5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Wayanad Landslide: வயநாட்டை உலுக்கிய நிலச்சரிவ.. 60-ஐ தாண்டி உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்!

வயநாடு நிலச்சரிவு: கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேம்பாடு மற்றும் சூரல்மலை அருகே அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முதலில் அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர், அதிகாலை 4.10 மணியளவில், மாவட்டத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது.

Wayanad Landslide: வயநாட்டை உலுக்கிய நிலச்சரிவ.. 60-ஐ தாண்டி உயிரிழப்பு.. மீட்பு பணிகள் தீவிரம்!
வயநாடு நிலச்சரிவு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 Jul 2024 13:03 PM

வயநாட்டில் நிலச்சரிவு: கடந்த சில நாட்களாகவே கேரளாவில் கனமழை பெய்து வருகிறது. இந்த சூழலில் கேரளாவின் வயநாடு மாவட்டத்தில் உள்ள மேம்பாடு மற்றும் சூரல்மலை அருகே அதிகாலை 4 மணியளவில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. முதலில் அதிகாலை 2 மணியளவில் அப்பகுதியில் முதல் நிலச்சரிவு ஏற்பட்டது. பின்னர், அதிகாலை 4.10 மணியளவில், மாவட்டத்தில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டது. மேம்பாடி, சூரல்மலை, முண்டகை உள்ளிட்ட இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. அட்டமலையில் இருந்து முண்டகை வரையிலான ஒரே ஒரு பாலம் காட்டாற்று வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. சூரல்மா நிலச்சரிவில் 500 வீடுகள், 1000க்கும் மேற்பட்டோர் சிக்கி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் 1,000க்கும் மேற்பட்டோரை தேடும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. அப்பகுதியில் உள்ள சாலைகள், பாலங்கள் வெள்ளநீரில் அடித்து செல்லப்பட்டன .

Also Read: காட்டுக்குள் கேட்ட பெண்ணின் அழுகுரல்.. அடுத்து நடந்தது என்ன.. மகாராஷ்டிராவில் அதிர்ச்சி சம்பவம்!

உதவி எண்கள் அறிவிப்பு:

தற்போது தீயணைப்பு துறையினர், பேரிடர் மீட்பு படையினர் நிலச்சரிவில் சிக்கியுள்ளவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.  வயநாடு நிலச்சரிவு மீட்புப் பணிக்காக விமானப்படை விரைந்துள்ளதாக கேரள முதல்வர் பினராய் விஜயன் தெரிவித்துள்ளார். சூலூரில் இருந்து விமானப்படையின் 2 ஹெலிகாப்டர்கள் வயநாடு விரைந்துள்ளது. மழை தொடர்ந்து பெய்து வருவதால் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள பகுதிக்கு சென்றடைவதில் சிக்கல் நிலவுகிறது. தற்போது புல்டோசர்கள் மூலம் சரிந்து கிடக்கும் மண்ணை அகற்றும் பணிகள் நடந்து வருகின்றன.

60 பேர் உயிரிழப்பு:

சமீபத்தில் கிடைத்த தகவலின் படி, 50க்கும் மேற்பட்டோர் காயங்கள் உடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. தற்போதைய தகவலின்படி 60 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகி உள்ளது. இதில், தொண்டர்நாடு கிராமத்தில் வசிக்கும் நேபாள குடும்பத்தைச் சேர்ந்த ஒரு வயது குழந்தை நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்துள்ளது. வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில், தேசிய சுகாதார இயக்கம் சார்பில் உதவி எண்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.

நிலச்சரிவு தொடர்பாக 9656938689 மற்றும் 8086010833 ஆகிய எண்களில் தொடர்பு கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், “சாலையில் விழுந்த மரங்கள் மற்றும் மண் காரணமாக சம்பவ இடத்திற்கு செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மின்சாரம் இல்லாததால் மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது. புல்டோசர் மூலம் சாலையில் உள்ள மண்ணை அகற்றும் முயற்சியும் நடைபெற்று வருகிறது” என்றார்.

Also Read: ஜம்மு காஷ்மீர் வெடி விபத்தில் 4 பேர் உயிரிழப்பு.. தொடரும் பதற்றம்..

Latest News