5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

LIC Page: முழுக்க முழுக்க இந்திக்கு மாறிய LIC இணையதளம்.. பொதுமக்கள் எதிர்ப்பு!

Life Insurance Corporation of India: அனைவரும் பயன்படுத்தும் வகையில் இதுவரை ஆங்கிலத்தில் இருந்த LIC -யின் இணையதளப் பக்கம் முழுக்க இந்தி மொழிக்கு மாற்றம் கண்டுள்ளது. இதனால் அந்த மொழி தெரியாத பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆங்கில மொழியை மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

LIC Page: முழுக்க முழுக்க இந்திக்கு மாறிய LIC இணையதளம்.. பொதுமக்கள் எதிர்ப்பு!
இந்தி மொழிக்கு மாறிய LIC பக்கம்
petchi-avudaiappan
Petchi Avudaiappan | Updated On: 19 Nov 2024 11:30 AM

மத்திய அரசின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC -யின் இணையதளப் பக்கம் முழுவதும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளதால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல மொழிகள் பேசும் மக்களும் காப்பீடு செய்துள்ளனர். இப்படியான நிலையில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இதுவரை ஆங்கிலத்தில் இருந்த LIC -யின் இணையதளப் பக்கம் முழுக்க இந்தி மொழிக்கு மாற்றம் கண்டுள்ளது. இதனால் அந்த மொழி தெரியாத பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் மத்திய அரசு எந்த காரணத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தது என பலரும் சமூக வலைத்தளம் வாயிலாக கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மொழியை மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி.. கொட்டும் பணமழை.. உச்சத்தில் எலான் மஸ்க்!

அந்த வலைத்தளப் பக்கத்தில் வலதுபக்கத்தின் மேல் பகுதியில் உள்ள भाषा என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் மட்டுமே ஆங்கிலத்தில் விருப்ப மொழியை தேர்வு செய்யும் வசதி உள்ளது.LIC நிறுவனத்தில் வடமாநில மக்களை விட தென்னிந்திய மக்களே அதிக அளவில் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலகளவில் அதிகளவில் காப்பீட்டுதாரர்களை கொண்ட நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ள எல்.ஐ.சி.யில் நடைபெற்றுள்ள இந்த மொழி தொடர்பான மாற்றம் எதிர்ப்பலைகளை பெற்றுள்ளது.

Also Read: பங்குச்சந்தை சில மாற்றங்கள்.. ஈவுத்தொகை, போனஸ் ரூல்ஸ் விவரம்!

இதனிடையே இந்தியில் எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் மாறியதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதனை சரி செய்யும் பணியின் நடைபெற்று வருவதாகவும் விரைந்து சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது

 

Latest News