Lok Sabha Election Results: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. இந்தியாவை ஆளப்போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை!

மக்களவைத் தேர்தல் முடிவுகள்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவைத் தேர்தல் வாக்குப்பதிவு நடந்து முடிந்த நிலையில், நாளை வாக்கு எண்ணிக்கை நடைபெறுகிறது. தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 ஆயிரம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  குறிப்பாக தலைநகர் சென்னையில் 3 இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களில் தலா 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Lok Sabha Election Results: உச்சக்கட்ட எதிர்பார்ப்பு.. இந்தியாவை ஆளப்போவது யார்? நாளை வாக்கு எண்ணிக்கை!

நாளை வாக்கு எண்ணிக்கை

Published: 

03 Jun 2024 08:32 AM

நாளை வாக்கு எண்ணிக்கை: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 543 தொகுதிளை கொண்ட இந்திய நாடாளுமன்றத்துக்கு கடந்த 19ஆம் தேதி தொடங்கி கடந்த 1ஆம் தேதி வரை ஏழு கட்டங்களாக தேர்தல் நடந்தது. இதில் தமிழ்நாட்டில் 39 தொகுதிகள் மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி என 40 தொகுதிகளில் கடந்த ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக தேர்தல் நடைபெற்றது. மேலும், அரசியில் முக்கியத்துவம் வாய்ந்த மாநிலங்களான உத்தர பிரதேசம், பீகார், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ஏழு கட்டங்களான தேர்தல் நடைபெற்ற முடிந்தது. இந்த நிலையில், நாடு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நாளை நடைபெறுகிறது. நாளை காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்குகிறது. முதலில் 8 மணிக்கு தபால் வாக்கு எண்ணிக்கை தொடங்கும். 8.30 மணி முதல் மின்னணு இயந்திரங்களின் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். இருப்பினும், தபால் வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவித்த பிறகே, மின்னணு இயந்திர இறுதி சுற்று வாக்கு எண்ணிக்கை முடிவை அறிவிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டை பொருத்தவரையில் 39 தொகுதிகளுக்கான வாக்கு எண்ணும் பணி 39 மையங்களில் உள்ள 43 கட்டிடங்களில் நடைபெற உள்ளது. இந்த மையங்களில் ஒரு சட்டமன்ற தொகுதிக்கு ஒரு அறை வீதம் 235 அறைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. ஒவ்வொரு அறையிலும் 14 மேஜைகள் போடப்பட்டுள்ளது. அதாவது, மொத்தம் 3,300 மேஜைகளில் வாக்கு எண்ணும் பணி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் ஒவ்வொரு மேஜையிலும் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வாக்கு எண்ணும் பணி கண்காணிக்கப்படும். ஒவ்வொரு தொகுதிக்கும் நியமிக்கப்பட்ட தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் வாக்கு எண்ணிக்கை நடைபெறும். ஒவ்வொரு சுற்று முடிவிலும் வாக்குகளின் எண்ணிக்கை வெளியாகும்.

Also Read: இன்று நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு.. எந்தெந்த டோல்கேட் தெரியுமா?

உச்சக்கட்ட பாதுகாப்பு!

இதனால், தமிழ்நாடு முழுவதும் பலத்த போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் வாக்கு எண்ணும் மையங்களில் சுமார் 40 ஆயிரம் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும், 60 ஆயிரம் போலீசார் ரோந்து பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். மொத்தமாக தமிழ்நாடு முழுவதும் 1 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.  ஒவ்வொரு வாக்கு எண்ணும் மையங்களிலும், மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு துப்பாக்கி ஏந்திய மத்திய ஆயுதப்படை போலீசார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டுள்ளனர். பாதுகாப்பு பணியில் ஆயுதப்படை போலீசாருக்கு அடுத்தபடியாக 2வது அடுக்காக மாநில ஆயுதப்படை போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். 3வது அடுக்காக உள்ளூர் போலீசார் வாக்கு எண்ணும் மையங்களின் நுழைவாயிலில் பாதுகாப்பு பணிக்கு ஈடுபட்டுள்ளனர்.

குறிப்பாக தலைநகர் சென்னையில் 3 இடங்களில் வாக்கு எண்ணும் பணி நடைபெறும். தென்சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி சென்னை கிண்டியில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெறும். மத்திய சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி நுங்கம்பாக்கம் லயோலா கல்லூரியிலும், வட சென்னை தொகுதிக்கான வாக்கு எண்ணும் பணி மயிலாப்பூரில் உள்ள ராணி மேரி கல்லூரியிலும் நடைபெறுகிறது. இந்த 3 வாக்கு எண்ணும் மையங்களில் தலா 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Also Read: தமிழகத்தில் கொட்டப்போகும் கனமழை.. இங்கெல்லாம் குளுகுளு கிளைமேட்.. வானிலை மையம்!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!