5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Priyanka Gandhi: முதல் தேர்தலை சந்திக்கும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் 5 நாட்கள் தொடர் பிரச்சாரம்..

ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வரும் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. பிரியங்கா காந்தி இதற்கு முன்னதாக பல அரசியல் மேடையில் பேசியிருந்தாலும், தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

Priyanka Gandhi: முதல் தேர்தலை சந்திக்கும் பிரியங்கா காந்தி.. வயநாட்டில் 5 நாட்கள் தொடர் பிரச்சாரம்..
பிரியங்கா காந்தி
aarthi-govindaraman
Aarthi Govindaraman | Updated On: 06 Nov 2024 11:51 AM

கேரளா மாநிலம் வயநாடு தொகுதிக்கான நாடாளுமன்ற உறுப்பினர் தேர்தல் வரும் 13 ஆம் தேதி நடைபெற உள்ளது. இதனை முன்னிட்டு காங்கிரஸ் கட்சி தரப்பில் போட்டியிடும் பிரியங்கா காந்தி இன்று வயநாடு வருகை தருகிறார். இன்று முதல் 5 நாட்களுக்கு அதாவது வரும் 7 ஆம் தேதி வரை பிரச்சாரம் மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளா மாநிலம வயநாடு தொகுதியில் நடந்து முடிந்த நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தரப்பில் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி போட்டியிட்டார். ஏப்ரல் 26 ஆம் தேதி தேர்தல் நடைபெற்ற நிலையில், பதிவான வாக்குகளை ஜூன் 4 ஆம் தேதி என்னப்பட்டது. அதில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்ட ராகுல் காந்தி அபார வெற்றி பெற்றார்.

ராஜினாமா செய்த ராகுல் காந்தி:

அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சி சார்பில் போட்டியிட்ட ஆனி ராஜா 2 லட்சத்து 83 ஆயிரத்து 023 வாக்குகள் பெற்றிருந்தார். ராகுல் காந்தி சுமார் 6 லட்சத்து 47 ஆயிரத்து 445 வாக்குகள் பெற்று சுமார் 3,64,422 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். ராகுல் காந்தி வயநாடு மட்டுமல்லாமல் உத்திர பிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியிலும் போட்டியிட்டு வெற்றிப் பெற்றார். ஒருவர் இரண்டு நாடாளுமன்ற தொகுதிகளுக்கு உறுப்பினராக இருக்க முடியாத காரணத்தினால் ஒரு தொகுதியில் ராஜினாமா செய்ய வேண்டிய நிலையில் இருந்தார். இதன் காரணமாக கேரளா மாநிலம் வயநாடு தொகுதியை ராஜினாமா செய்தார்.

மேலும் படிக்க: கேரளாவில் ரயில் மோதி 4 தமிழர்கள் பலி.. தண்டவாளத்தில் தூய்மை பணியிம்போது நேர்ந்த சோகம்!

முதல் தேர்தலை சந்திக்கும் பிரியங்கா காந்தி:

ராகுல் காந்தி ராஜினாமா செய்ததை தொடர்ந்து அந்த தொகுதி காலியாக அறிவிக்கப்பட்டது. பின்னர் வரும் 13 ஆம் தேதி தேர்தல் நடத்தப்படும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இதனை தொடர்ந்து வயநாடு தொகுதியில் ராகுல் காந்தியின் தங்கை பிரியங்கா காந்தி போட்டியிடுவார் என அதிகாரப்பூர்வமாக தெரிவிக்கப்பட்டது. பிரியங்கா காந்தி இதற்கு முன்னதாக பல அரசியல் மேடையில் பேசியிருந்தாலும், தேர்தலை சந்திப்பது இதுவே முதல் முறையாகும்.

தேர்தல் அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அக்டோபர் 23 ஆம் தேதி தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார். தொடர்ந்து அக்டோபர் 28 மற்றும் 29 ஆம் தேதி இரண்டு நாட்கள் வயநாட்டில் பல்வேறு பகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார். இன்னும் 10 நாட்களில் தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் இன்று மீண்டும் அவர், வயநாடு வருகை தர உள்ளார். இன்று முதல் 5 நாட்கள் அதாவது வரும் 7 ஆம் தேதி வரை தொடர் பிரச்சாரத்தில் ஈடுபடப்போவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: உடல் முழுக்க சூடு.. 16 வயது சிறுமி சித்ரவதை செய்து கொன்ற தம்பதி.. சென்னையில் ஷாக்!

இந்த பிரச்சாரத்தின் போது தனது அண்ணன் நாடாளுமன்ற எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி உடன் இருப்பார் என்றும் பிரச்சாரத்தின் போது பல தரப்பு மக்களை சந்தித்து வாக்கு சேகரிக்க உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 நாட்களில் வயநாட்டில் இருக்கும் 7 சட்டமன்ற தொகுதியில் நடத்தப்படும் தேர்தல் பிரச்சார கூட்டத்திலும் கலந்துக்கொள்ள உள்ளார்.

முக்கியத்துவம் பெற்ற வயநாடு தொகுதி:

மக்களவை தேர்தலில் மிகவும் முக்கியமானது வயநாடு தொகுதி. குறிப்பாக 2019ஆம் ஆண்டுக்கு பிறகு தான் இந்தியாவை திரும்பி பார்க்க வைத்த தொகுதியானயது வயநாடு. காங்கிரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி இங்கு போட்டியிட்டார். 2019ல் ராகுல் காந்தி 7,06,367 வாக்குகள் பெற்ற நிலையில், அவரை எதிர்த்து போட்டியிட்ட சிபிஐ கட்சியின் சுனீர் 2,74,597 வாக்குகள் பெற்று தோல்வி அடைந்தார். ராகுல் காந்தி சுமார் 4.31 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். இதனால் கேரளா காங்கிரஸுக்கு மிகமிக முக்கியமான தேர்தல் களமாகியுள்ளது.

 

 

Latest News