Tirupati Laddu Controversy: “மாட்டு கொழுப்பு..” லட்டு விற்பனை மூலம் திருப்பதி கோயிலுக்கு கிடைக்கும் வருவாய் எவ்வளவு தெரியுமா?
திருப்பதி எழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீண் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்புயுள்ளது. ஆளும் கட்சி குற்றச்சாட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மறுத்தே வருகின்றனர். இப்படியான சூழலில், லட்டு விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்பதை பார்ப்போம்.
திருப்பதி எழுமலையான் கோயிலில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டுவில் மாட்டு கொழுப்பு, மீண் எண்ணெய் சேர்க்கப்பட்டதாக தகவல் வெளியாகி இருப்பது பெரும் சர்ச்சையை கிளப்புயுள்ளது. ஆளும் கட்சி குற்றச்சாட்டி வரும் நிலையில், எதிர்க்கட்சிகள் மறுத்தே வருகின்றனர். இப்படியான சூழலில், லட்டு விற்பனை மூலம் திருப்பதி தேவஸ்தானத்துக்கு எவ்வளவு வருவாய் கிடைக்கிறது என்பதை பார்ப்போம். உலக பிரசித்தி பெற்ற திருமலை திருப்பதிக்கு தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து தரிசனம் செய்து வருகின்றனர். இந்தியா மட்டுமின்றி பல்வேறு வெளிநாடுகளில் இருந்தும் ஏழுமலையானை தரிசிக்க வருகின்றனர்.
லட்டு விற்பனை மூலம் வருவாய் எவ்வளவு கிடைக்கும்?
திருப்பதி சென்று வந்தால் திருப்பம் ஏற்படும் என்ற நம்பிக்கையில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்து வருகின்றனர். திருமால் தரிசனத்திற்கு அனைவரின் நினைவுக்கு வருவது லட்டு தான். இதனை ஸ்ரீவாரி லட்டு என்று அழைக்கப்படுவது உண்டு. இந்த லட்டு என்றே திருப்பதிக்கு பக்தர்கள் வந்து செல்கின்றன. அவ்வளவு சுவையாக இந்த லட்டு இருக்கும்.
Also Read: ”மாட்டு கொழுப்பு.. மீன் எண்ணெய்” திருப்பதி லட்டு குறித்து ஆய்வில் வெளிவந்த அதிர்ச்சி தகவல்!
இதற்கு தனித்துவமான சுவை உள்ளது. கடந்த 300 ஆண்டுகளுக்கு முன்பு திருப்பதி கோயிலில் அறிமுகமான லட்டு பிரசாதம் இப்போது வரை அனைவரின் நினைவில் இருக்கிறது. 2014ஆம் ஆண்டில் திருப்பதி லட்டுக்கு புவிசார் அந்தஸ்தை பெற்றது. திருப்பதி கோயிலின் முக்கிய வருவாய்களில் ஒன்றாக லட்டு விற்பனை இருக்கிறது.
திருப்பதி கோயிலில் தினசரி சுமார் 3 லட்சம் லட்டுகள் தயாரிக்கப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. இது பண்டிகை மற்றும் விடுமுறை நாட்களில் அதிகரிக்கும். திருப்பதி தேவஸ்தானம் லட்டு விற்பனையில் மட்டும் ஆண்டுக்கு ரூ.500 கோடி வரை வருமானதாக பெறுகிறது.
3 விதமான லட்டுகள்:
திருப்பதி கோயிலுக்கு செல்லும் பக்தர்களுக்கு கோயில் வளாகத்திலும், வெளியிலும் லட்டுகள் விநியோகிக்கப்படுகிறது. சரியான முறையில் சேமித்து வைக்கப்படும் லட்டுகள் சுமார் 15 நாட்கள் வரை கெட்டு போகாமல் இருக்கும். திருப்பதியில் வழங்கப்படும் லட்டுகள் 3 விதமான எடை அளவில் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
சிறிய லட்டுகள் 40 கிராமும், மீடியம் அளவு லட்டுகள் 175 கிராமும், பெரிய அளவு லட்டுகள் 750 கிராமும் இருக்கும். இதில் கோயிலுக்கு வரும் பக்தர்கள் அனைவரும் சிறிய அளவிலான 40 கிராம் லட்டு வழங்கப்படுகிறது. அதேநேரம் மீடியம் அளவு லட்டுகள் 50 ரூபாய்க்கும், பெரிய அளவிலான 750 கிராம் லட்டுகள் 200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
லட்டு தயாரிக்கப்படுவது எப்படி?
ஒவ்வொரு லட்டுகளை செய்தவற்கு 40 ரூபாய் ஆகும் என்று கூறப்படுகிறது. இந்த லட்டு தயாரிப்பதற்கு நெய், மாவு, எண்ணெய், சர்க்கரை, உலர் பழங்கள், ஏலக்காய் ஆகியார் தேவைப்படுகிறது. ஒவ்வொரு நாளும் சுமார் 400-500 கிலோ நெய், 750 கிலோ முந்திரி, 500 கிலோ திராட்சை மற்றும் 200 கிலோ ஏலக்காய் தேவைப்படுகிறது. ஏனென்றால் ஒவ்வொரு நாளும் 3.5 கிலோ லட்டுகள் தயாரிக்கப்படுகின்றன.
லட்டு தயாரிக்கும் பணியில் சுமார் 300க்கும் மேற்பட்டோர் பணியாற்றுவார்கள். ஒவ்வொரு நாளும் பல லட்சம் லட்டுகள் தயாரிக்கும் திறன் கொண்ட அதிநவீன சமையலறை திருப்பதி தேவஸ்தானம் நிறுவியுள்ளது. இங்கு தான் தினமும் ஸ்ரீவாரி லட்டுகள் செய்யப்படும் பக்தர்களுக்கு வழங்கப்படுகிறது.
அதிர்ச்சியில் பக்தர்கள்:
இப்படி சுவைமிக்க ஸ்ரீவாரி லட்டு தயாரிக்கப்படும் நெய்யில் தான் மாட்டுக் கொழுப்பு, மீன் எண்ணெய் சேர்க்கப்படுவதாக ஆய்வில் உறுதியாகி உள்ளது. குஜராத்தின் தேசிய பால்வள மேம்பாட்டு வாரியத்தில் உள்ள கால்நடை மற்றும் உணவுப் பகுப்பாய்வு மற்றும் கற்றல் மையம் ஆய்வகத்தின் அறிக்கை மூலம் வெளிவந்துள்ளது.
Also Read; கனடா செல்ல பிளானா? இந்திய மாணவர்களுக்கு புது சிக்கல்.. கஷ்டம் தான் ரொம்ப!
ஆய்வக அறிக்கையின்படி, சோயாபீன், சூரியகாந்தி, ஆலிவ், கோதுமை பீன்ஸ், சோளம், பருத்தி விதை, மீன் எண்ணெய், விலங்கு கொழுப்பு, பாமாயில் மற்றும் பன்றி இறைச்சி கொழுப்பு ஆகியவையும் பக்தர்களுக்கு தரப்படும் திருப்பதி லட்டுவில் சேர்க்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது. இது பக்தர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதுகுறித்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.