மின்னணு இயந்திரம், அதானி விவகாரம்.. கார்த்தி ப சிதம்பரம் ஒபன் டாக்!

Karti Chidambaram press meet in Delhi: மின்னணு இயந்திரத்தில் முறைகேடு செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு நாடாளுமன்ற வளாகத்தில் காங்கிரஸ் எம்.பி. கார்த்தி ப சிதம்பரம் பதிலளித்தார்.

மின்னணு இயந்திரம், அதானி விவகாரம்.. கார்த்தி ப சிதம்பரம் ஒபன் டாக்!

காங்கிரஸ் எம்பி கார்த்தி ப சிதம்பரம் (படம்: ட்விட்டர் எக்ஸ்)

Published: 

25 Nov 2024 13:54 PM

நாடாளுமன்றத்தில் குளிர்கால கூட்டத் தொடர் இன்று (நவ.25, 2024) தொடங்கிய நிலையில் காங்கிரஸ் எம்.பி கார்த்தி ப சிதம்பரம் இதில் கலந்துகொண்டார். அப்போது பேட்டியளித்த அவர், “மின்னணு இயந்திரங்களில் முறைகேடு செய்ய முடியுமா? என்ற கேள்விக்கு பதிலளித்தார். இது குறித்து மாறுபாடு கருத்து கொண்டவர்கள் இது குறித்து விளக்க வேண்டும்” என்றார். தொடர்ந்து பேசிய அவர், “எங்கள் கட்சிக்குள்ளேயே சில மாறுபட்ட கருத்துகள் உள்ளன. இதனை நான் அறிவேன். ஆனால் நான் அவர்களிடம் இது பற்றி பேசியதில்லை. மின்னணு இயந்திரங்களில் என்ன பிரச்னை உள்ளன” என்றார்.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர்

ஹரியனா சட்டமன்ற தேர்தலை தொடர்ந்து மகாராஷ்டிராவில் பா.ஜ.க அபரிதமாக வெற்றியை பெற்றுள்ளது. எனினும், மற்றொரு மாநிலமான ஜார்க்கண்டில் அக்கட்சி தோல்வியை தழுவியது. பா.ஜ.க.வால் அங்கு எதிர்பார்த்த வெற்றியை பெற முடியவில்லை.
காங்கிரஸ், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி கூட்டணி மீண்டும் வெற்றி பெற்று ஆட்சியை பிடித்துள்ளது. இந்நிலையில், இன்று குளிர்கால பாராளுமன்ற கூட்டத்தொடர் தொடங்கியுள்ளது.

இதையும் படிங்க :  நாடாளுமன்ற கூட்டத்தொடர்.. எதிர்க்கட்சிகளின் திட்டம் என்ன?

காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் திட்டம்

இதற்கிடையில், அதானி மீதான அமெரிக்காவின் குற்றச்சாட்டுகள், மணிப்பூர் பிரச்னை உள்ளிட்டவை பாராளுமன்றத்தில் எதிரொலிக்கின்றன. இந்தப் பிரச்னையை கையில் எடுத்து எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. கார்த்தி ப. சிதம்பரத்திடம் செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதிலளித்துள்ளார். மேலும், “மின்னணு இயந்திரங்களால் தாம் எவ்வித சிக்கலையும் அனுபவிக்கவில்லை என்றும் மின்னணு இயந்திர வாக்குகள் மூலமாகதான் தாம் தேர்ந்தெடுக்கப்பட்டதாகவும்” கூறினார்.

அதானி விவகாரம்

தொடர்ந்து, அதானி விவகாரம் குறித்து பேசிய கார்த்தி ப சிதம்பரம், “சபாநாயகர் பதவியில் தொடர்ந்து நீடிப்பவர், ஒத்திவைப்பு தீர்மானத்தை ஒருபோதும் அனுமதிக்க மாட்டார் என்பது கடந்த மக்களவையில் எனக்கு ஏற்பட்ட அனுபவம்.

அதானி விவகாரத்தில் பாராளுமன்ற கூட்டுக் குழு விசாரணை கண்டிப்பாக தேவை. மக்கள் தீர்ப்பைப் பொறுத்த வரையில் வெவ்வேறு மாநிலங்களில் வெவ்வேறு முடிவுகள் வந்துள்ளன. ஜார்க்கண்டில் இந்தியக் கூட்டணியின் அற்புதமான வெற்றியைப் பற்றி பிரதமர் என்ன சொல்கிறார்? கர்நாடகாவில் மூன்று இடைத்தேர்தல்களில் காங்கிரஸ் கட்சி வெற்றி பெற்றதற்கு பிரதமர் என்ன பதில் சொல்கிறார்?” எனக் கேள்வியெழுப்பினார்.

மின்னணு இயந்திரங்களில் பிரச்னையா?

மகாராஷ்டிரா தேர்தல் விவகாரத்தில் எதிர்க்கட்சிகள் இடையே மாறுபட்ட கருத்துகள் நிலவுகின்றன. பா.ஜ.க.வுக்கு எதிரான அதிருப்தி வாக்குகளை ஒன்றிணைக்க முடியவில்லை எனவும் கூறுகின்றனர்.
இதற்கிடையில் வழக்கம் போல் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் மீதும் எதிர்க்கட்சி பிரமுகர்கள் குற்றஞ்சாட்டியுள்ளனர். இந்த நிலையில் கார்த்தி ப சிதம்பரம் இவ்வாறு கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க :  மகாராஷ்டிராவில் புதிய சலசலப்பு..யார் அடுத்த முதல்வர்? பட்னாவிஸ் சூடான பதில்!

தோல்வியில் இருந்து குழந்தைகள் கற்றுக்கொள்ளும் பாடம்!
பனிக்காலத்தில் நாம் சுற்றுலா செல்ல வேண்டிய இடங்கள்!
காலை அல்லது இரவு? முட்டை எப்போது சாப்பிடலாம்?
தினமும் ஆரஞ்சு பழம் சாப்பிடலாமா?