Rain Updates : அடுத்த 24 மணி நேரத்தில் 20செமீ மழை பெய்யும்.. வெளுக்கும் மழையால் திண்டாடும் கேரளா - Tamil News | | TV9 Tamil

Rain Updates : அடுத்த 24 மணி நேரத்தில் 20செமீ மழை பெய்யும்.. வெளுக்கும் மழையால் திண்டாடும் கேரளா

Updated On: 

20 Jul 2024 09:56 AM

Kerala Weather: கேரள மாநிலத்தில் பொய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.  கேளராவின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

Rain Updates : அடுத்த 24 மணி நேரத்தில் 20செமீ மழை பெய்யும்.. வெளுக்கும் மழையால் திண்டாடும் கேரளா

கேரளா மழை

Follow Us On

கேரளாவுக்கு ரெட் அலர்ட்:  கேரள மாநிலத்தில் பொய்து வரும் தொடர் கனமழையால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் கடந்த சில நாட்களாக தென்மேற்கு பருவமழை தீவிரம் காட்டி வருகிறது.  கேளராவின் பல மாவட்டங்களில் தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இடுக்கி,எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணுார், காசர்கோடு ஆகிய மாவட்டங்களில் மழை வெளுத்து வாங்குவதால் மக்களின் இயல்பு வாழ்க்கை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. பல மாவட்டங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. இதில், 29 வீடுகள் சேதமடைந்தன. 700 பேர், பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டு உள்ளனர். அவர்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையே, வயநாடு, கண்ணுார் ஆகிய மாவட்டங்களில் மிக பலத்த மழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில், அடுத்த 24 மணி நேரத்தில், 20 செ.மீ., மழை கொட்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Also Read: சென்னையில் இன்று பவர்கட்.. ஏரியா வைஸ் லிஸ்ட் இதோ..

மேலும், மாநிலத்தின் மற்ற எட்டு மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள 6 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஜூலை 13 முதல் 19 வரை 150 மிமீ மழை பெய்ய வேண்டும். ஆனால், ஜூலை 13 முதல் 19 வரை 315.5 மிமீ மழை பதிவாகி உள்னது. வழக்கத்தை விட 110 சதவீதம் மழை பெய்துள்ளது. கண்ணூரில் 171 சதவீதமும், கோழிகோடில் 132 சதவீதமும், வயநாட்டில் 95 சதவீதமும் மழை பெய்துள்ளது.


கேரள கடற்கரையில் இன்று இரவு 11.30 மணி வரை 2.5 முதல் 3.4 மீட்டர் வரை உயரமான அலை எழ வாய்ப்புள்ளது. தமிழக கடலோரப் பகுதிகளில் இன்று இரவு 11.30 மணி வரை கடல் சீற்றத்துடன் காணப்படும். இதனால்,  மீனவர்கள் மற்றும் கரையோர மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்குமாறு அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதிகாரிகளின் அறிவுறுத்தல்களின்படி ஆபத்தான பகுதிகளில் இருந்து மக்கள் வெளியேற தயாராக இருக்க வேண்டும். மீன்பிடிக்க பயன்படுத்தப்படும் படகுகள் மற்றும் படகுகளை துறைமுகத்தில் கட்டி வைக்க வேண்டும்.  மீன்பிடி உபகரணங்களின் பாதுகாப்பை உறுதி செய்ய  வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

Also Read: அமோனியா வாயு கசிவு… 30 பேருக்கு மூச்சுதிணறல், மயக்கம்.. தூத்துக்குடியில் பதற்றம்!

இந்த உணவுகளை ஒருப்போதும் சூடு படுத்தி சாப்பிடக்கூடாது..!
தினமும் காலையில் கறிவேப்பிலை சாப்பிடுவதால் என்ன நடக்கும் தெரியுமா?
உடலுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை வாரி வழங்கும் பூண்டு..!
நுரையீரலை பாதுகாக்க உதவும் உணவுகள்!
Exit mobile version