5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

List of Ministers who took oath: மோடியுடன் இன்று பதவியேற்கும் 30 அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்த துறை?

3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். மோடியுடன் சுமார் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. மொத்தமாக 78 முதல் 81 அமைச்சர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது. உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய முக்கியமான இலாகாக்களை தொடர்ந்து பாஜக வசம் இருக்கும். எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து, நிலக்கரி போன்ற முக்கிய அமைச்சரவை இன்று பதவியேற்பவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது. 

List of Ministers who took oath: மோடியுடன் இன்று பதவியேற்கும் 30 அமைச்சர்கள்.. யார் யாருக்கு எந்த துறை?
என்.டி.ஏ கூட்டணி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Published: 09 Jun 2024 09:35 AM

மோடி பதவியேற்பு விழா: நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் பாஜக 240 இடங்களில் வென்ற நிலையில், தேசிய ஜனநாயக கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைக்க உள்ளது. தேசிய ஜனநாயக கூட்டணியின் நாடாளுமன்ற குழுத் தலைவராக மோடி தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து, குடியரசுத் தலைவர் திரௌபதி முர்முவிடம் ஆட்சி அமைக்க உரிமை கோரினார். இதை அடுத்து, இன்று மூன்றாவது முறையாக மோடி பதவியேற்க உள்ளார். இதற்கான ஏற்பாடுகள் குடியரசுத் தலைவர் மாளிகையில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 3வது முறையாக நாட்டின் பிரதமராக மோடி இன்று இரவு 7.15 மணிக்கு பதவி ஏற்க உள்ளார். இதில், பிரதமர் மோடிக்கு குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பதவிப் பிரமாணம் ரகசிய காப்பு பிரமாணமும் செய்து வைக்க உள்ளார். மோடியுடன் சுமார் 30 அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Also Read: மோடி அமைச்சரவையில் நிதிஷ், சந்திரபாபுவுக்கு எத்தனை இலாகாக்கள்? வெளியான முக்கிய தகவல்!

மொத்தமாக 78 முதல் 81 அமைச்சர்கள் இருப்பார்கள் என கூறப்படுகிறது. உள்துறை, பாதுகாப்பு, நிதி மற்றும் வெளியுறவுத்துறை ஆகிய முக்கியமான இலாகாக்களை தொடர்ந்து பாஜக வசம் இருக்கும். எஃகு, சிவில் விமானப் போக்குவரத்து, நிலக்கரி போன்ற முக்கிய அமைச்சரவை இன்று பதவியேற்பவர்களிடம் ஒப்படைக்கப்பட உள்ளதாக தெரிகிறது.  என்டிஏ கூட்டணியில் முக்கியமாக கருத்தப்படும் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்கு தேசம் கட்சிக்கு 4 கேபினட் பொறுப்பையும், நிதிஷ் குமாரி ஐக்கிய ஜனதா தளத்திற்கு 2 கேபினட் பொறுப்பையும் பாஜக அளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

30 அமைச்சர்கள் யார் யார்?

ஐக்கிய ஜனதா தளத்தில் மூத்த தலைவர்களான லாலன் சிங் மற்றும் ராம்நாத் தாக்கூர் ஆகியோரின் பெயரை நிதிஷ் குமார் முன்மொழிந்துள்ளதாக தெரிகிறது.
அதேபோல, தெலுங்கு தேச கட்சியின் ராம் மோகன் நாயுடு, ஹரிஷ் பாலயோகி மற்றும் டக்குமல்ல பிரசாத் உள்ளிட்டோரின் பெயரை சந்திரபாபு நாயுடு முன்மொழிந்துள்ளதாக சொல்லப்படுகிறது. எனவே இவர்கள் பதவியேற்கவும் வாய்ப்புள்ளது. லக்னோ மக்களவைத் தொகுதியில் வெற்றி பெற்ற பாஜக மூத்த தலைவர் ராஜ்நாத் சிங்,  பாதுகாப்புத் துறை அமைச்சராக நீடிக்க வாய்ப்புள்ளது.

ராஜ்நாத் சிங் மற்றும் நிதின் கட்கரி தவிர்த்து பெரும்பாலும் இந்த முறை புதிய அமைச்சர்கள் பதவியேற்க வாய்ப்புள்ளதாக சொல்லப்படுகிறது. இதற்கிடையில் மக்களவைத் தேர்தலில் வென்ற சில எம்.பிக்களுக்கு மோடி தரப்பில் இருந்து அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அதாவது, நிதின் கட்கரி (பாஜக), அர்ஜுன் ராம் மேக்வால் (பாஜக), சிராக் பாஸ்வான் (எல்.ஜே.பி), எச்டி குமாரசாமி (JD(S), சர்பானந்தா சோனோவால் (பாஜக), பிரகலாத் ஜோஷி (பாஜக), சிவராஜ் சிங் சவுகான் (பாஜக) உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. எனவே, இவர்களும் இன்று அமைச்சர்களாக பதவியேற்க வாய்ப்புள்ளது.

Also Read: 3வது முறையாக பிரதமராக இன்று பதவியேற்கும் மோடி.. டெல்லியில் குவிந்த உலக தலைவர்கள்!

Latest News