5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lok Sabha Election 2024 Result date: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஜூன் 4ம் தேதி.. வெற்றி யாருக்கு?

India General Election Vote Counting Date: வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு மாநிலங்களிலும் வாக்குகளை எண்ணுவதற்கான அதிகாரிகள், பாதுகாப்புக்காக ராணுவம் போலீஸ் என அனைத்து தரப்பும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளது. தமிழ்நாடு கேரளா தெலங்கானா பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக கருதப்படுகிறது. அதேபோல குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் பாஜகவுக்கு சாதகமாக கருதப்படுகிறது.

Lok Sabha Election 2024 Result date: இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஜூன் 4ம் தேதி.. வெற்றி யாருக்கு?
மோடி – ராகுல் காந்தி
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 29 May 2024 16:36 PM

ஜூன் 4ல் தேர்தல் முடிவுகள்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இதுவரை 6 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவானது வரும் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தேதியில், எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களாக கருதப்படும் உத்தரப்பிரதேசம் பீகார் மேற்குவங்கம் ஆகிய மாநிலங்களில் ஏழு கட்டங்களாக வாக்குப்பதிவு நடந்து வருகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி ஒரே கட்டமாக வாக்கு பதிவு நடத்தப்பட்டது.

கேரளாவில் ஒரே கட்டமாக ஏப்ரல் மாதம் 26 ஆம் தேதியும் கர்நாடகாவில் இரண்டு கட்டமாக ஏப்ரல் 26 மே 7 ஆகிய தேதிகளிலும் தேர்தல் நடத்தப்பட்டது. தெலங்கானாவை பொருத்தவரை அந்த மாநிலத்தில் உள்ள 17 தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 13ஆம் தேதி வாக்குப்பதிவு நடத்தப்பட்டது. ஆந்திராவில் மக்களவைத் தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தலும் மே 13ஆம் தேதி நடத்தி முடிக்கப்பட்டது. ஆந்திராவை தவிர ஒடிசா, அருணாச்சல பிரதேசம் சிக்கி மாநிலங்களுக்கும் மக்களவை தேர்தலுடன் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது.

Also Read: மோசடி அழைப்புகள் உஷார்.. இந்த எண்ணில் போன் வந்தால் கவனம்!

எத்தனை தொகுதிகள்?

அருணாச்சலம் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கும் ஆந்திர ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கும் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சூரத் தொகுதியில் பாஜகவை தவிர போட்டியிடமற்ற வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் வாங்கியதால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே சூரத் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளுக்கு ஜூன் மாதம் நான்காம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

வாக்கு எண்ணிக்கைக்காக பல்வேறு மாநிலங்களிலும் வாக்குகளை எண்ணுவதற்கான அதிகாரிகள், பாதுகாப்புக்காக ராணுவம் போலீஸ் என அனைத்து தரப்பும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதி கடைசி கட்ட வாக்குப்பதிவு முடிந்தவுடன் தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்பு முடிவுகள் வெளியாக உள்ளது. தமிழ்நாடு கேரளா தெலங்கானா பஞ்சாப் ஆகிய மாநிலங்கள் இந்தியா கூட்டணிக்கு சாதகமாக கருதப்படுகிறது. அதேபோல குஜராத், மத்திய பிரதேசம், உத்தரப் பிரதேசம், உத்தரகாண்ட், ஹரியானா ஆகிய மாநிலங்கள் பாஜகவுக்கு சாதகமாக கருதப்படுகிறது. மகாராஷ்டிரா மேற்கு வங்கம் கர்நாடகா ராஜஸ்தான் டெல்லி ஆகிய மாநிலங்களில் இந்தியா கூட்டணிக்கும் பாஜகவுக்கும் கடும் போட்டி நிலவுவதாக தகவல்கள் வெளியாகி வருகின்றன.

Also Read: வடகிழக்கு மாநிலத்தை புரட்டி போட்ட ரீமல் புயல்.. 39 பேர் உயிரிழந்த சோகம்!

Latest News