5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Kerala Fire Accident: காலையிலேயே அதிர்ச்சி.. கேரள கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து.. 150 பேர் படுகாயம்!

கேரள மாநிலம் காசர்கோட் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Kerala Fire Accident: காலையிலேயே அதிர்ச்சி.. கேரள கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து.. 150 பேர் படுகாயம்!
கேரள கோயிலில் தீ விபத்து (pic credit: Twitter)
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 Oct 2024 08:28 AM

கேரள மாநிலம் காசர்கோட் பகுதியில் கோவில் திருவிழாவின் போது பட்டாசு கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. இதனால் அங்கு பெரும் தீ விபத்து ஏற்பட்டது. இந்த தீ விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இவர்களில் 8 பேரின் நிலை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டத்தில் நீலேஸ்வரம் பகுதியில் அஞ்சுதம்பலம் வீரராகவர் கோயில் உள்ளது. இந்த கோயிலில் நேற்று நள்ளிரவு வருடாந்திர திருவிழா நடந்தது. இந்த கோயில் திருவிழாவில் ஆயிரத்திற்ம் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டனர். குறிப்பாக, பெண்கள், குழந்தைகள், முதியவர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

கேரள கோயில் திருவிழாவில் பயங்கர தீ விபத்து

இந்த திருவிழாவில் பட்டாசுகள் வெடித்து கொண்டாடப்பட்டது. அப்போது, கொளுத்தப்பட்ட பட்டாசுகளின் தீப்பொறி குடோனில் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகளில் மீது விழுந்ததில் உடனே தீ பற்றியது. இந்த குடானில் இருந்து பட்டாசுகள் வெடித்து சிதறியது.

இதனால் கோயிலில் இருந்து மக்கள் அலறியடிதுது அங்குமிங்கும் ஒடினர். இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. விபத்து நடந்த உடனேயே, காயமடைந்தவர்கள் காசர்கோடு, கண்ணூர் மற்றும் மங்களூரு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டனர்.

Also Read : பாபநாசம் பட பாணியில் பெண் கொடூர கொலை.. சிக்கிய ஜிம் பயிற்சியாளர்.. துப்பு துலங்கியது எப்படி?

பெண்கள், குழந்தைகள் உள்ளிட்டோர் தீயில் கருகினர். காயமடைந்தவர்களில் பலருக்கும் முகம் மற்றும் கைகளில் காயம் ஏற்பட்டது. இந்த விபத்தில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்த நிலையில், 8 பேர் கவலைக்கிடமாக இருப்பதாக தெரிகிறது.

150 பேருக்கு மேற்பட்டோர் காயம்

இந்த அதிர்ச்சி சம்பவத்தை அடுத்து, ஆட்சியர், மாவட்ட நிர்வாகத்தின் உயர் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். அதன்படி, ஆட்சியர் இம்பாசேகர், மாவட்ட காவல்துறை தலைவர் டி.ஷில்பா, கண்ணங்காடு டி.எஸ்.பி. பாபு பெரிங்கேத் உள்ளிட்டோர் விபத்து நடந்த இடத்திற்கு சென்றுள்ளனர்.

விபத்து நடந்த இடத்தில் தொடர்ந்து மீட்பு பணிகள் நடந்து வருகிறது. இதற்கிடையில், வீரராகவ கோயிலில் பட்டாசு வெடிக்க மாவட்ட நிர்வாகத்திடம் அனுமதி கேட்கவில்லை என காசர்கோடு மாவட்ட ஆட்சியர் இன்பசேகர் காளிமுகம் தெரிவித்துள்ளார்.

மேலும், பட்டாசு வெடிக்க அனுமதி கோரி கடிதம் எதுவும் செய்யப்படவில்லை என்றும் அவர் கூறினார். இந்த விபத்து தொடர்பாக இரண்டு  பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக தெரிகிறது.

காவல்துறை கூறுவது என்ன?

இந்த விபத்து குறித்து போலீசார் கூறுகையில், “அஞ்சுதம்பலம் வீரர்காவு கோவிலில் ஆண்டுதோறும் காளியாட்டம் திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. நேற்று இந்த திருவிழா நடந்தது. இந்த திருவிழாவில் பட்டாசு வெடிப்பதற்காக கோயில் குடானில் பட்டாசுகள் வைக்கப்பட்டிருந்தது.

நள்ளிரவு 12.30 மணியளவில் திடீரென கிடங்கில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது. அங்கு அனைத்து பட்டாசுகளும் ஒன்றன் பின் ஒன்றாக வெடிக்க ஆரம்பித்தது. இதனால் கோயிலில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.

Also Read : எல்லையில் தொடரும் பயங்கரவாத தாக்குதல்.. தேடுதல் வேட்டையில் ராணுவ வீரர்கள்..

இதில் 150க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர். அனைவரும் உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். 8 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. உடனடியாக தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன.

நீண்ட முயற்சிக்கு பிறகு தீ கட்டுக்குள் கொண்டு வரப்பட்டது. இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த மூத்த அதிகாரிகள் பலர் வந்துள்ளனர். காயமடைந்தவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்” என்றார்.

Latest News