அண்ணாமலைக்கு நோ சொன்ன மோடி.. அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழர்கள் யார்? - Tamil News | | TV9 Tamil

அண்ணாமலைக்கு நோ சொன்ன மோடி.. அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழர்கள் யார்?

Updated On: 

09 Jun 2024 20:33 PM

குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியல் மூன்றாவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி. அவருக்கு குடியரசுத் தலைர் திரௌபதி முர்மு பதவி பிரமாணம் செய்து வைத்தார். இவரை தொடர்ந்து, தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பதவியேற்றுக் கொண்டனர். அதாவது, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.  கடந்த 2019 முதல் 2024 வரை மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கரும் இருந்தார். மேலும், 2021ல் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

அண்ணாமலைக்கு நோ சொன்ன மோடி.. அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழர்கள் யார்?

அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழர்கள்

Follow Us On

அமைச்சரவையில் இடம்பெற்ற தமிழர்கள்: உலகின் மிகப்பெரிய ஜனநாயகத் திருவிழாவான மக்களவைத் தேர்தல் ஏப்ரல் 19 முதல் ஜூன் 1ஆம் தேதி வரை  நடந்து முடிந்தது. ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் நிலையில், பாஜக 240 இடங்களை கைப்பற்றியது. தேசிய ஜனநாயக கூட்டணி 292 இடங்களில் வென்றது. இந்தியா கூட்டணி 232 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜகவுக்கு தனிப் பெரும்பான்மை கிடைக்காத சூழலில், கூட்டணிக் கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்கிறார் மோடி.  இந்த  நிலையில், டெல்லியில் குடியரசுத் தலைவர் மாளிகையில் நடந்த நிகழ்ச்சியில் மோடி 3வது முறையாக பிரதமராக பதவியேற்றார். இதில்,  மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைத்தார்.

நாட்டின் முதல் பிரதமர் ஜவாஹர்லால் நேருவுக்கு பிறகு தொடர்ந்து 3வது முறையாக பிரதமர் பதவி ஏற்பவர் என்று பெருமையை மோடி பெறுகிறார். முன்னதாக, மத்திய அமைச்சர்களாக பதவியேற்க உள்ளவர்களுக்கு மோடியின் இல்லத்தில் தேநீர் விருந்தளிக்கப்பட்டது. இதில், பாஜக மூத்த தலைவர்கள் அமித் ஷா, ராஜ்நாத் சிங், நிதின் கட்கரி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்றனர்.

Also Read: 3ஆவது முறையாக பிரதமராக பதவியேற்றார் மோடி.. கரகோஷம் எழுப்பிய தொண்டர்கள்!

அண்ணாமலைக்கு நோ சொன்ன மோடி:

இவர்களை தவிற கூட்டணி கட்சி தலைவர்களான கர்நாடக முன்னாள் முதலமைச்சரும் மதச்சார்பற்ற ஜனதா தள கட்சி தலைவருமான குமாரசாமி, ஐக்கிய ஜனதா தள கட்சியின் மூத்த தலைவர் லலன் சிங், லோக் ஜனசக்தி தலைவர் சிராக் பாஸ்வான் உள்ளிட்டோரும் தேநீர் விருந்தில் கலந்து கொண்டனர். இவர்கள் தேநீர் விருந்தில் கலந்து கொண்டதால் இவர்களுக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்படுவது உறுதியாகிவிட்டது.

இந்த நிலையில், 3வது முறையாக மோடி பிரதமராக பதவியேற்றார். இவர்களை தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் பதவியேற்றுக் கொண்டனர். குறிப்பாக, இதில் தமிழகத்தைச் சேர்ந்த 3 பேர் பதவியேற்றுக் கொண்டனர்.  அதாவது, நிர்மலா சீதாராமன், எஸ்.ஜெய்சங்கர், எல்.முருகன் ஆகியோர் அமைச்சராக பதவியேற்றுக் கொண்டனர்.   கடந்த 2019 முதல் 2024 வரை மத்திய நிதி அமைச்சராக நிர்மலா சீதாராமனும், வெளியுறவுத்துறை அமைச்சராக ஜெய்சங்கரும் இருந்தார். மேலும், 2021ல் எல்.முருகனுக்கு மத்திய இணை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. மத்திய மீன்வளம், கால்நடை பராமரிப்பு, தகவல் மற்றும் ஒலிபரப்புத்துறை இணை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

தமிழ்நாட்டில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலைக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் இருந்தன. ஆனால், மோடியின் தேநீர் விருந்தில் அண்ணாமலை கலந்து கொள்ளவில்லை. இதனால், அவர் மத்திய அமைச்சரவையில் இடம் பெறாதது உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. இருப்பினும், தமிழ்நாட்டில் இருந்து 3 பேர் மத்திய அமைச்சரவையில் இடம்பெற்றுள்ளனர்.

Also Read: அமைச்சரவையில் இடம்பெற்ற நட்டா.. பாஜவின் புதிய தேசிய தலைவர் யார்?

 

கோலிவுட்டில் இந்த வாரம் வெளியாகும் படங்களின் லிஸ்ட்
இந்த குழந்தை பிரபல சினிமா குடும்பத்திற்கு மருமகள் ஆக போறாங்க...
கல்லீரலை சுத்தப்படுத்த இந்த உணவுகளை சாப்பிடுங்கள்..!
சியா விதையில் இவ்வளவு ஆபத்துகள் உள்ளதா?
Exit mobile version