LIC Page: முழுக்க முழுக்க இந்திக்கு மாறிய LIC இணையதளம்.. பொதுமக்கள் எதிர்ப்பு!

Life Insurance Corporation of India: அனைவரும் பயன்படுத்தும் வகையில் இதுவரை ஆங்கிலத்தில் இருந்த LIC -யின் இணையதளப் பக்கம் முழுக்க இந்தி மொழிக்கு மாற்றம் கண்டுள்ளது. இதனால் அந்த மொழி தெரியாத பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். ஆங்கில மொழியை மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். 

LIC Page: முழுக்க முழுக்க இந்திக்கு மாறிய LIC இணையதளம்.. பொதுமக்கள் எதிர்ப்பு!

இந்தி மொழிக்கு மாறிய LIC பக்கம்

Updated On: 

19 Nov 2024 13:30 PM

மத்திய அரசின் பொதுத்துறை ஆயுள் காப்பீட்டு நிறுவனமான LIC -யின் இணையதளப் பக்கம் முழுவதும் இந்தி மொழிக்கு மாற்றப்பட்டுள்ளதால் பயனாளர்கள் அவதியடைந்துள்ளனர். மும்பையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் இந்த நிறுவனத்தில் இந்தியாவைச் சேர்ந்த பல மொழிகள் பேசும் மக்களும் காப்பீடு செய்துள்ளனர். இப்படியான நிலையில் அனைவரும் பயன்படுத்தும் வகையில் இதுவரை ஆங்கிலத்தில் இருந்த LIC -யின் இணையதளப் பக்கம் முழுக்க இந்தி மொழிக்கு மாற்றம் கண்டுள்ளது. இதனால் அந்த மொழி தெரியாத பயனாளர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். மேலும் மத்திய அரசு எந்த காரணத்திற்காக இப்படி ஒரு முடிவை எடுத்தது என பலரும் சமூக வலைத்தளம் வாயிலாக கேள்வியெழுப்பியுள்ளனர். மேலும் ஆங்கில மொழியை மீண்டும் சேர்க்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Also Read: ஒரே நாளில் ஒரு லட்சம் கோடி.. கொட்டும் பணமழை.. உச்சத்தில் எலான் மஸ்க்!

அந்த வலைத்தளப் பக்கத்தில் வலதுபக்கத்தின் மேல் பகுதியில் உள்ள भाषा என்ற ஆப்ஷனை கிளிக் செய்தால் மட்டுமே ஆங்கிலத்தில் விருப்ப மொழியை தேர்வு செய்யும் வசதி உள்ளது.LIC நிறுவனத்தில் வடமாநில மக்களை விட தென்னிந்திய மக்களே அதிக அளவில் காப்பீட்டு திட்டங்களில் முதலீடு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது. உலகளவில் அதிகளவில் காப்பீட்டுதாரர்களை கொண்ட நிறுவனம் என்ற சிறப்பை பெற்றுள்ள எல்.ஐ.சி.யில் நடைபெற்றுள்ள இந்த மொழி தொடர்பான மாற்றம் எதிர்ப்பலைகளை பெற்றுள்ளது.

Also Read: பங்குச்சந்தை சில மாற்றங்கள்.. ஈவுத்தொகை, போனஸ் ரூல்ஸ் விவரம்!

இதனிடையே இந்தியில் எல்ஐசி இணையதள முகப்பு பக்கம் மாறியதற்கு தொழில்நுட்ப கோளாறு காரணம் என எல்ஐசி தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. தற்போது அதனை சரி செய்யும் பணியின் நடைபெற்று வருவதாகவும் விரைந்து சரி செய்யப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது.

இந்நிலையில் எல்.ஐ.சி. இணையதளம் இந்தியில் மாற்றம் செய்யப்பட்டதற்கு  எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். அதில், “பொதுத்துறை நிறுவனமான LIC இந்தியாவின் இணையதள பக்கத்தில் Default Language எனப்படும் இயல்பு நிலை மொழியாக இந்தி மாற்றப்பட்டிருக்கிறது. இந்தி மொழி தெரியாத மக்களுக்கு தற்போது LICயின் இணையதளம் பயன்படுத்த முடியாத அளவுக்கு உள்ளது.

இணையதளத்தின் மொழி மாற்றும் விருப்பமும் இந்தி மொழியிலேயே இருப்பதால் அதனை கண்டுபிடிக்க முடியாத நிலையும் ஏற்பட்டுள்ளது. எதில், எங்கு எப்படி இந்தியை திணிக்கலாம் என்ற முனைப்பிலேயே மத்திய அரசு செயல்படுவது கண்டனத்திற்குரியதாகும். மொழி, பண்பாடு, அமைப்பு, அரசியல் என அனைத்து துறைகளிலும் பன்முகத்தன்மை கொண்ட இந்தியாவில், ஒற்றைத்தன்மையை திணிப்பது என்பது நாட்டின் சமநிலையை பாதிக்கும் செயலாகும். அது ஏற்புடையதல்ல. அனைத்து மக்களும் பயன்படுத்தும் வகையில் இணையதளத்தின் இயல்புநிலை மொழியை ஆங்கிலத்திற்கு மாற்ற வேண்டும். இந்தி மொழியைத் திணிக்கும் எந்த நடவடிக்கையிலும் ஈடுபடவேண்டாம் எனவும் மத்திய அரசை வலியுறுத்துகிறேன்” என தெரிவித்துள்ளார்.

 

கர்ப்பக் காலத்தில் சரும ஆரோக்கியத்தை பராமரிக்க சில டிப்ஸ்..
தினசரி தேங்காய் தண்ணீர் குடித்தால் என்ன ஆகும்?
சிறுநீரகங்கள் ஆரோக்கியமாக இருக்க தினமும் செய்ய வேண்டியவை..!
ஆஸ்திரேலியாவில் கேப்டனாக அதிக சதம் அடித்த இந்தியர்..!