Wayanad Landslide: வயநாடு நிலச்சரிவு கோரம்.. 300-ஐ தாண்டிய உயிரிழப்பு எண்ணிக்கை.. தமிழர்களின் நிலை என்ன?
வயநாடு நிலச்சரிவு: கேரளா மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. நான்கு மணி நேரத்தில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. எதிர்பாராவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் மேம்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன.
வயநாடு நிலச்சரிவு: கேரளா மாநிலம் வயநாட்டில் பெய்த கனமழையால் ஜூலை 30ஆம் தேதி அதிகாலையில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டது. நான்கு மணி நேரத்தில் 3 முறை நிலச்சரிவு ஏற்பட்டிருக்கிறது. எதிர்பாராவிதமாக நிகழ்ந்த இந்த துயரச் சம்பவமானது நாட்டையே பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அடுத்தடுத்து ஏற்பட்ட நிலச்சரிவால் மேம்பாடி, சூரல்மலை, முண்டக்கை, வைத்திரி, வெள்ளேரிமலை, பொத்துகலு உள்ளிட்ட பகுதிகள் கடுமையாக பாதிக்கப்பட்டன. மலை அடிவாரத்தை ஒடியுள்ள 3 கிராமங்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டது. இந்த சம்பவம் அதிகாலையில் நடந்ததால் வீடுகளில் தூங்கிக் கொண்டிருந்த மக்கள் மண்ணோடு மண்ணாக புதைந்து போனார்கள். அதனால் உயிரிழப்புகள் அதிகம் நேர்ந்துள்ளன. இதுவரை 316 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 316 பேரின் சடலங்கள் இதுவரை மீட்கப்பட்ட நிலையில், 240 பேரை காணவில்லை என கேரள அரசு அறிவித்துள்ளது. நிலச்சரிவில் சிக்கி மண்ணில் புதையுண்ட 200க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 1000க்கும் மேற்பட்டோர் உயிருடன் மீட்கப்பட்ட நிலையில் ஏராளமானோர் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளன.
4வது நாளாக தொடரும் மீட்பு பணி:
இன்னும் 200க்கும் மேற்பட்டோர் காணாமல் போன நிலையில், 4வது நாளாக மீட்பு பணிகள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தீயணைப்புத்துறையினர், வனத்துறை, ராணுவத்துறை, போலீஸ் துறை ஆகியவற்றை சேர்ந்தவர்கள் மீட்புப்பணிகளில் ஈடுபட்டுள்ளனர். தமிழ்நாட்டில் இருந்தும் 50க்கும் மேற்பட்டோர் அடங்கிய மீட்புக் குழுவினர் சென்றுள்ளனர். நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டு முழுவதுமாக துண்டிக்கப்பட்ட முண்டக்கையில் மண்ணின் ஈரப்பதம் அதிகம் இருப்பதால் போதுமான உபகரணங்கள் இல்லாததாலும் உடல்களை மீட்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் கனரக வாகனங்கள் செல்லும் வகையில் சூரல்மலை – முண்டக்கை இடையே ராணுவம் அமைத்து வந்த தற்காலிக பெய்லி இரும்புப் பாலத்தின் கட்டுமான பணிகள் நிறைவடைந்துள்ளன. இதனால், அப்பாலம் வழியாக மீட்புப் பணிகளுக்குத் தேவையான உபகரணங்கள் பாதிப்புப் பகுதிகளுக்கு கொண்டு செல்லப்பட்டு மீட்பு மற்றும் நிவாரணப் பணிகள் விரைவுபடுத்தப்பட்டன.
Also Read: ” நிலச்சரிவு ஏற்படும் என முன்கூடியே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது” – அமித்ஷா விளக்கம்..
தமிழர்களின் நிலை என்ன?
முண்டக்கை, சூரல்மலை, மேம்பாடு ஆகிய பகுதிகளில் தங்கியிருந்த 60க்கும் மேற்பட்ட தமிழர்களை காணவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் 10 பேர் உயிரிழந்துள்ளதாக தெரிகிறது. பொதுமக்கள் வெவ்வேறு பகுதிகளில் உள்ள முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளதால் காணாமல் போன பலரும் உயிருடன் இருக்கக் கூடும் என நம்பப்படுகிறது. மேலும் முண்டக்கை கிராமத்தில் உள்ள அரசு முதன்மை பள்ளி மற்றும் சூரல்மலா கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலை பள்ளிகள் நிலச்சரிவால் கடுமையாக பாதிக்கப்பட்டன. 2 பள்ளிகளைச் சேர்ந்த 27 மாணவர்கள் உயிரிழந்துள்ளனர். 23 மாணவர்கள் காணாமல் போகியுள்ளனர். இதில் சூரல்மலா பகுதியில் உள்ள பள்ளியில் படித்து வந்த 32 பேரும், முண்டக்கை பள்ளியில் படித்து வந்த 18 பேரும் பாதிக்கப்பட்டு உள்ளதகா கூறப்படுகிறது.