LS Exit Poll Results 2024 Highlights: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்!
Lok Sabha Election Exit Poll Results 2024 : இன்று 57 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளிலும், 42 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு முடியும் நிலையில் மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகவுள்ளது. இந்தக் கருத்துக் கணிப்புகள் மூலம் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும் என மதிப்பிடப்படும். நாட்டின் பல்வேறு ஏஜென்சிகள் அந்தந்த புள்ளிவிவரங்களை வெளியிடும். தேர்தல் முடிவுகள் வெளியான பிறகு எவ்வளவு துல்லியமானது என்பது தெரியவரும். கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்து 30 நிமிடங்களுக்குப் பிறகுதான் கருத்துக் கணிப்புகளை வெளியிட முடியும் என்று விதி கூறுகிறது.
மக்களவை இறுதிக்கட்ட தேர்தல்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 18வது மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. அதாவது, இன்று இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால், காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்களான வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளில்லும், யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள ஒரு தொகுதியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், பீகாரில் உள்ள 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் உள்ள 3 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளிலும், 42 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இன்று வாக்குப்பதிவு முடியும் நிலையில் இன்று மாலை 5 மணிக்கு மேல் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு வெளியாகவுள்ளது.
LIVE NEWS & UPDATES
-
Exit Poll 2024: மீண்டும் மோடி ஆட்சி… கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
மொத்தமுள்ள 543 மக்களவை இடங்களுக்கான கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளன. தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 346 இடங்கள் கிடைக்கும். அதே சமயம் இந்திய கூட்டணிக்கு 162 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 35 இடங்கள் மற்றவர்களின் கணக்கில் வரலாம். பாஜக மட்டும் 311 இடங்களைப் பெற முடியும் என கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.
-
Uttar Pradesh Exit Poll 2024: உ.பி.யில் எந்த கட்சிக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
- பாஜக – 62 இடங்கள்
- காங்கிரஸ் -2 இடங்கள்
- எஸ்பி – 11 இடங்கள்
- பிஎஸ்பி – 0 (10 இடங்கள் இழப்பு)
- ஆர்.எல்.டி – 2 இடங்கள்
-
Uttar Pradesh Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… உத்தர பிரதேசம் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
உத்தர பிரதேசம் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/I78sO1LzRe
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Uttar Pradesh Exit Poll 2024: உ.பி.யில் தொடர்கிறது தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆதிக்கம்!
உ.பி.யில் தேசிய ஜனநாயக கூட்டணியின் செல்வாக்கு தொடர்கிறது. பாஜக கூட்டணி 66 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாஜக மட்டும் 62 இடங்களை கைப்பற்றும் என்றும் கூறப்படுகிறது. அதே சமயம் 14 இடங்கள் இந்தியா கூட்டணிக்கும் கிடைக்கலாம் என்று தெரிகிறது. கட்சி வாரியாகப் தெரிவித்தால் பாஜக 62 இடங்களையும், காங்கிரஸ் 3 இடங்களையும், சமாஜவாதி 11 இடங்களையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Assam Exit Poll 2024: அசாம் மாநிலத்தில் வெற்றி வாகை சூடப்போவது யார்?
அசாமில் மொத்தம் 14 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இதில் பாஜக கூட்டணி 11 இடங்களையும், காங்கிரஸ் கூட்டணி 2 இடங்களையும் பெறலாம். மற்றவை ஒரு இடத்திலும் வெற்றிப் பெறலாம் என கருத்துக்கணிப்பு முடிவில் தெரியவந்துள்ளது.
-
Jammu and Kashmir Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… ஜம்மு காஷ்மீர் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
ஜம்மு காஷ்மீர் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/z2m2BgXQdH
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Odisha Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… ஒடிசா ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
ஒடிசா ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/ysly3O3ufk
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Odisha Exit Poll 2024: ஒடிசாவில் NDA மற்றும் INDIA கூட்டணி எத்தனை இடங்களை பிடிக்க வாய்ப்பு?
ஒடிசாவில் மொத்தம் 21 மக்களவை தொகுதிகள் உள்ளன. இதில் NDA கூட்டணிக்கு 13 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதே நேரத்தில் INDIA கூட்டணி 7 இடங்களையும் மற்றவை 1 வெற்றிபெறலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
Punjab Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… பஞ்சாப் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
பஞ்சாப் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/SjvswFYeFJ
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Jammu and Kashmir Exit Poll 2024: ஜம்மு-காஷ்மீரில் வெற்றி பெறுமா பாஜக… கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
ஜம்மு காஷ்மீரில் 5 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக 2 இடங்களையும், NC ஒரு தொகுதியையும் PDP ஒரு தொகுதியையும் மற்றவர்கள் 1 இடத்தையும் பெறலாம் என கருத்துக்கணிப்பு கூறுகிறது.
-
Haryana Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… ஹரியானா ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
ஹரியானா ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/B69OnEE5vf
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Himachal Pradesh Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… இமாச்சல் பிரதேசம் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
இமாச்சல் பிரதேசம் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/wyUC85NV7G
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Himachal Pradesh Exit Poll 2024: இமாச்சலில் பாஜக வெற்றி… எம்பி ஆகிறாரா கங்கனா ரனாவத்?
இமாச்சல பிரதேசத்தில் பாஜக வெற்றி பெற முடியும் என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது. இங்குள்ள 4 இடங்களையும் பாஜக கைப்பற்ற வாய்ப்பு உள்ளது எனவும் மாண்டி தொகுதியில் போட்டியிடும் நடிகை கங்கனா ரனாவத் எம்பி ஆகவும் வாய்ப்பு உள்ளது என கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
-
Haryana Exit Poll 2024: ஹரியானாவில் தொகுதிகளை இழக்கும் பாஜக… கருத்துக்கணிப்பு கூறுவது என்ன?
ஹரியானாவில் 10 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 8 இடங்களும், இந்திய கூட்டணிக்கு 2 இடங்களும் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்சி வாரியாகப் பேசினால் பாஜக 8 இடங்களையும் காங்கிரஸுக்கு 2 இடங்களையும் பிடிக்கலாம். இங்கு பாஜக முந்தைய தேர்தல் நிலவரப்படி 2 இடங்களை இழந்துள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Punjab Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பஞ்சாப் மாநிலத்தின் நிலை என்ன?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் பஞ்சாப் மாநிலத்தில் முடிவுகள் வெளியாகியுள்ளன. அதன்படி இங்கு மொத்தம் 13 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. பாஜக 3 இடங்களும், காங்கிரஸ் 5 இடங்களும், ஆம் ஆத்மி கட்சி 3 இடங்களும், சிரோமணி அகாலி தளம் 1 இடமும் கிடைக்கும் எனவும் மற்றவை 1 என எதிர்பார்க்கப்படுகிறது.
-
West Bengal Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… மேற்கு வங்கம் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
மேற்கு வங்கம் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/JqivRjF3ZR
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
West Bengal Exit Poll 2024: NDA மற்றும் INDIA எத்தனை இடங்களில் வெற்றி பெறும்?
மேற்கு வங்கத்தில் மொத்தம் 42 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு NDA கூட்டணி 17 இடங்களில் வெற்றி பெறலாம் என்று தெரியவந்துள்ளது. மேலும் INDIA கூட்டணி 1 இடத்தையும் மற்ற கட்சிகள் 24 இடங்களில் வெற்றி பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Exit Poll 2024: முன்னிலையில் உள்ளது யார்? INDIA கூட்டணி அல்லது NDA கூட்டணி
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகளில் இதுவரை வெளிவந்துள்ள புள்ளிவிவரங்களின்படி, தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 187 இடங்களும், இந்திய கூட்டணிக்கு 108 இடங்களும் கிடைக்கும். 20 இடங்கள் மற்றவர்களின் கணக்கில் வரலாம் என்றும் தெரியவந்துள்ளது.
-
Jharkhand Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… ஜார்க்கண்ட் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
ஜார்க்கண்ட் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/gCs0AV3KqR
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
நிதிஷுக்கு இழப்பு
கடந்த காலத்தை விட பீகாரில் பாஜகவுக்கு எந்த இழப்பும் இல்லை. என்.டி.ஏ-வுடன் சென்றதால் நிதிஷ் குமார் தோல்வியை சந்தித்துள்ளார். கடந்த முறை காங்கிரசுக்கு 1 இடம் கிடைத்தது. இம்முறை 2 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
-
ஜார்க்கண்டில் பாஜகவுக்கு 12 இடங்கள் கிடைக்கும்
14 இடங்களைக் கொண்ட ஜார்க்கண்டில் பாஜக 12 இடங்களைப் பெறலாம். அதே சமயம் இந்திய கூட்டணியின் கணக்கில் 1 இடம் மட்டுமே சேரும்.
-
Maharashtra Exit Poll 2024: மகாராஷ்டிராவில் எந்த கட்சி எத்தனை இடங்களை பிடிக்கும்?
மகாராஷ்டிராவில் 48 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு என்டிஏ 22 இடங்களையும், இந்தியா 25 இடங்களையும் பெறலாம் என்று தெரிகிறது. மேலும் கட்சி வாரியாகப் பேசினால், பாஜக 18 இடங்களையும், காங்கிரஸ் 5 இடங்களையும் பெறலாம். சிவசேனா (ஷிண்டே பிரிவு) 4 இடங்களையும், சிவசேனா (தாக்கரே பிரிவு) 14 இடங்களையும் பெறலாம். சரத் பவாரின் சிவசேனாவுக்கு 6 இடங்கள் கிடைக்கலாம் என்று தெரியவந்துள்ளது.
-
Maharashtra Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… மகாராஷ்டிரா ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
மகாராஷ்டிரா ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/HbYyf0lhLS
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Gujarat Exit Poll 2024: குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெறும்!
குஜராத்தில் பாஜக அமோக வெற்றி பெறும் என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு தெரிவித்துள்ளது. இங்கு 26 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. கருத்துக்கணிப்பின்படி 26 தொகுதிகளிலும் பாஜக வெற்றி பெறுகிறது.
வாக்கு சதவீதம்
- NDA – 71.59%
- இந்தியா – 22%
- OTH – 6.41%
-
Gujarat Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… குஜராத் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
குஜராத் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/SY26Jj0imR
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Chhattisgarh Exit Poll 2024: சத்தீஸ்கர் கருத்துக்கணிப்பில் வெற்றி யாருக்கு?
சத்தீஸ்கரில் மொத்தம் 11 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. இங்கு பாஜக அனைத்து 11 இடங்களையும் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது காங்கிரஸ் இங்கு ஒரு தொகுதியில் கூட வெற்றிபெறாது என்று கருத்துக்கணிப்பு முடிவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்கு சதவீதம்
- NDA – 58.97%
- இந்தியா – 32.36%
- OTH – 8.67%
-
Chhattisgarh Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… சத்தீஸ்கர் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
சத்தீஸ்கர் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/TQuyOZlwoL
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு இது வெறும் யூகம், முடிவு அல்ல!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் நாங்கள் வழங்கும் இந்த புள்ளிவிவரங்களும் மாறலாம். ஜூன் 4ஆம் தேதி இறுதிப் புள்ளி விவரங்கள் வெளியாகும். அன்று தேர்தல் முடிவுகளை தேர்தல் ஆணையம் அறிவிக்கும். அதுவே இறுதியான முடிவு ஆகும்.
-
Madhya Pradesh Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… மத்திய பிரதேசம் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
மத்திய பிரதேசம் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/V5XPt3vyWW
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Exit Poll 2024: கருத்துக்கணிப்பில் முன்னோக்கி செல்கிறது இந்திய கூட்டணி!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் இதுவரை வெளியான புள்ளி விவரங்களின்படி, இந்திய கூட்டணிக்கு 75 இடங்களும், தேசிய ஜனநாயக கூட்டணிக்கு 70 இடங்களும் கிடைக்கும் என்று தெரியவந்துள்ளது.
-
Rajasthan Exit Poll 2024: ராஜஸ்தானில் பாஜகவுக்கு எத்தனை இடங்கள் கிடைக்கும்?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகளின்படி, 25 மக்களவைத் தொகுதிகள் உள்ள ராஜஸ்தானில் பாஜக படுதோல்வி அடையலாம் என்று தெரியவந்துள்ளது. NDA 19 இடங்களைப் பெறலாம். INDIA கூட்டணிக்கு 5 இடங்கள் கிடைக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Rajasthan Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… ராஜஸ்தான் ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
ராஜஸ்தான் ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll #Rajasthan pic.twitter.com/pC3zvyCGnP
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Exit Poll 2024 :இதுவரை வெளியான கருத்துக்கணிப்பில் எந்த கட்சி எத்தனை இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்?
- கேரளாவில் பாஜக 1, காங்கிரஸ் 13, சிபிஐ(எம்) 2, சிபிஐ 1.
- கர்நாடகா- பாஜக 18 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும், ஜேடிஎஸ் 2 இடங்களையும் பெறலாம்.
- டெல்லியில் உள்ள ஏழு தொகுதிகளிலும் பாஜக வெற்றியை பதிவு செய்யலாம்.
- தெலுங்கானாவில் பாஜக 7 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும் பெறலாம்.
- தமிழகத்தில் பாஜக 2 இடங்களையும், காங்கிரஸ் 8 இடங்களையும், திமுக 21 இடங்களையும் பெறலாம். பாமக 1 இடம் பெறலாம்.
- ஆந்திராவில் பாஜக 2 இடங்களையும், காங்கிரஸ் 0 இடங்களையும், தெலுங்கு தேசம் கட்சி 9 இடங்களையும், ஒய்எஸ்ஆர்சிபி 13 இடங்களையும் பெறலாம்.
-
Delhi Exit Poll 2024: டெல்லியில் ஆம் ஆத்மிக்கும் – காங்கிரசுக்கும் இடையிலான நட்பு என்ன மாற்றம் செய்யும்?
ஆம் ஆத்மி மற்றும் காங்கிரஸுக்கு இடையேயான நட்பு டெல்லியில் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தவில்லை. இங்கு பாஜக மீண்டும் வெற்றிபெற வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. பாஜக 7 இடங்களில் வெற்றி பெறலாம். அதாவது காங்கிரஸின் கண்ணையா குமார் கூட வெற்றி பெற வாய்ப்பில்லை என்று தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Delhi Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… டெல்லி ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
டெல்லி ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll #delhi pic.twitter.com/178MQHvfPu
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Telangana Exit Poll 2024: தெலுங்கானாவில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவு இதோ!
தெலுங்கானா தேர்தலின் கருத்துக்கணிப்பு வெளியாகியுள்ளது. இங்கு பாஜக இரண்டாவது பெரிய கட்சியாக மாறலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இங்கு பாஜகவிற்கு 7 இடங்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைக்கலாம் எனவும் ஐதராபாத் தேர்தலில் AIMIM தலைவர் ஓவைசி வெற்றி பெறலாம் என்றும் கருத்துக்கணிப்பு முடிவுகள் தெரிவிக்கின்றது.
-
Telangana Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… தெலங்கானா ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
தெலங்கானா ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/dwsGVnlhbw
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Karnataka Exit Poll 2024: கர்நாடகாவில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவு இதோ!
கர்நாடகாவில் பாஜக தோல்வியை சந்தித்து வருகிறது. 2019 இல் பாஜக 25 இடங்களை வென்று இருந்தது. ஆனால் தற்போதைய கருத்துக்கணிப்புகளின்படி இந்தத் தேர்தலில் பாஜக 18 இடங்களைப் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் காங்கிரஸ் 8 இடங்களைப் பெறலாம் எனவும் ஜேடிஎஸ் 2 இடங்களைப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
Karnataka Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்… கர்நாடகா ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
கர்நாடகா ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/UGihCVg2Bu
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Kerala Exit Poll 2024: கேரளாவில் வெற்றி யாருக்கு? கருத்துக்கணிப்பு முடிவு இதோ!
தமிழகத்தைத் தொடர்ந்து கேரளாவில் இருந்தும் புள்ளிவிவரங்கள் வெளியாகியுள்ளன. இங்கு 20 மக்களவைத் தொகுதிகள் உள்ளன. காங்கிரசுக்கு 13 இடங்கள் கிடைக்கலாம். சிபிஐ (எம்) 2 இடங்களையும், சிபிஐ 1 இடத்தையும் பெறலாம். பாஜக ஒரு இடத்தைப் பிடித்து கேரளாவில் காலடி பதிக்கும் என்று கருத்துக்கணிப்பில் தெரியவந்துள்ளது.
-
Kerala Exit Poll 2024: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.. கேரளா ரிசல்ட்!
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்..
கேரளா ரிசல்ட்!#ExitPollOnTV9 #ExitPoll2024 #ExitPoll pic.twitter.com/PRZ9UVfa28
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
Tamil Nadu Exit Poll 2024: கருத்துக்கணிப்பில் பாஜகவுடன் கூடணி வைத்த பாமக வெற்றி பெற்றதா?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி வைத்த பாட்டாளி மக்கள் கட்சி ஒரு இடத்தில் வெற்றி பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கருத்துக்கணிப்பில் விசிக – மதிமுகவின் நிலை என்ன?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பில் தமிழகத்தில் திமுக கூட்டணியில் உள்ள விசிக மற்றும் மதிமுக தலா 1-1 இடங்களை பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கருத்துக்கணிப்பில் வெற்றி பெற்றாரா ஓபிஎஸ்?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் தமிழகத்தில் அதிமுகவில் இருந்து வெளியே வந்து பாஜகவுடன் கூட்டணி வைத்த ஓபிஎஸ் வெற்றி பெறுவார் என்று தெரியவந்துள்ளது.
-
கருத்துக்கணிப்பு முடிவில் தமிழகத்தில் எந்த கட்சிக்கு எத்தனை சீட்டுகள் வெற்றி?
Exit Poll : தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.. தமிழ்நாடு ரிசல்ட்!
திமுக கூட்டணி – 35 சீட்டுகள்
பாஜக கூட்டணி – 4 சீட்டுகள்
மற்றவை – 0#ExitPollOnTV9 #ExitPoll2024 pic.twitter.com/2XDiwTZz30— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
கருத்துக்கணிப்பு முடிவில் அதிமுக நிலை என்ன?
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவில் தமிழகத்தில் அதிமுகவிற்கு ஒரு இடம் கூட வெற்றி இல்லை என்று தெரியவந்துள்ளது.
-
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.. தமிழ்நாடு ரிசல்ட்!
* திமுக கூட்டணி – 35 சீட்டுகள்
* பாஜக கூட்டணி – 4 சீட்டுகள்
* மற்றவை – 0
-
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.. ரிசல்ட் இதோ!
LS Exit Poll Results 2024 LIVE: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு முடிவுகள்.. ரிசல்ட் இதோ!#ExitPollOnTV9 #ExitPoll2024 https://t.co/zA4HY3x1J3
— TV9 Tamil (@TV9Tamil) June 1, 2024
-
வாக்குப்பதிவு முடிந்துவிட்டது, இப்போது கருத்துக்கணிப்பின் முடிவு வந்துள்ளது!
ஏழாவது கட்ட வாக்குப்பதிவு முடிந்தது. இதன் மூலம் அனைத்து வேட்பாளர்களின் வருங்காலமும் இவிஎம்மில் சீல் வைக்கப்பட்டுள்ளது. இப்போது கருத்துக்கணிப்பிற்காக காத்திருக்கிறது. இந்த கருத்துகணிப்பின் மூலம் நாட்டில் யாருடைய ஆட்சி அமைக்கப் போகிறது என்பது ஒரு யூகமாக தெரியவரும். உண்மையான வெற்றி யாருக்கு என்பது ஜூன் 4ம் தேதி முடிவுகள் அறிவிக்கப்படும் போது வெளிவரும்.
-
5 மணி வரை எத்தனை சதவீதம் வாக்குப்பதிவு நடந்துள்ளது?
* மகாராஜ்கஞ்ச் – 58.66%
* கோரக்பூர் – 52.53%
* குஷிநகர் – 56.04%
* தியோரியா – 54.13%
* பான்ஸ்கான் – 50.06%
* கோசி – 53.19%
* சேலம்பூர் – 50.21%
* பல்லியா – 50.56%
* காஜிபூர் – 53.53%
* சண்டௌலி – 58.19%
* வாரணாசி – 54.58%
* மிர்சாபூர் – 55.83%
* ராபர்ட்ஸ்கஞ்ச் – 54.25%
-
கருத்துக்கணிப்பில் கேட்கப்பட்ட கேள்விகள் என்னென்ன?
* ஜூன் 4ஆம் தேதி மூன்றாவது முறையாக மோடி ஆட்சி அமையுமா?
* 400ஐ தாண்டும் என்ற பாஜகவின் கூற்று உண்மையாகுமா?
* 400ஐ தாண்டினால் பாஜகவுக்கு எங்கே லாபம்?
* தெற்கு கோட்டையை உடைப்பதில் பாஜக வெற்றி பெற்றதா?
* உ.பி-பீகாரில் பாஜகவின் சாதனை தொடருமா?
* கட்சிகள் பிளவுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் முடிவு என்ன?
* எந்தெந்த மாநிலங்களில் பாஜக தோல்வியை சந்திக்கும்?
* டெல்லியில் கெஜ்ரிவால் சிறைக்கு சென்ற தாக்கம் இருக்குமா?
-
தமிழகத்தில் காலடி பதிக்குமா பாஜக?
தமிழகத்தில் கடந்த லோக்சபா தேர்தலில்,பாஜகவின் ஓட்டு சதவீதம் அதிகரித்திருந்தாலும், பா.ஜ.க., ஒரு இடம் கூட ஜெயிக்கவில்லை. தமிழகத்தில் கடந்த தேர்தலில் காங்கிரசுக்கு 8 இடங்கள் கிடைத்தன. திமுக 23 இடங்களையும், சிபிஐ மற்றும் சிபிஎம் தலா 2 இடங்களையும் பெற்றன.
-
இன்று மாலை 6.30-க்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள்!
தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்புகள் இன்று மாலை 6.30க்கு வரும். TV9 Bharatvarsh, POLLSTRAT மற்றும் PEOPLE’S INSIGHT போன்ற 1 கோடி மாதிரிக் கருத்துக்கணிப்புகளால்., நாட்டில் யாருடைய ஆட்சி அமைக்கப் போகிறது என்பது உங்களுக்குத் தெரியும். ஆனால், ஜூன் 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியாகும்.
-
7 கட்டங்களில் எத்தனை சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளன?
முதல் கட்டம் 66.14%
இரண்டாவது கட்டம் 66.71%
மூன்றாவது கட்டம் 65.68%
நான்காவது கட்டம் 69.16%
ஐந்தாவது கட்டம் 62.20%
ஆறாவது கட்டம் 63.37%
ஏழாவது கட்டம் 49.68% (பிற்பகல் 3 மணி வரை).
-
எக்ஸிட் போல் என்பது இதுதான்
எக்ஸிட் போல் என்பது ஒரு வகையான தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு ஆகும், இது வாக்காளர்களின் பதில்களின் அடிப்படையில் தயாரிக்கப்படுகிறது.
-
எத்தனை இடங்கள் கிடைக்கும்
நாட்டில் உள்ள பல்வேறு ஏஜென்சிகள் கருத்துகணிப்புள வெளியிடும். இந்தக் கருத்துக் கணிப்புகள் மூலம் ஒவ்வொரு கட்சிக்கும் எத்தனை இடங்கள் கிடைக்கும் என மதிப்பிடப்படும்.
-
இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள்
2024 மக்களவை தேர்தலில் களத்தில் இருக்கும் 8,360 வேட்பாளர்களின் விதியை 97 கோடி வாக்காளர்கள் தீர்மானிக்க உள்ளனர். இறுதிக்கட்ட தேர்தல் முடிவுக்கு வரும் நேரத்தில், வெற்றி, தோல்வி ஏற்கனவே கணிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், இன்று மாலை 6 மணிக்கு தேர்தலுக்கு பிந்தைய கருத்துகணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளன.
-
3 மணி வரை எவ்வளவு வாக்குப்பதிவு நடந்தது?
பீகார் – 42.95 சதவீதம் சண்டிகர் – 52.61 சதவீதம் இமாச்சல பிரதேசம் – 58.41 சதவீதம் ஜார்கண்ட் – 60.14 சதவீதம் ஒடிசா – 49.77 சதவீதம் பஞ்சாப் – 46.38 சதவீதம் உத்தரபிரதேசம் – 46.83 சதவீதம் மேற்கு வங்காளம் – 58.46 சதவீதம்
-
வெற்றி 411-417 ஆக இருக்கும் – நிஷிகாந்த் துபே
இன்றைய 57 இடங்களிலும் பாஜக வெற்றி பெறும். எனவே நம் வெற்றி 411-417 ஆக இருக்கும் – நிஷிகாந்த் துபே
-
தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது
மேற்கு வங்கம் பங்கரில் TMC மற்றும் ISF தொண்டர்களிடையே மோதல் ஏற்பட்டது
-
பொதுமக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள் – ஷெஹ்சாத் பூனாவாலா
டெல்லியில் இன்று நடைபெறும் இந்தியா பிளாக் கூட்டத்தில் பாஜக செய்தித் தொடர்பாளர் ஷெஹ்சாத் பூனாவாலா கூறியதாவது, மல்லிகார்ஜுன் கார்கேவின் விருப்பம் எதுவாக இருந்தாலும், அது பொதுமக்களின் விருப்பமா என்பதுதான் கேள்வி? காங்கிரஸுக்கோ இந்தியக் கூட்டணிக்கோ ஆட்சிக்கு வருவதற்கு பொதுமக்கள் வாய்ப்பளிக்க மாட்டார்கள் –
-
மதியம் 1 மணி வரை 40.09% வாக்குகள் பதிவு
- பீகார் – 35.65%
- சண்டிகர்-40.14%
- இமாச்சல பிரதேசம் – 48.63%
- ஜார்கண்ட் – 46.80%
- ஒடிசா – 37.64%
- பஞ்சாப் – 37.80%
- உத்தரப் பிரதேசம்-39.31%
- மேற்கு வங்காளம்-45.07%
-
அராஜகத்தை பரப்ப முயலும் டிஎம்சி ஏஜென்டுகள் – ரேகா பத்ரா
மேற்கு வங்க மாநிலம் பாசிர்ஹத் தொகுதியில் இருந்து பாஜக வேட்பாளர் ரேகா பத்ரா வாக்களித்தார்
-
மேற்கு வங்கத்தில் வாக்குப்பதிவின் போது பல இடங்களில் வன்முறை
மேற்கு வங்கத்தில் டைமண்ட் ஹார்பர், டம்டம் போன்ற பல இடங்களில் வன்முறைச் சம்பவங்கள் நடந்துள்ளன. தங்களை வாக்களிக்க அனுமதிக்கவில்லை என்று பாஜகவினர் குற்றம் சாட்டியுள்ளனர்
-
8 மாநிலங்களில் காலை 11 மணி வரை – 26.30%
- பீகார் – 24.25%
- சண்டிகர்-25.03%
- இமாச்சல பிரதேசம் – 31.92%
- ஜார்கண்ட் – 29.55%
- ஒடிசா – 22.64%
- பஞ்சாப் – 23.91%
- உத்தரப் பிரதேசம்-28.02%
- மேற்கு வங்காளம்-28.10%
-
முதல்வர் நிதிஷ்குமார் வாக்களித்தார்
பீகார் முதல்வர் நிதிஷ்குமார் பக்தியார்பூரில் வாக்களித்தார்.
#WATCH बख्तियारपुर, बिहार: #LokSabhaElections2024 के अंतिम में बिहार के मुख्यमंत्री नीतीश कुमार ने मतदान किया। pic.twitter.com/jqgrw8ulJK
— ANI_HindiNews (@AHindinews) June 1, 2024
-
ரவிசங்கர் பிரசாத் வாக்களித்தார்
பீகாரில் உள்ள பாட்னா சாஹிப் மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் ரவிசங்கர் பிரசாத் வாக்களித்தார்.
-
பீகாரில் அதிர்ச்சிகரமான முடிவுகள் இருக்கும் – தேஜஸ்வி யாதவ்
பாட்னா: பீகார் முன்னாள் துணை முதல்வரும், ஆர்ஜேடி தலைவருமான தேஜஸ்வி யாதவ் வாக்களித்தார். வாக்களித்த பின்னர் பேசிய அவர், அரசியல் சாசனம், இடஒதுக்கீடு, ஜனநாயகம் ஆகியவற்றை ஒழிக்க விரும்புவோருக்கு வீடுகளை விட்டு வெளியே வந்து வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன் என்றார்
-
பெருமை கொள்கிறேன் – ராகுல்காந்தி
கொளுத்தும் வெயிலிலும் நீங்கள் அனைவரும் ஜனநாயகத்தையும், அரசியல் சாசனத்தையும் பாதுகாக்க வாக்களிக்க வந்தீர்கள் என்பதில் பெருமை கொள்கிறேன் – ராகுல்காந்தி
-
8 மாநிலங்களில் காலை 9 மணி வரை 11.31% வாக்குகள் பதிவு
- பீகார் – 10.58%
- சண்டிகர்-11.64%
- இமாச்சல பிரதேசம் – 14.35%
- ஜார்கண்ட் – 12.15%
- ஒடிசா – 7.69%
- பஞ்சாப் – 9.64%
- உத்தரப் பிரதேசம்-12.94%
- மேற்கு வங்காளம்-12.63%
-
பாஜக தலைவரும், நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி வாக்களித்தார்
பாஜக தலைவரும் நடிகருமான மிதுன் சக்ரவர்த்தி கொல்கத்தாவில் உள்ள பெல்காசியாவில் வாக்களித்தார். ‘வாக்களிப்பது எனது கடமை. 40 நிமிடம் வரிசையில் நின்று வாக்களித்தேன். எனது அரசியல் கடமையை நிறைவேற்றினேன்’ என்றார்.
-
பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் வாக்களித்தார்
Loksabha Election 2024: சங்ரூர்: பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் தனது மனைவியுடன் வாக்களித்தார்.
-
ஹிமாச்சல்: பாஜக வேட்பாளர் கங்கனா வாக்களித்தார்.
இமாச்சலப் பிரதேசத்தின் மண்டி மக்களவைத் தொகுதியில் பாஜக வேட்பாளர் கங்கனா ரனாவத் வாக்களித்தார். இந்த தொகுதியில் காங்கிரஸ் கட்சி விக்ரமாதித்ய சிங்கை நிறுத்தியுள்ளது.
-
ஒடிசாவிலும் தேர்தல்
Loksabha Election 2024: ஒடிசாவில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளிலும், 42 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது..
-
உபி, பீகார், ஜார்க்கண்டில் தேர்தல்
Loksabha Election 2024: உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், பீகாரில் உள்ள 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் உள்ள 3 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
-
எங்கெங்கு இன்று தேர்தல்?
Loksabha Election 2024: பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளில்லும், யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள ஒரு தொகுதியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது.
-
காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு
Loksabha Election 2024: இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால், காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்களான வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
-
57 தொகுதிகளுக்கு தேர்தல்
Loksabha Election 2024: எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது.
-
தேர்தல் இன்றுடன் முடிகிறது
பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 18வது மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. அதாவது, இன்று இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது.
Published On - Jun 01,2024 9:03 AM