5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

தலித்களுக்கு நேர்ந்த கொடூரம்.. 98 பேருக்கு ஆயுள் தண்டனை.. கொதித்தெழுந்த நீதிமன்றம்

Karnataka Dalit Atrocity: பட்டியலினத்தவர்களை தாக்கப்பட்ட வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக மாவட்ட  நீதிமன்றத் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பட்டியலினத்தவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்ட வழக்கில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலித்களுக்கு நேர்ந்த கொடூரம்.. 98 பேருக்கு ஆயுள் தண்டனை.. கொதித்தெழுந்த நீதிமன்றம்
மாதிரிப்படம் (picture credit: Getty)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 Oct 2024 15:59 PM

பட்டியலினத்தவர்களை தாக்கப்பட்ட வழக்கில் 98 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து கர்நாடக மாவட்ட  நீதிமன்றத் தீர்ப்பு அளித்துள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டு பட்டியலினத்தவர்களின் குடிசைகள் எரிக்கப்பட்ட சம்பவம் தொடர்பான வழக்கு கர்நாடக நீதிமன்றம் நடந்த வந்த நிலையில், சுமார் 10 ஆண்டுகளுக்கு பிறகு இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள மரகும்பி கிராமத்தில் 2014ஆம் ஆண்டு ஆகஸ்ட் 28ஆம் தேதி இரு சமூகத்தினர் இடையே வன்முறை வெடித்தது. அதாவது மரகும்பி பகுதியைச் சேர்ந்த மஞ்சுநாத் என்பவர் பட்டியிலினத்தவர்களால் தாக்கப்பட்டதாக கூறியதைத் தொடர்ந்து மோதல் வெடித்தது.

தலித்களுக்கு நேர்ந்த கொடூரம்

இதனால் இரு பிரிவினரிடையே வன்முறை பற்றிய நிலையில், ஒரு பட்டியிலன குடும்பத்த்ற்கு சொந்தமான குடிசைகளை தீ வைத்து எரித்தன. மேலும், அங்கிருந்தவர்கள் சரமாரியாக தாக்கி இருந்தனர். முடிதிருத்தும் கடைகள் மற்றும் ஹோட்டல்களுக்குள் தலித்துகளுக்கு அனுமதி மறுக்கப்பட்டதால் மோதல் ஏற்பட்டது.

இதனால் பட்டியலினத்தவர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த சம்பவம் அப்போது நாட்டையே உலுக்கியது. இதனால் பெங்களூருவில் போராட்டமும் நடந்தன. பட்டியலினத்தவரின் குடிசை எரிப்பு வழக்கு மாவட்ட நீதிமன்றத்தில் நடந்தது. கடந்த 10 ஆண்டுகளாக நடந்த வந்த விசாரணையில் இன்று தீர்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

Also Read: வேரோடு சாய்ந்த மரங்கள்.. கரையை கடந்தது டானா புயல்.. ஒடிசா, மேற்கு வங்கத்தில் கனமழை!

98 பேருக்கு ஆயுள் தண்டனை

இந்த வழக்கில் 117 பேர் குற்றம் சாட்டப்பட்டிருந்த நிலையில், 16 பேர் விசாரணையின்போது உயிரிழந்தனர். இந்த நிலையில், இந்த வழக்கில் கொப்பளம் முதன்மை மாவட்ட மற்றும் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பு அளித்துள்ளது.

அதில், தலித்துகளின் குடிசைகளை எரித்ததற்காக 98 நபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்தது நீதிமன்றம் தீர்ப்பளித்தது. மேலும் குற்றம் சாட்டப்பட்ட ஒவ்வொருவருக்கும் தலா 5,000 ரூபாய் அபராதம் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

மேலும், பழங்குடி சமூகத்தைச் சேர்ந்த 3 பேருக்கு 5 ஆண்டுகள் கடுங்காவல் சிறைத் தண்டனையும் ரூ.2000 அபராதமும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்தது. சுமார் பத்து ஆண்டுகளுக்கு பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. சாதி தொடர்பான வன்முறை மற்றும் பாகுபாடுகளுக்கு எதிராக வலுவான முன்னுதாரணத்தை நோக்கமாகக் கொண்டு தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

தலித்களுக்கு எதிராக தொடரும் கொடூரம்

தொழில்நுட்ப ரீதியாக நாடு எவ்வளவு வளர்ந்தாலும், சாதிய வன்முறைகள், பாகுபாடுகள் இன்றளவும் தொடர்கிறது. குறிப்பாக நாட்டின் பட்டியலினத்தவர்கள், பழங்குடியினர்களுக்கு எதிரான வன்முறை சம்பவங்கள் தொடர்ந்து நடந்து வருகிறது. இதனை தடுக்க மத்திய, மாநில அரசுகளும் தொடர்ந்து நடவடிக்கை  எடுத்து வந்தாலும் நின்றபாடில்லை.

Also Read: இந்தியாவின் அடுத்த தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கன்னா நியமனம்.. மத்திய அரசு அறிவிப்பு!

தேசிய பட்டியலினத்தவர் ஆணையத்தில் சுமார் 4 ஆண்டுகளில் மட்டும 47,000 புகார் பதிவாகி உள்ளது. அந்த அளவுக்கு பட்டியலினத்தவர்களுக்கு எதிரான கொடூரங்கள் அரங்கேறி வருகிறது.    பட்டியலின மற்றும் பழங்குடியின சமூகத்தினருக்கு  எதிரான வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் பதியப்பட்ட வழக்குகள் குறித்து சமீபத்தில் மத்திய அரசு அறிவிப்பை வெளியிட்டது.

அதில்,  கடந்த 2022ஆம் ஆண்டு இந்த சட்டத்தின் கீழ் மொத்தம் 51,656 வழக்குகள் பதியப்பட்டன.  அவற்றில் 12,287 வழக்குகளுடன் உத்தர பிரதேசம் முதல் இடத்தில் உள்ளது. இதற்கு அடுத்ததாக, ராஜஸ்தானில் 8,651 வழக்குகளும், மத்திய பிரதேசத்தில் 7,732 வழக்குகளும்,  பீகாரில் 6,799 வழக்குகளும், மகாராஷ்டிராவில் 2,706 வழக்குகளும் பதிவாகி உள்ளதாக கூறப்படுகிறது.  இந்த 6 மாநிலங்களில் சேர்த்து மொத்தம் 81 சதவீத வழக்குகள் பதியப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News