5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Train Accidents: தொடர்ந்து நடக்கும் ரயில் விபத்துகள்.. இந்தியாவில் மட்டும் இவ்வளவு நடப்பதற்கு காரணம் என்ன?

தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் நடக்கின்ற போதிலும் சில தீமைகளும் நடக்கவே செய்கின்றன. குறிப்பாக இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை அமல்படுத்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது.  ஆனால், அதே சமயத்தில் ரயில் விபத்துகளும் கடந்த சில காலமாகவே அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் என ரயில் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன.

Train Accidents: தொடர்ந்து நடக்கும் ரயில் விபத்துகள்.. இந்தியாவில் மட்டும் இவ்வளவு நடப்பதற்கு  காரணம் என்ன?
ரயில் விபத்துகள்
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 19 Jul 2024 15:43 PM

ரயில் விபத்துகள்: தொழில்நுட்ப வளர்ச்சியால் பல நன்மைகள் நடக்கின்ற போதிலும் சில தீமைகளும் நடக்கவே செய்கின்றன. குறிப்பாக இந்தியாவில் தொழில்நுட்ப வசதிகள் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மும்பை அகமதாபாத் இடையே புல்லட் ரயிலை அமல்படுத்த பணிகள் வேகமாக நடந்து வருகிறது.  ஆனால், அதே சமயத்தில் ரயில் விபத்துகளும் கடந்த சில காலமாகவே அதிகரித்த வண்ணம் உள்ளன. ஒடிசா, ஆந்திரா, மேற்கு வங்கம் என ரயில் விபத்துகள் தொடர் கதையாகி வருகின்றன. கடந்த ஆண்டு ஒடிசாவில் நடந்த ரயில் விபத்து ஒட்டுமொத்த உலகையே அதிர்ச்சியில் ஆழ்த்தியது. சுமார் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இன்றைக்கு கூட உத்தர பிரதேசத்தில் ரயில் விபத்து ஏற்பட்டு 3க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதற்கு காரணங்கள் பல இருந்தாலும் பாதிக்கப்படுவது பயணிகள் தான். அந்த வகையில், இந்தியாவில் இதுவரை நடந்த கோர ரயில் விபத்துகள் என்னென்ன என்பதை பார்ப்போம்.

Also Read: உத்தர பிரதேச முதல்வர் மாற்றமா? யோகிக்கு ஷாக் கொடுக்க காத்திருக்கும் மோடி!

இதுவரை நடந்த விபத்துகள்:

  • 1981ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் தேதி பீகாரில் புயல் காரணமாக விரைவு ரயில் ஆற்றில் கவிழ்ந்து விழுந்ததில் 800 பேர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
  • 1985ஆம் ஆண்டு பிப்ரவரி 23ஆம் தேதி ராஜ்நந்த்காவில் பயணிகள் ரயிலின் இரண்டு பெட்டிகள் தீப்பிடித்து ஏரிந்த விபத்தில் 50 பேர் உயிரிழந்தனர்.
  • 1990 ஏப்ரல் 16ஆம் தேதி பாட்னா அருகே ரயிலில் தீப்பிடித்து ஏரிந்த விபத்தில் 70 பேர் உயிரிழந்தனர்.
  • 1993ஆம் ஆண்டு ராஜஸ்தானில் கோட்டா-பீனா விரைவு ரயிரில் சரக்கு ரயில் மீது மோதிய விபத்தில் 71 பேர் உயிரிழந்தனர்.
  • 1995 ஆகஸ்ட் 20ஆம் தேதி ஃபிரோஸாபாத்தில் காளிந்தி விரைவு ரயில் மீது புருஷோத்தன் விரைவு ரயில் மோதிய விபத்தில் 250 பேர் உயிரிழந்தனர். 250 பேர் காயம் அடைந்தனர்.
  • 1997ஆம் ஆண்டு செப்டம்பர் 14ஆம் தேதி அகமதாபாத் – ஹவுரா விரைவு ரயில் சத்தீஸ்கரின் பிலாஸ்பூர் ஆற்றில் கவிழ்ந்த விபத்தில் 81 பேர் உயிரிழந்தனர். 100 பேர் காயம் அடைந்தனர்.
  • 1998ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி கன்னாவில் ஃபிராண்டியர் மெயில் ரயில், சீயல்தா விரைவு ரயில் மீது மோதிய விபத்தில் 202 பேர் உயிரிழந்தனர்.
  • 1999ஆம் ஆண்டு மேற்கு வங்கத்தில் அசாம் விரைவு ரயில் மீது பிரம்மபுத்ரா ரயில் மோதிய விபத்தில் 285 பேர் உயிரிழந்தனர்.
  • 2002ஆம் செப்டம்பர் 9ஆம் தேதி டெல்லியில் ராஜ்தானி விரைவு ரயில் விபத்துக்குள்ளானதில் 130 பேர் உயிரிழந்தனர்.
  • 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி மகாராஷ்டிராவில் இருந்து நாக்பூர் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயில் தடம் புரண்டதில் 50 பேர் உயிரிழந்தனர். இதே ஆண்டில் ஏப்ரல் 21ஆம் தேதி குஜராத்தில் சரக்கு ரயில் மீது சாபர்மதி விரைவு ரயில் மோதிய விபத்தில் 17 பேர் உயிரிழந்த நிலையில், 78 பேர் காயம் அடைந்தனர்.
  • 2010ஆம் ஆண்டு மே 28ஆம் தேதி மேற்கு வங்கத்தில் மாவோயிஸ்டுகள் என்று சந்தேகிக்கப்படுவோர் நடத்திய தாக்குதலில் கியானேஸ்வரி விரைவு ரயில் தடம் புரண்டது. இந்த விபத்தில் 100 பேர் உயிரிழந்தனர். இதே ஆண்டில் ஜூலை மாதத்தில் மேற்கு வங்கத்தில் உத்தர பங்கா விரைவு ரயில் மற்றும் வனாஞ்சல் விரைவு ரயில் மோதிய விபத்தில் 62 பேர் உயிரிழந்தனர். மேலும், இதே ஆண்டில் மத்திய பிரதேசத்தில் குவாலியர் இன்டர்சிட்டி விரைவு ரயில், சரக்கு ரயில் மீது மோதியதில் 33 பேர் உயிரிழந்த நிலையில், 100க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
  • 2016ஆம் ஆண்டில் உத்தர பிரதேசத்தில் இந்தூர்-பாட்னா எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டதில் 146 பேர் உயிரிழந்தனர்.
  • 2023ஆம் ஆண்டில் ஒடிசாவில் கோரமண்டல் விரைவு ரயில், பெங்களூரு-ஹவுரா ரயில், சரக்கு ரயில் ஒன்றொடு ஒன்று மோதி விபத்துக்குள்ளானதில் 300க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 1000க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.
  • 2024ஆம் ஆண்டு ஜூன் 17ஆம் தேதி மேற்கு வங்க மாநிலத்தில் சரக்கு ரயிலும், விரைவு ரயிலும் மோதிய விபத்தில் 15 பேர் உயிரிழந்ததனர்.

காரணம் என்ன?

2017 மற்றும் 2021 க்கு இடையில் இந்திய ரயில்வே 2,017 விபத்துக்களை பதிவு செய்துள்ளதாக தரவுகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் பெரும்பாலான ரயில் விபத்துகள் மனித தவறு அல்லது காலாவதியான உபகரணங்களால் ஏற்படுகின்றன. தரவுகளின்படி, 2017-18 முதல் 2021-22 வரையிலான 55 சதவீத ரயில் விபத்துக்களுக்கு ரயில்வே ஊழியர்களின் தவறுகளே காரணம் என்று கூறப்பட்டுள்ளது. 65 சதவீதம் ஊழியர்களின் தவறுகளால் தான் விபத்துகள் ஏற்படுவதாக தரவுகளில் கூறப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் இதுபோன்ற ரயில் விபத்துகள் நடைபெறும் போதெல்லாம் கவாச் தொழில்நுட்பம் பற்றிய பேச்சுக்கள் அடிபடும். கவாச் என்பது தண்டவாளத்தில் இரண்டு ரயில்கள் மோதுவதைத் தடுக்கும் ஒரு பாதுகாப்பு அம்சமாகும். ரயிலின் வேகத்தை கட்டுப்படுத்துவதை இதன் முதன்மை அம்சமாகும். ஓட்டுநர் சரியான நேரத்தில் பிரேக் போடத் தவறினால் வேகத்தை கட்டுப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம். ஆனால் இந்த கவாச் அம்சம் அனைத்து தண்டவாளத்திலும் பொருத்தப்படவில்லை. இந்தியாவில் மொத்துமுள்ள 1 லட்சம் ரயில் பாதைகளில் சுமார் 1,500 கீ.மீ ரயில் பாதைகளில் மட்டுமே கவாச் அமைப்பு செயல்படுத்தப்படுகிறது. இதனால் தான் பல விபத்துகள் ஏற்படுவதாக கூறப்படுகிறது.

Also Read: வேட்டி அணிந்து சென்ற விவசாயிக்கு மாலில் அனுமதி மறுப்பு.. உடனடியாக பறந்த உத்தரவு.. அடுத்து நடந்தது என்ன?

Latest News