5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானா?” அமித்ஷாவை சாடிய கெஜ்ரிவால்!

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும், வரும் 25ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் தன்வசம் வைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், இழந்த செல்வாக்கை மீட்டுக்கும் முயற்சியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி செயல்படுகிறது. கருத்து கணிப்புகளிலும், பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

“பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானா?” அமித்ஷாவை சாடிய கெஜ்ரிவால்!
அரவிந்த் கெஜ்ரிவால்
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 May 2024 14:10 PM

அமித்ஷாவை சாடிய கெஜ்ரிவால்:  நாடு முழுவதும் 543 தொகுதிகளுக்கு 7 கட்டங்களாக  மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நடைபெற்று முடிந்த நிலையில், மே 25, ஜூன் 1ஆம் தேதி அடுத்தடுத்த தேர்தல் நடக்கிறது.  இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், டெல்லி முதல்வரும், ஆம் ஆத்மி கட்சி தலைவருமான அரவிந்த் கெஜ்ரிவால் வீடியோ வெளியிட்டிருக்கிறார். அதன்படி, ”5வது கட்ட  மக்களவை தேர்தல் முடிந்துள்ளது.  ஜூன் 4-ம் தேதி மோடி அரசு விலகி, இந்திய கூட்டணி ஆட்சி அமைக்கும் என்பது தெளிவாகிறது.  ஜூன் 4ஆம் தேதி இந்திய கூட்டணி 300 இடங்களுக்கு மேல் பெற்று ஆட்சி அமைக்கிறது.

“பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானியர்களா?”

நேற்று அமித் ஷா டெல்லிக்கு வந்தார். நேற்று அமித் ஷா பங்கேற்ற பொதுக்கூட்டத்தில் 500க்கும் குறைவான மக்களே இருந்தனர். டெல்லிக்கு வந்த அவர், நாட்டு மக்களை அசிங்கப்படுத்தத் தொடங்கினார். ஆம் ஆத்மி ஆதரவாளர்கள் பாகிஸ்தானியர்கள் என்று கூறினார். நான் அவரிடம் கேட்க விரும்புகிறேன். டெல்லி மக்கள் எங்களுக்கு 62 இடங்களில், 56% வாக்குகளை அளித்து எங்களை ஆட்சியில் அமர வைத்துள்ளனர். டெல்லி மக்கள் பாகிஸ்தானியர்களா?

Also Read : கோவாக்சினால் ஆபத்தான பக்க விளைவுகள்? இந்த ஆய்வுக்கும் எங்களுக்கும் தொடர்பு இல்லை.. ஐசிஎம்ஆர் விளக்கம்!

பஞ்சாப் மக்கள் எங்களுக்கு 117 இடங்களில் 92 இடங்களை கொடுத்துள்ளனர். பஞ்சாப் மக்கள் பாகிஸ்தானியர்களா? பிரதமர் மோடி உங்களை வாரிசாக தேர்ந்தெடுத்துள்ளார். நீங்கள் இதைப் பற்றி மிகவும் பெருமையாக சொல்கிறீர்கள். நீங்கள் மக்களை துஷ்பிரயோகம் செய்து அச்சுறுத்த வகையில் பேசுகிறீர்கள்.

நீங்கள் இன்னும் பிரதமரே ஆகவில்லை. அதற்குள்ள இவ்வளவு திமிராக நடந்துக்கொள்கிறீர்கள். நீங்கள் பிரதமராக வர மாட்டீர்கள். மக்கள் மீண்டும் பாஜகவை ஏற்க தயாராக இல்லை” என்றார்.

டெல்லி தேர்தல்:

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளிலும், வரும் 25ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டெல்லியை பொருத்தவரை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளே மக்கள் செல்வாக்கை கொண்டிருக்கின்றன. 2014, 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் ஆம் அத்மி ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன.

இதில், மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன. இதில், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் தன்வசம் வைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், இழந்த செல்வாக்கை மீட்டுக்கும் முயற்சியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி செயல்படுகிறது. கருத்து கணிப்புகளிலும், பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில், இந்தியா கூட்டணி அதிகபட்சமாக 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மதுரை எய்ம்ஸ் கட்டுமான பணி…சுற்றுச்சூழல் அனுமதி வழங்கிய தமிழக அரசு!

 

Latest News