5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

மருத்துவமனையில் நர்ஸுக்கு அரிவாள் வெட்டு.. நடுங்க வைக்கும் கொடூரம்!

Crime News : கர்நாடக மாநிலத்தில் செவிலியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய மறுத்த செவிலியரை, மருத்துவமனைக்குள் புகுந்து சரமாரியாக இளைஞர் வெட்டியுள்ளார்.

மருத்துவமனையில் நர்ஸுக்கு அரிவாள் வெட்டு.. நடுங்க வைக்கும் கொடூரம்!
மாதிரிப்படம்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Nov 2024 17:13 PM

கர்நாடக மாநிலத்தில் செவிலியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருமணம் செய்ய மறுத்த செவிலியரை மருத்துவமனைக்குள் புகுந்து சரமாரியாக இளைஞர் வெட்டியுள்ளார். அரிவாளால் வெட்ட வந்த இளைஞருடன் தைரியமாக போராடி செவிலியர் உயிர்பிழைத்துள்ளார். கர்நாடக மாநிலம் பெலகாவி பகுதியைச் சேர்ந்தவர் செவிலியர். இவர் அப்பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையில் பணிபுரிந்து வருகிறார். இவர் தங்கியிருக்கும் காலனியில் பிரகாஷ் ஜாதவ் என்ற இளைஞரும் வசித்து வருகிறார். இவருக்கு செவிலியரை காதலித்து வந்துள்ளார்.

மருத்துவமனையில் நர்ஸுக்கு அரிவாள் வெட்டு

ஒருதலையாக காதலித்து வந்துள்ளதாக தெரிகிறது. எனவே, இவரை திருமணம் செய்ய விரும்பினார். அதற்காக செவிலியர் வீட்டிற்கு சென்று அவரது பெற்றோரை சந்தித்து தனக்கு பெண் தரும்படி கேட்டிருக்கிறார்.

அதற்கு அவர்கள் மறுப்பு தெரிவித்தனர். பின்னர், செவிலியரை சந்தித்து தன்னை திருமணம் செய்து கொள்ளும்படி கேட்டிருக்கிறார். அதற்கு அவரும் மறுத்துவிட்டார். இருப்பினும், இளைஞர் பிரகாஷ் ஜாதவ் விடவில்லை. செவிலியரை தொடர்ந்து வற்புறுத்தி வந்திருக்கிறார்.

இந்த நிலையில், நேற்று செவிலியர் பணிபுரியும் மருத்துவமனைக்கு சென்றிருக்கிறார். அங்கு செவிலியரை சந்திக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார். அதைத் தொடர்ந்து வரவேற்பு அறைக்கு செவிலியர் வந்திருக்கிறார். அங்கும் அவரிடம் தன்னை திருமணம் செய்து கொளும்படி வற்புறுத்தியிருக்கிறார்.

Also Read : மசூதி ஆய்வை உடனே நிறுத்துங்க.. அமித் ஷாவிடம் வலியுறுத்திய திருமாவளவன்!

திருமணம் செய்ய மறுத்ததால் ஆத்திரம்

இதனால் இவர்களுக்கு இடையே அங்கு வாக்குவாதம் ஏற்பட்டிருக்கிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ஏற்கனவே மறைத்து எடுத்து வந்த அரிவாளால் சரமாரியாக வெட்டினார்.  அப்போது, அரிவாளை பிடித்து இளைஞர் பிரகாஷ் ஜாதவுடன் மிக துணிச்சலாக போராடினார். இதனால் மருத்துவமனையில் பதற்றமும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைப் பார்த்த நோயாளிகள் மற்றும் மருத்துவமனை ஊழியர்கள் உயிர் பிழைத்தால் போதும் என அங்கிருந்து ஓடினர். இதற்கிடையே, மருத்துவமனை ஊழியர்கள் காடே பசார் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்து போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். இதை அறிந்த பிரகாஷ் ஜாதவ் அங்கிருந்து தப்பி ஓடினார்.

இதன்பின், லேசான காயங்களுடன் செவிலியர் உயிர் தப்பினார். அவருக்கு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இதற்கிடையில், தலைமறைவாக இருந்து பிரகாஷ் ஜாதவை கைது செய்தனர்.

இதற்கிடையில், அரிவாளால் வெட்டப்பட்டும் தன் உயிரைக் காப்பாற்ற தைரியத்துடனும் துணிச்சலுடனும் செவிலியர் போராடிய வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. திருமணம் செய்ய மறுத்த செவிலியர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Also Read : மீண்டும் கொடூரம்.. செவிலியரின் அந்தரங்க உறுப்பில் மிளகாய் பொடி தூவி பாலியல் வன்கொடுமை!

நாட்டில் மருத்துவர்கள், செவிலியர்களுக்கு எதிராக நடக்கும் தாக்குதல் சம்பங்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கொல்கத்தாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டது அதிர்வலைகளை ஏற்படுத்தியது.  இதைத் தொடர்ந்து பல்வேறு மாநிலங்களிலும் செவிலியர்கள், மருத்துவர்களுக்கு எதிராக தாக்குதல் சம்பவம் அரங்கேறி வருகின்றன.

அண்மையில் சென்னையில் உள்ள கலைஞர் நூற்றாண்டு  மருத்துவமனையில் மருத்துவரை இளைஞர் ஒருவர் 7 முறை கத்தியால் குத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Latest News