அம்மாடியோவ்! தேர்தல் நேரத்தில் ரூ.8,889 கோடி பறிமுதல்.. குஜராத்தில் தான் அதிகம்! - Tamil News | | TV9 Tamil

அம்மாடியோவ்! தேர்தல் நேரத்தில் ரூ.8,889 கோடி பறிமுதல்.. குஜராத்தில் தான் அதிகம்!

Published: 

19 May 2024 07:19 AM

Loksabha Election 2024: இந்தாண்டு தேர்தல் காலகட்டத்தில் ரூ.8,889 கோடி மதிப்பிலான ரொக்கம் மற்றும் பொருட்களை பறிமுதல் செய்துள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இதில், குஜராத்தில் மட்டும் ரூ.1,461.73 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று நாட்களில் மட்டும் ரூ.892 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தை தொடர்ந்து ராஜஸ்தானில், 1,133.82 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அம்மாடியோவ்! தேர்தல் நேரத்தில் ரூ.8,889 கோடி பறிமுதல்.. குஜராத்தில் தான் அதிகம்!

தேர்தல் ஆணையம்

Follow Us On

ரூ.8,889 கோடி பறிமுதல்: நாடு முழுவதும் 7 கட்டங்களாக மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. இதுவரை 4 கட்ட வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. மீதமுள்ள தொகுதிகளுக்கு மே 20, 25, ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெறுகிறது. இதனால், அரசியில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். அதே சமயத்தில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில், மக்களவை தேர்தல் காலகட்டத்தில் எவ்வளவு ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது தொடர்பாக தேர்தல் ஆணையம் அறிவித்திருக்கிறது. அதன்படி, நாடு முழுவதும் தேர்தல் பறக்கும் படை நடத்திய அதிரடி சோதனைகளில் ரூ.8889 கோடி மதிப்பிலான ரொக்கம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், “தற்போது வரை ரூ. 8,889 கோடி ரூபாய் மதிப்புள்ள பணம், போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில், ரூ.3,958 கோடி மதிப்புள்ள போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இது இதுவரை பறிமுதல் செய்யப்பட்டதில் 45 சதவீதம் ஆகும். ரொக்கமாக ரூ.849 கோடியும், ரூ.814 கோடி மதிப்பிலான 5.39 லிட்டர் மதுபானம், ரூ.1260 கோடி மதிப்பிலான தங்கம், ரூ.2006 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 1ஆம் தேதி முதல் தீவிரமாக நடத்தப்பட்ட சோதனையில் இந்த அளவுக்கு பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. போதைப் பொருட்களை கைப்பற்றுவதில் சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறோம்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஸ்வாதி மலிவால் மீது தாக்குதல்..கெஜ்ரிவாலின் உதவியாளர் அதிரடி கைது!

குஜராத்தில் அதிகம்: 

இதில், குஜராத்தில் மட்டும் ரூ.1,461.73 கோடி மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் மூன்று நாட்களில் மட்டும் ரூ.892 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. குஜராத்தை தொடர்ந்து ராஜஸ்தானில், 1,133.82 கோடி ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதனை அடுத்து, மகாராஷ்டிராவில் ரூ.685.81 கோடியும், டெல்லியில் ரூ.653.31 கோடியும், கர்நாடகாவில் ரூ.554.41 கோடியும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

குஜராத்தில் தான் அதிகளவில் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. அதாவது, குஜராத்தில் ரூ.1,187.8 கோடி மதிப்பிலான போதைப் பொருள், பஞ்சாபில் ரூ.665.67 கோடி, டெல்லியில் ரூ358.92 கோடி, தமிழ்நாட்டில் ரூ.330.91 கோடி, மகாராஷ்டிரா ரூ.265.51 கோடி, உத்தர பிரசேத்தில் ரூ.234.79 கோடி, கர்நாடகாவில ரூ.29.84 கோடி மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

ரொக்க தொகையை பொருத்தவரை தெலுங்கனாவில் ரூ.114.41 கோடியும், கர்நாடகாவில் ரூ.92.55 கோடியும், டெல்லியில் ரூ.90.79 கோடியும், ஆந்திராவில் ரூ.85.32 கோடி ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இலவச பொருட்களில் ராஜஸ்தான் முதலிடத்தில் உள்ளது. அதாவது, 756.77 கோடி ரூபாய் மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதை தொடர்ந்து, மத்திய பிரதேசத்தில் ரூ.177.45 கோடியும், கர்நாடகாவில் ரூ.162.01 கோடி மதிப்பிலான இலவச பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கடந்த 2019 தேர்தலில் நாடு முழுவதும் ரூ.3,475 கோடி பறிமுதல் செய்யப்பட்டிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : தள்ளாடும் வயதில் ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.. வாவ்!

யூரிக் அமிலம் அதிகமாக இருந்தால் இந்த பருப்பு வகைகளை தவிர்க்க வேண்டும்..
வெயில் காலத்தில் அன்னாசி பழம் சாப்பிடலாமா?
ஒரே ஒரு சதம்.. பல்வேறு சாதனைகளை குவித்த அஸ்வின்!
பக்கவாதத்தை தடுக்கும் நூக்கல்.. இதில் இவ்வளவு நன்மை பண்புகளா..?
Exit mobile version