பாபநாசம் படத்தில் வருவது போல், மாவட்ட ஆட்சியர் பங்களா வளாகத்தில் கொலை செய்யப்பட்டவரின் உடலை புதைத்ததால் போலீசார் தேட மாட்டார்கள் என யோசித்து விமல் சோனி செயல்பட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

Also Read : இன்ஸ்டா பிரபலம் கொலை.. கர்ப்பமாக இருந்த கொடூரம்.. காதலன் கொடுத்த பகீர் வாக்குமூலம்!

இதனை அடுத்து, விமல் சோனி மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அந்த பெண்ணின் உடல் மீட்கப்பட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டு அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

இதுகுறித்து கொலை செய்யப்பட்ட பெண்ணின் கணவர் ராகுல் குப்தா கூறுகையில், “தனது மனைவி ஜிம் பயிற்சியாளருடன் உறவில் இல்லை. இது கடத்தல் வழக்கு. நாங்கள் கடத்தல் பற்றி இரண்டு முறை காவல்துறையில் கூறியுள்ளோம்” என்றார்.

பாபநாசம் பட பாணியில் பெண்ணை கொன்று உடலை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே புதைத்த ஜிம் பயிற்சியாளர் 4 மாதத்திற்கு பிறகு சிக்கியது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Latest News