5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

LS Election 2024 Result day holiday: ஜூன் 4ஆம் தேதி பொது விடுமுறையா? தெரிஞ்சுக்கோங்க!

India General Election Vote Counting Date: ஜூன் 4ஆம் தேதி பொதுவிடுமுறை இருக்குமா என்று மக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவின்போது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல,  தேர்தல் முடிவு நாளன்று  பொதுவிடுமுறை அளிக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாகவே, தேசிய விடுமுறை நாட்களான  அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி, ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்களில்  நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது.

LS Election 2024 Result day holiday: ஜூன் 4ஆம் தேதி பொது விடுமுறையா? தெரிஞ்சுக்கோங்க!
மக்களவை தேர்தல் 2024
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 03 Jun 2024 15:44 PM

ஜூன் 4ல் பொது விடுமுறையா?  மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. மக்களை தேர்தல் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இதுவரை 6 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவானது வரும் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தேதியில், எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. எனவே, ஏழு கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே அறிவிக்கப்படுகிறது. வாக்கு எண்ணும் பணியில் அரசு அலுவலர்கள் ஈடுபட உள்ளனர்.

இந்த நிலையில்,  அன்றைய தினம்  அதாவது ஜூன் 4ஆம் தேதி பொதுவிடுமுறை இருக்குமா என்று மக்களுக்கு கேள்வி எழுந்துள்ளது. ஒவ்வொரு மாநிலத்திலும் வாக்குப்பதிவின்போது விடுமுறை அளிக்கப்படுவது வழக்கமான ஒன்றுதான். அதேபோல,  தேர்தல் முடிவு நாளன்று  பொதுவிடுமுறை அளிக்கப்படுமா என்று பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர். பொதுவாகவே, தேசிய விடுமுறைகளான  அக்டோபர் 02 காந்தி ஜெயந்தி, ஏப்ரல் 14 அம்பேத்கர் ஜெயந்தி, ஆகஸ்ட் 15 சுதந்திர தினம், ஜனவரி 26 குடியரசு தினம் ஆகிய நாட்களில்  நாடு முழுவதும் உள்ள அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்படுகிறது. எனவே, ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அன்றைய தினம் நாடு முழுவதும் விடுமுறை அளிக்கப்படுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து எந்த ஒரு அதிகாரப்பூர்வு அறிவிப்பு வெளியாகவில்லை.

Also Read:  இந்தியாவின் எதிர்காலத்தை தீர்மானிக்கப்போகும் ஜூன் 4ம் தேதி.. வெற்றி யாருக்கு?

ஜூன் 4ஆம் தேதி தேர்தல் முடிவுகள்:

நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியுடன் முடிவடைகிறது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவானது வரும் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. இதன்பிறகு, அருணாச்சலம் சிக்கிம் மாநில சட்டப்பேரவை தேர்தல் வாக்கு எண்ணிக்கை வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், மக்களவை தேர்தலுக்கும் ஆந்திர ஒடிசா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கும் வரும் ஜூன் மாதம் நான்காம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற உள்ளது. சூரத் தொகுதியில் பாஜகவை தவிர போட்டியிடமற்ற வேட்பாளர்கள் அனைவரும் தங்கள் வேட்பு மனுவை வாபஸ் வாங்கியதால் பாஜக வேட்பாளர் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. எனவே சூரத் தொகுதியை தவிர்த்து நாடு முழுவதும் உள்ள 542 தொகுதிகளுக்கு ஜூன் மாதம் நான்காம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளது.

Also Read: வடகிழக்கு மாநிலத்தை புரட்டி போட்ட ரீமல் புயல்.. 39 பேர் உயிரிழந்த சோகம்!

 

 

Latest News