Weather Update : கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. தமிழ்நாடு நிலைமை என்ன? - Tamil News | | TV9 Tamil

Weather Update : கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. தமிழ்நாடு நிலைமை என்ன?

Published: 

31 May 2024 15:25 PM

Rain Update : மத்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தபடி கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதைதொடர்ந்து ஜூன் 2-ந்தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது. பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு மத்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்ததோடு, வரும் நாட்களில் சூறாவளி காற்று இடி-மின்னலோடு கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Weather Update : கேரளாவில் வெளுத்து வாங்கும் கனமழை.. தமிழ்நாடு நிலைமை என்ன?

மழை

Follow Us On

வானிலை அப்டேட்: தென்மேற்கு பருவமழை கேரளாவில் பெரும்பாலான பகுதிகளிலும், தென்தமிழத்தில் சில பகுதிகளிலும் நேற்று துவங்கியது. இதன் காரணமாக ஜூன் 1,2ஆம் தேதிகளில் தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். கிருஷ்ணகிரி, தர்மபுரி, திருப்பத்தூர், சேலம், ஈரோடு, நீலகிரி, கோயம்புத்தூர் மாவட்ட மலைப்பகுதிகள், திருச்சி மற்றும் நாமக்கல் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்யவாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டது. தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் என்ற நிலையில்,நேற்று முன்தினம் இரவு மத்திய கேரளாவிலும் தென் கேரளாவிலும் கனமழை பெய்தது. கேரளாவில் கோடை காலம் பொதுவாக மார்ச் மாதம் தொடங்கி மே மாதம் வரை நீடிக்கும். இந்த ஆண்டு கோடையில் வெயிலின் தாக்கம் சற்று அதிகமாக இருந்தது. பல இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெப்பம் பதிவானது. வெப்பம் உச்சத்தில் இருக்கக்கூடிய கத்திரி வெயில் காலத்தில் கோடை மழை பெய்ததால், கேரளாவில் கடந்த 3 வாரங்களுக்கு மேலாக வெப்பம் தணிந்து குளிரான சீதோஷ்ண நிலை காணப்பட்டது.

இந்நிலையில் மத்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே அறிவித்தபடி கேரளாவில் தென்மேற்கு பருவமழை நேற்று தொடங்கியது. இதைதொடர்ந்து ஜூன் 2-ந்தேதி வரை கேரளாவில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக அறிவித்து உள்ளது. பருவ மழை தொடங்கியதன் அறிகுறியாக நேற்று திருவனந்தபுரம், கொல்லம், பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 11 மாவட்டங்களுக்கு மத்திய வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்ததோடு, வரும் நாட்களில் சூறாவளி காற்று இடி-மின்னலோடு கூடிய கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : தூத்துக்குடியில் ஆளில்லா கிராமம்… இருந்த ஒரேயொரு முதியவரும் இறந்ததால் காலியான ஊர்!

மேலும், இன்று (வெள்ளிக்கிழமை) பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 9 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும், நாளை(சனிக்கிழமை) பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் இதேபோல் நாளை மறுநாள்(ஞாயிற்றுக்கிழமை) பத்தனம்திட்டா, ஆலப்புழை, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு, கண்ணூர், காசர்கோடு ஆகிய 12 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது. இந்த நாட்களில் 24 மணிநேரத்தில் 64.5 மி.மீ முதல் 115.5 மி.மீ மழை பெய்யக்கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

அதே வேளையில் தென்மேற்கு பருவ மழையின் தொடக்கம் என்ற நிலையில், நேற்று முன்தினம் இரவு மத்திய கேரளாவிலும், தென் கேரளாவிலும், கனமழை பெய்தது. திருவனந்தபுரம், எர்ணாகுளத்தில் சாலையில் மழைநீர் காட்டாற்று வெள்ளம் போல் பெருக்கெடுத்து ஓடியது. குறிப்பாக எர்ணாகுளத்தில் கடந்த 38 மணி நேரத்தில் 300 மி.மீ மழை பதிவானது. இது இந்த சீசனில் அதிக மழைக்கு வாய்ப்பு இருப்பதற்கான அறிகுறி என கருதப்படுகிறது

இந்த வாரம் ஓடிடியில் வரிசைக்கட்டும் படங்கள்
சிரிப்பழகி நடிகை தான் இந்த சிறுமி...
நடிகை பாலக் லால்வானியின் கதை தெரியுமா?
குழந்தைகளுக்கு வெற்றியைக் கற்றுக்கொடுக்கும் பழக்க வழக்கங்கள்!
Exit mobile version