5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. 49 தொகுதிகளில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!

மக்களவை தேர்தலின் ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 20) 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதில், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், உத்த பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் தொகுதி என 49 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது.

5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. 49 தொகுதிகளில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!
ராகுல் காந்தி – ராஜ்நாத் சிங் – ஸ்மிருதி இரானி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 18 May 2024 08:53 AM

ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் 7 கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், நாளை மறுநாள் நடக்கிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. முதல்கட்டத்தில் 66.14 சதவீதமும், 2ஆம் கட்டத்தில் 66.71 சதவீதமும், 3ஆம் கட்டத்தில் 65.68 சதவீதமும், 4ஆம் கட்டத்ல் 64 சதவீத வாக்குகளும் பதிவாகி உள்னன.  இந்த நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நாளை மறுநாள் (மே 20) 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெறுகிறது. அதில், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், உத்த பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் தொகுதி என 49 தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.

Also Read : ஸ்வாதி மாலிவால் விவகாரம்.. கெஜ்ரிவால் உதவியாளருக்கு சம்மன்.. 10 முக்கிய நிகழ்வுகள்!

தொகுதிகள் விவரம்:

  1. பீகார் – சிதாமர்ஹி, முசாபர்பூர், சரண், ஹாஜிபூர், மதுபானி
  2. மகாராஷ்டிரா – துலே, டிண்டோரி, நாசிக், கல்யாண், பால்கர், பிவாண்டி, வடகிழககு, மும்பை வட மத்திய, மும்பை தெற்கு, மத்திய மும்பை, தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு
  3. ஒடிசா – பர்கர், போலங்கிர், கந்தமால், அஸ்கா, சுந்தர்கர்
  4. உத்தர பிரதேசம் – லக்னோ, அமேதி, ரேபரேலி, ஜலான், ஜான்சி, மோகன்லால்கஞ்ச், கௌசாம்பி, பாரபங்கி, பைசாபாத், கைசர்கஞ்ச், கோண்டா, ஹமிர்பூர், பண்டா
  5. மேற்கு வங்கம் – ஆரம்பாக், ஸ்ரீராம்பூர், உலுபெரியா, பாரக்பூர், பங்கான், ஹூக்ளி, பங்கான், ஹவுரா
  6. ஜார்கண்ட் – சத்ரா, கோடர்மா, ஹசாரிபாக்
  7. ஜம்மு காஷ்மீர் – பாரமுல்லா
  8. லடாக் – லடாக்

இன்றுடன் ஓய்கிறது பரப்புரை:

மேற்குறிப்பிட்ட தொகுதிகளில் நாளை மறுநாள் வாக்குப்பதிவு நடைபெறுவதை முன்னிட்டு தேர்தல் பரப்புரை தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவிற்கான தேர்தல் பரப்புரை இன்று மாலை 6 மணியுடன் ஓய்கிறது. இதையொட்டி, வேட்பாளர்கள் தங்கள் போட்டியிடும் தொகுதியில் இறுதிகட்ட வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் பல்வேறு இடங்களில் இறுதி கட்ட பிரச்சாரத்தில் இன்று ஈடுபடுகின்றனர்.

நட்சத்திர வேட்பாளர்கள்:

ஐந்தாம் கட்ட தேர்தலில் பல்வேறு ஸ்டார் வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதன்படி, உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதி தொகுதியில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி, காங்கிரஸின் கே.எல்.சர்மா, கைசர்கஞ்ச் தொகுதியில் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங் களம்காண்கின்றனர். லக்னோவில் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகாரில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சார்யா போட்டியிடுகின்றனர். மேலும், மும்பை வடக்கில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல், மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேவின் மகன் கல்யாணைச் சேர்ந்த டாக்டர் ஸ்ரீ காந்த் ஷிண்டே, ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உமர் அப்துல்லா, மும்பை வட மத்தியில் மும்பை பிராந்திய காங்கிரஸ் தலைவர் வர்ஷா கெய்க்வாட் உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Also Read : சடலத்துடன் செல்ஃபி.. மனைவியை கொடூரமாக கொன்ற கணவர்.. பின்னணி என்ன?

 

 

Latest News