5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Lok Sabha Election 2024 Result date: மாஸ் காட்டிய பாஜக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Rewind!

India General Election Vote Counting Date: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 18வது மக்களவை தேர்தல் நாளையுடன் முடிவடைகிறது. இந்த நிலையில், 2019ஆம் தேர்தல் முடிவுகள் குறித்து பார்ப்போம். 2014 தேர்தலில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. வரலாற்றில் இல்லாத வகையில் வெறும் 44 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வென்று அமோ வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஏறக்குறைய 23 கோடி பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர்.

Lok Sabha Election 2024 Result date: மாஸ் காட்டிய பாஜக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Rewind!
பிரதமர் மோடி
umabarkavi-k
Umabarkavi K | Published: 31 May 2024 16:47 PM

2019  தேர்தல் முடிவுகள்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 18வது மக்களவை தேர்தல் நாளையுடன் முடிவடைகிறது. எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. எனவே, ஏழு கட்டங்களில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அன்றைய தினமே அறிவிக்கப்படுகிறது.  இதன்பிறகு அடுத்த ஐந்து நாடுகள் இந்தியாவை யார் ஆளப்போகிறார் என்பது தெரிந்துவிடும். இந்த நிலையில், 2019ஆம் தேர்தல் முடிவுகள் குறித்து பார்ப்போம். 2014 தேர்தலில் பாஜக மட்டும் 282 தொகுதிகளில் வெற்றி பெற்று அமோக வெற்றி பெற்றது. வரலாற்றில் இல்லாத வகையில் வெறும் 44 இடங்களில் வென்று காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. இதன்பின் கடந்த 2019ஆம் ஆண்டு தேர்தலில் பாஜக 303 தொகுதிகளில் வென்று அமோ வெற்றி பெற்றது. இந்த தேர்தலில் ஏறக்குறைய 23 கோடி பேர் பாஜகவுக்கு வாக்களித்தனர். 38 சதவீத வாக்குகளை பெற்ற பாஜக மொத்தமுள்ள 542 தொகுதிகளில் 55 சதவித இடங்களை தன்வசத்திற்கு கொண்டு வந்தது.

Also Read: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன? எவ்வாறு கணக்கிடப்படும்.. முழு விவரம் இதோ!

பாஜக வென்ற மாநிலங்கள்:

இந்தியாவில் அதிக மக்களவை தொகுதியில் இருக்கும் உத்தர பிரசேதத்தில் பாஜக 49.5 சதவீத வாக்குகளை பெற்று, 62 இடங்களில் பாஜக வெற்றி பெற்றது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் 62 இடங்களில் வெற்றி வாகை சூடியது பாஜக. அதேபோல, ஹரியாவில் மொத்தமுள்ள 10 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. மேலும், டெல்லியில் மொத்தமுள்ள 7 தொகுதிகளிலும் பாஜக வென்றது. திரிபுராவில் இருந்த 2 தொகுதிகளிளிலும் பாஜக வென்றது. மேலும், உத்தர காண்டில் உள்ள ஐந்து தொகுதிகளிலும் வென்றது பாஜக.

அடுத்தபடியாக, மத்திய பிரதேசத்தில் மொத்தமுள்ள 29 தொகுதிகளில் 28 இடங்களில் பாஜக கைப்பற்றியது. இதேபோல, ராஜஸ்தானில் ஒரே ஒரு தொகுதியில் மட்டும் பாஜக வெற்றி வாய்ப்பை இழந்தது. மொத்தமுள்ள 25 தொகுதிகளில் 24 இடங்களில் பாஜக வென்றது. மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், பீகார் ஆகிய மூன்று மாநிலங்களில் மொத்தமுள்ள 130 தொகுதிகளில் 58 இடங்களில் பாஜக வென்றது. இந்த மூன்று மாநிலங்கள் 2024 தேர்தலில் முக்கிய பங்காற்றும்.

பாஜக வெல்லாத மாநிலங்கள்:

குஜராத், ஹரியானா, உத்தர காண்ட், மத்திய பிரதேசம், ராஜஸ்தான், கர்நாடாக, ஜார்கண்ட், உத்தர பிரசேதம், மகாராஷ்டிரா, மேற்கு வங்கம், ஹிமாச்சல பிரதேசம், பீகார் ஆகிய 13 மாநிலங்களில் மொத்தமுள்ள 358 தொகுதிகளில் 260 தொகுதிகள் தற்போது பாஜக வசம் உள்ளது. பாஜக வென்ற 303 இடங்களில் இந்த 260 தொகுதிகள் 85 சதவீதமாகும்.

அந்தமான் & நிகோபார் தீவில் மொத்தமுள்ள ஒரு தொகுதியில் காங்கிரஸ் வென்ற நிலையில், பாஜக தோல்வியடைந்தது. புதுச்சேரியிலும் பாஜக தோல்வியடைந்தது. ஆந்திராவில் மொத்தமுள்ள 25 தொகுதிகளில் பாஜக ஒரு தொகுதியில் கூட வெல்லவில்லை. இங்கு YSR காங்கிரஸ் 22 இடங்களும், தெலுங்கு தேசம் 3 இடங்களும் வென்றது. 39 தொகுதிகளை கொண்ட தமிழ்நாட்டில் ஒரு இடத்தில் கூட பாஜக வெல்லவில்லை. இங்கு திமுக 24 இடங்களிலும், காங்கிரஸ் 8 இடங்களிலும் வென்றது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: அடித்து தூக்கிய மோடி.. 3வது இடத்தில் திமுக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Recap!

Latest News