Kerala Election Exit Poll 2024: கேரளா மக்களவைத் தொகுதி முடிவுகள்.. கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்! - Tamil News | | TV9 Tamil

Kerala Election Exit Poll 2024: கேரளா மக்களவைத் தொகுதி முடிவுகள்.. கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

Updated On: 

01 Jun 2024 20:19 PM

Lok sabha Elections Exit Poll 2024 Results : டிவி 9 கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ள நிலையில், கேரளாவில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெற்றி பெற வாய்ப்புள்ளது என்பதை பார்ப்போம். கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 16 இடங்களையும், இடதுசாரி முன்னணி 3 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 13 இடங்களையும், பாஜக ஒரு இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சிபிஎம் இரண்டு தொகுதிகளையும், சிபிஐ ஒரு தொகுதிகளையும், ஐயூஎம்எல் இரண்டு தொகுதிகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

Kerala Election Exit Poll 2024: கேரளா மக்களவைத் தொகுதி முடிவுகள்.. கருத்துக்கணிப்பு சொல்வது இதுதான்!

கேரளா கருத்துக் கணிப்பு முடிவுகள்

Follow Us On

கேரளா கருத்துக்கணிப்பு முடிவுகள்: கடந்த 2 மாதங்களாக நடந்து வந்த மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைந்தது. ஏழு கட்டங்களாக நடந்த தேர்தலில் பதிவான வாக்குகள் ஜூன் 1ஆம் தேதி எண்ணப்பட்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படுகிறது. இதற்கு முன்பு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் வெளியாகி உள்ளன. டிவி 9 செய்தி நிறுவனம் நடத்திய கருத்துக் கணிப்புகள் வெளியாகி உள்ளன. அதில் கேரளாவில் எந்த கட்சி எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்பதை பார்ப்போம். கேரளாவில் மார்க்சிஸ்ட் தலைமையிலான இடது ஜனநாயக முன்னணி கூட்டணியில் இந்திய கம்யூனிஸ்ட், கேரளா காங்கிரஸ் (மாணி), மதச்சார்பற்ற ஜனதா தளம், தேசியவாத காங்கிரஸ், ராஷ்ட்ரிய ஜனதா தளம், கேரளா காங்கிரஸ், இந்திய தேசிய லீக், மதச்சார்பற்ற காங்கிரஸ், ஐனஅதிபத்ய கேரளா காங்கிரஸ் ஆகிய கட்சிகள் உள்ளன.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக கூட்டணியில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரளா காங்கிரஸ், கேரளா காங்கிரஸ் (ஜேகப்), கேரளா ஜனநாயகக் கூட்டணி, கம்யூனிஸ்ட் மார்க்சிஸ்ட் கட்சி, அகில் இந்திய ஃபார்வேர்டு பிளாக் கட்சிகள் இடம்பெற்றிருந்தன. மேலும், பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியும் களத்தில் உள்ளது. இந்த நிலையில், டிவி  9 வெளியிட்ட கருத்துக்கணிப்பில் கேரளாவில் உள்ள 20 தொகுதிகளில் பாஜக ஒரு இடத்தையும், காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 16 இடங்களையும், இடதுசாரி முன்னணி 3 இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 13 இடங்களையும், பாஜக ஒரு இடங்களையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், சிபிஎம் இரண்டு தொகுதிகளையும், சிபிஐ ஒரு தொகுதிகளையும், ஐயூஎம்எல் இரண்டு தொகுதிகளையும் வெல்லும் என்று கணிக்கப்பட்டுள்ளது. பாஜக 23.03 சதவீத வாக்குகளையும், I.N.D.I.A கூட்டணி 59.36 சதவீத வாக்குகளையும் பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மற்ற கட்சிகள் 17.61 சதவீத வாக்குகளை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து இரண்டாவது முறையாக வயநாடு தொகுதியில் வெற்றி பெறுகிறார். 2019 ஆம் ஆண்டில், கேரளாவில் பெரும்பாலான இடங்களை காங்கிரஸ் கைப்பற்றியது, அதே நேரத்தில் பாஜக ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை. இந்த முறை பாஜக ஒரு இடத்தை பிடிக்கும் என்று கருத்துக் கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: தமிழ்நாட்டில் சிக்ஸர் அடித்த இந்தியா கூட்டணி? அதிமுகவை பின்னுக்கு தள்ளியதா பாஜக?

 

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version