5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

”உங்க கருத்து தேவையில்ல” ஆதரவளித்த பாக். முன்னாள் அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி!

பாகிஸ்தான் அரசியல்வாதியான பாவத் சவுத்ரி இந்திய தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்னைகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள்.உங்கள் கருத்து தேவையில்லை. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள். தேர்தல்கள் எங்களின் உள்நாட்டு விவகாரம். பயங்கரவாதத்தின் பெரிய ஆதரவாளர்கள் தலையீட்டை இந்தியா பொறுத்துக் கொள்ளாது" எனக் கெஜ்ரிவால் கூறியுள்ளார்.

”உங்க கருத்து தேவையில்ல” ஆதரவளித்த பாக். முன்னாள் அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி!
அரவிந்த் கெஜ்ரிவால்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 May 2024 15:58 PM

பாக். அமைச்சருக்கு கெஜ்ரிவால் பதிலடி: நாட்டில் 18 வது மக்களவை தேர்தல் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது.  ஐந்து கட்ட தேர்தல்கள் முடிந்த நிலையில், இன்று ஆறாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. டெல்லி, பீகார், உத்தர பிரதேசம் உள்ளிட்ட  மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளுக்கு இன்று காலை 7 மணி முதல் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த வாக்குப்பதிவு மாலை 6 மணிக்கு முடிவடைகிறது. இதற்கு அரசியில் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இந்த நிலையில், டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலும் இன்று வாக்களித்தார். சிவில் லைன்ஸ் பகுதியில் உள்ள வாக்குச்சாவடியில் இன்று தனது குடும்பத்தோடு கெஜ்ரிவால் வாக்களித்தார். அவருடன் அவரது மனைவி சுனிதா கெஜ்ரிவால், இரண்டு குழந்தைகள் மற்றும் தந்தை கோவிந்த் ராம் கெஜ்ரிவால் ஆகியோர் வாக்களித்தனர்.

இதன்பின், தன் குடும்பத்துடன் வாக்களித்த புகைப்படத்தை கெஜ்ரிவால் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டிருந்தார். அதில், “கோடை வெயிலை தாங்கிக் கொண்டு மக்கள் வெளியே சென்று வாக்களிக்க வேண்டும். நான் இன்று என் தந்தை, மனைவி மற்றும் குழந்தைகளுடன் வாக்களித்தேன். என் அம்மாவுக்கு உடல்நிலை சரியில்லை. இதனால் அவரால் வாக்களிக்க முடியவில்லை. சர்வாதிகாரம், விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றால் மக்கள் சிரமப்படுகின்றனர். சர்வாதிகாரத்திற்கு எதிராக மக்கள் ஓட்டுப்போட வேண்டும். நானும், சர்வாதிகாரம், விலைவாசி, வேலையில்லா திண்டாட்டம் ஆகியவற்றிருக்கு எதிராக வாக்களித்தேன்” என்று குறிப்பிட்டிருந்தார்.

Also Read: 6ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. 58 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

“உங்கள் கருத்து தேவையில்லை”

இவரது பதிவுக்கு ஆதரவாக பாகிஸ்தான் முன்னாள் அமைச்சர் பாவத் சவுத்ரி கருத்து தெரிவித்தார். அதாவது, “பிரிவினைவாதம், வெறுப்பு பேச்சுகளை அமைதியும் சமூக நல்லிணக்கமும் தோற்கடிக்கட்டும்” என்று கெஜ்ரிவாலுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார். இதற்கு பதிலடி கொடுத்து கெஜ்ரிவால் வெளியிட்ட பதிவில், “பாகிஸ்தான் அரசியல்வாதியான பாவத் சவுத்ரி இந்திய தேர்தல்கள் குறித்து கருத்து தெரிவிப்பதைத் தவிர்க்க வேண்டும். நானும் எனது நாட்டு மக்களும் எங்கள் பிரச்னைகளைக் கையாளும் திறன் கொண்டவர்கள்.


உங்கள் கருத்து தேவையில்லை. பாகிஸ்தானில் தற்போது நிலைமை மிகவும் மோசமாக உள்ளது. நீங்கள் உங்கள் நாட்டைக் கவனித்துக் கொள்ளுங்கள். தேர்தல்கள் எங்களின் உள்நாட்டு விவகாரம். பயங்கரவாதத்தின் பெரிய ஆதரவாளர்கள் தலையீட்டை இந்தியா பொறுத்துக் கொள்ளாது” எனக் கூறியுள்ளார்.

Also Read: ஹோட்டலுக்கு விசிட் அடித்த மோடி.. பில் கட்டாத பாஜக.. என்னாச்சு?

Latest News