Watch Video: திருமணம் செய்ய மணப்பெண்ணை தேடி தாருங்கள்.. மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்த இளைஞர்..!
Karnataka: கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஜனஸ்பந்தனா பகுதியில் மாவட்ட ஆட்சியர் நளினி அதுல் தலைமையில் குறைத்தீர்ப்பு முகாம் நடைபெற்றது. சங்கப்பா என்ற விவசாயி மாவட்ட ஆட்சியர் நளினி அதுலை அணுகி தனது மனப்பூர்வமான வேண்டுகோளுடன், கடந்த 10 ஆண்டுகளாக தான் மணப்பெண்ணை தேடி வருவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் சம்மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்தார்.
கர்நாடகா: கர்நாடகா மாநிலத்தில் உள்ளூர் விவசாயி சங்கப்பா எனபர் தனது வேண்டுகோளுடன் மனு ஒன்றை மாவட்ட ஆட்சியர் நளினி அதுலை அணுகினார், அதில் அவர் கடந்த 10 ஆண்டுகளாக மணப்பெண்ணைத் தேடி வருவதாகவும், அவரை திருமணம் செய்ய யாரும் ஒப்புக் கொள்ளவில்லை என்றும் குறிப்பிட்டிருந்தார். குறை தீர்ப்பு நிகழ்வில் இந்த சம்பவம் நடந்துள்ளது மக்களை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. கர்நாடகாவின் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஜனஸ்பந்தனா பொதுக் குறை தீர்க்கும் முகாமில், உள்ளூர் விவசாயி ஒருவர் மணப்பெண்ணைக் கண்டுபிடிக்க உதவுமாறு வழக்கத்திற்கு மாறான மனு அளித்துள்ளார் சங்கப்பா என்ற விவசாயி இந்த மனுவை அளித்துள்ளார்.
A poignant reminder of changing times & persisting problem in most districts of #Karnataka. Farmers are unable to find suitable bride! Sangappa in Kanakagiri of Koppal asked the DC @Nalini_Atul_ to help him find a bride! @TOIBengaluru #Matrimony #Youth pic.twitter.com/pjlwGrNN8c
— Niranjan Kaggere (@nkaggere) June 26, 2024
கர்நாடகா மாநிலம் கொப்பல் மாவட்டத்தில் உள்ள ஜனஸ்பந்தனா பகுதியில் மாவட்ட ஆட்சியர் நளினி அதுல் தலைமையில் குறைத்தீர்ப்பு முகாம் நடைபெற்றது. அப்பகுதி மக்கள் பலரும் தங்கள் பகுதிகளில் இருக்கும் குறையை சரி செய்யக்கோரி மனு அளித்தனர். அப்போது யாரும் எதிர்ப்பார்க்காத வகையில் ஒருவர் வித்தியாசமான மனு ஒன்றை அளித்தார். சங்கப்பா என்ற விவசாயி மாவட்ட ஆட்சியர் நளினி அதுலை அணுகி தனது மனப்பூர்வமான வேண்டுகோளுடன், கடந்த 10 ஆண்டுகளாக தான் மணப்பெண்ணை தேடி வருவதாகவும், தன்னை திருமணம் செய்து கொள்ள யாரும் சம்மதிக்கவில்லை என்றும் குறிப்பிட்டு மனு ஒன்றை அளித்தார்.
Also Read: தொடரும் கனமழை.. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?
இந்த வீடியோ காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில், சங்கப்பா மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்ததும், அதனை மாவட்ட ஆட்சியர் படித்ததும் இடம்பெற்றுள்ளது. அத்துடன் சங்கப்பா மைக்கில் மனுவில் இருக்கும் விவரங்களை குறிப்பிட்டு உதவி கோரியுள்ளார், வித்தியாசமான மனுவை பெற்ற மாவட்ட ஆட்சியர் இதனை கேட்டதும் சிரித்தப்படி பதிலளித்தார். இந்த வீடியோ தற்போது பலரால் இணையத்தில் பகிரப்பட்டி வருகிறது. திருமணத்திற்கான மணப்பெண்களின் எதிர்ப்பார்ப்பு அதிகமாக இருக்கும் நிலையில், இன்றைய இளைஞர்களுக்கு பெண் தேடுவது சவாலாக இருப்பதாக கருத்துக்கள் தெரிவிக்கின்றனர். இதனால் பல இளைஞர்கள் குறிப்பிட வயது கடந்தும் திருமணம் ஆகாமல் இருப்பதாக மக்கள் குறிப்பிடுகின்றனர்.
Also Read: சாதிவாரி கணக்கெடுப்பு.. பிரதமர் மோடிக்கு பறந்த முதல்வர் ஸ்டாலினின் கடிதம்!