Kargil Vijay Diwas 2024: ”பாகிஸ்தான் தங்கள் தோல்வியில் இருந்து எதுவும் கற்கவில்லை” – கார்கில் போர் வெற்றி தினத்தில் பிரதமர் மோடி..

கடந்த 1999ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்தது. அப்போது இந்திய வீரர்கள் அவர்களை எதிர்த்து போராடி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர். இந்த போரில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கார்கில் போரில் உயிர் பிரிந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கார்கில் போரில் கலந்துக்கொண்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

Kargil Vijay Diwas 2024: ”பாகிஸ்தான் தங்கள் தோல்வியில் இருந்து எதுவும் கற்கவில்லை” - கார்கில் போர் வெற்றி தினத்தில் பிரதமர் மோடி..

கார்கிலில் பிரதமர் மோடி வீரவணக்கம்

Published: 

26 Jul 2024 11:42 AM

கார்கில் வெற்றி தினம்: கார்கில் போர் வெற்றியின் 25-வது நினைவு தினம் இன்று நாடு முழுவதும் கொண்டாடப்படும் நிலையில் அப்போரில் இன்னுயிர் நீத்த ராணுவத்தினருக்கு பிரதமர் மோடி வீரவணக்கம் செலுத்தினார். இதற்காக பிரதமர் மோடி இன்று ஜம்மு காஷ்மீருக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். ஜம்மு காஷ்மீரின் கார்கில் மாவட்டத்தில் ட்ராஸ் பகுதியில் ராணுவ வீரர்களின் நினைவு இடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார். கடந்த 1999ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு செய்ய பாகிஸ்தான் முயற்சி செய்தது. அப்போது இந்திய வீரர்கள் அவர்களை எதிர்த்து போராடி பாகிஸ்தானின் ஆக்கிரமிப்பு முயற்சியை முறியடித்தனர். இந்த போரில் ஏராளமான இந்திய ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். கார்கில் போரில் உயிர் பிரிந்த வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் கார்கில் போரில் கலந்துக்கொண்ட வீரர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாகவும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.


கார்கில் பகுதியில் வீரவணக்கம் செலுத்திய பின், ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தையும் பிரதமர் மோடி இன்று தொடங்கி வைத்தார். இத்திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதையாக அமைக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. 15,800 அடி உயரத்தில் மலைப்பகுதியில் கட்டப்படும் சுரங்கப்பாதை இதுதான். அதனை தொடர்ந்து உரையாடிய பிரதமர் மோடி, “ கடந்த காலங்களில் பாகிஸ்தான் தனது அனைத்து முயற்சிகளிலும் தோல்வியடைந்துள்ளது. ஆனால் பாகிஸ்தான் தனது வரலாற்றில் இருந்து எதையும் கற்றுக்கொள்ளவில்லை. பயங்கரவாதம் மற்றும் பினாமி போரின் உதவியுடன் தன்னைப் பொருத்தமாக வைத்துக் கொள்ள முயற்சிக்கிறது. இந்த பயங்கரவாத ஆதரவாளர்களுக்கு அவர்களின் மோசமான நோக்கங்கள் ஒருபோதும் வெற்றியடையாது என்பதை நான் சொல்ல விரும்புகிறேன். நமது வீரர்கள் பயங்கரவாதத்தை முழு பலத்துடன் நசுக்குவார்கள், எதிரிகளுக்கு தகுந்த பதிலடி கொடுக்கப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.


மேலும், “ லடாக் அல்லது ஜம்மு-காஷ்மீர் எதுவாக இருந்தாலும், வளர்ச்சியின் வழியில் வரும் ஒவ்வொரு சவாலையும் இந்தியா முறியடிக்கும். இன்னும் சில நாட்களில், ஆகஸ்ட் 5 ஆம் தேதியுடன், 370வது சட்டப்பிரிவு நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் ஆகின்றன. உள்கட்டமைப்பு வளர்ச்சியுடன், லடாக் மற்றும் ஜம்மு-காஷ்மீரில் சுற்றுலாத் துறையும் வேகமாக வளர்ந்து வருகிறது. பல ஆண்டுகளுக்கு பிறகு, காஷ்மீரில் ஒரு திரையரங்கம் திறக்கப்பட்டுள்ளது. 35 ஆண்டுகளுக்கு பிறகு, ஸ்ரீநகரில் முதன்முறையாக தாசியா ஊர்வலம் நடத்தப்பட்டது. பூமியில் உள்ள நமது சொர்க்கம் அமைதி மற்றும் நல்லிணக்கத்தை நோக்கி வேகமாக நகர்கிறது” என பேசுயுள்ளார்.

Also Read:  குறைந்த செலவில் கோவா போலாம்.. எப்படின்னு இங்க தெரிஞ்சுக்கோங்க!

மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?
பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?