சுரேஷ் கோபி வெற்றியால் வெடித்த பிரச்னை.. கேரள காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் எடுத்த ஷாக் முடிவு
K Muraleedharan: பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் ஏமாற்றம் அடைந்தனர். சங் பரிவார் சக்திகளுக்கு கேரளாவில் கதவுகளை மாவட்ட காங்கிரஸ் தலைமை திறந்து விட்டதாக குற்றம்சாட்டியதுடன், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.
இனி தேர்தலில் போட்டியிடப்போவதில்லை என்று மக்களவை தேர்தலில் தோல்வியுற்ற கேரள மாநில காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் அறிவித்துள்ளது அம்மாநிலத்தினரிடையே அதிர்வை ஏற்படுத்தியுள்ளது. வரலாற்றில் முதல்முறையாக கேரளாவில் ஒரு மக்களவை தொகுதியில் பாஜக வெற்றி பெற்றுள்ளது. திருச்சூர் தொகுதியில் போட்டியிட்ட பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி வாகை சூடினார். இவர் 4,00,553 வாக்குகள் பெற்று வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் போட்டியிட்ட வி.எஸ்.சுனில் குமார் இரண்டாம் இடம் பிடித்துள்ளார். அவருக்கு 3,27,405 வாக்குகள் கிடைத்தது. காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட கே.முரளிதரனுக்கு 3,19,380 வாக்குகள் கிடைத்தது. இதுவரை கேரளாவில் மக்களவைத் தேர்தலில் பாஜக வெற்றி பெற்றதில்லை. சுரேஷ் கோபி மூலம் கேரளாவில் பாஜக தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது.
திருச்சூர் தொகுதியில் கடந்த ஆண்டு தேர்தலில் காங்கிரஸ் வெற்றி பெற்றது. கடந்த 2014ஆம் ஆண்டு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வெற்றி பெற்றது. கடந்த 25 ஆண்டுகளாக காங்கிரஸ் மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் வெற்றி பெற்றும் வரும் நிலையில், இந்த தேர்தல் பாஜக வெற்றியை பதிவு செய்துள்ளது.
Also read… தமிழகத்தில் இன்றுடன் முடிவுக்கு வருகிறது தேர்தல் நடத்தை விதிகள்
பா.ஜ.க. வேட்பாளர் வெற்றி பெற்றதால் காங்கிரஸ் கட்சியினர் கடும் ஏமாற்றம் அடைந்தனர். சங் பரிவார் சக்திகளுக்கு கேரளாவில் கதவுகளை மாவட்ட காங்கிரஸ் தலைமை திறந்து விட்டதாக குற்றம்சாட்டியதுடன், தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று தலைமை பொறுப்பில் உள்ளவர்கள் ராஜினாமா செய்யவேண்டும் என வலியுறுத்தினர்.
இந்நிலையில் தேர்தலில் இனிமேல் போட்டியிட மாட்டேன் என திருச்சூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் முரளிதரன் தடாலடியாக அறிவித்துள்ளார். அந்தத் தொகுதியில் பாஜக வேட்பாளரும், நடிகருமான சுரேஷ் கோபி வெற்றி பெற்றார். முரளிதரன் 3-ம் இடத்திற்கு தள்ளப்பட்டார். இதனால் காங்கிரஸ் கட்சிக்குள் பூகம்பம் வெடித்த நிலையில் மூத்த நிர்வாகிகள் பதவி விலக வேண்டும் என கேரள இளைஞர் காங்கிரஸார் போர்க்கொடி தூக்கியுள்ளனர்.