5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

Rahul Gandhi: ”பிரதமர், பாஜக மட்டுமே இந்துக்கள் அல்ல” – மக்களவையில் பேசிய ராகுல் காந்தி..

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில், சிவனின் படத்தை காண்பித்தப்படி ராகுல் காந்தி தனத் பேச்சை தொடங்கினார். அப்போது, “ பயத்தை எதிர்கொள்வதும் ஒருபோதும் பயப்படக்கூடாது என்ற எண்ணமும் சிவனிடம் இருந்து வருகிறது. சிவன் தனது கழுத்தில் இருந்து ஒரு அங்குலத்தில் மரணத்தை வைத்திருக்கிறார். உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு பிரதிபலிக்கிறது. ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்பதை குறிக்கிறது. அந்த உணர்வோடுதான் நாங்கள் போராடினோம்.

Rahul Gandhi: ”பிரதமர், பாஜக மட்டுமே இந்துக்கள் அல்ல” – மக்களவையில் பேசிய ராகுல் காந்தி..
ராகுல் காந்தி
Follow Us
aarthi-govindaramantv9-com
Aarthi Govindaraman | Updated On: 01 Jul 2024 22:32 PM

ராகுல் காந்தி: மக்களவையில் ஆளும் பாஜகவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாகத் தாக்கி, தங்களை இந்துக்கள் என்று சொல்லிக்கொள்பவர்கள் 24 மணி நேரமும் “வன்முறையிலும் வெறுப்பிலும்” ஈடுபட்டு வருவதாக கருத்து தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாவதத்தில் எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி இன்று அதிரடியாக பேசியுள்ளார். இதில் பாஜக, ஆர்.எஸ்.எஸ் பற்றி கடுமையாக விமர்சித்து பேசியுள்ளார். எதிர்க்கட்சியாக இருப்பதில் பெருமையாகவும், மகிழ்ச்சியாகவும் நான் உணர்கிறேன் . எங்களை பொறுத்தவரை அதிகாரத்தை விட உண்மைதான் மிகவும் சக்தி வாய்ந்தது. எங்களுக்கு அதிகாரம் முக்கியமில்லை. ஆனால், உங்களுக்கு அப்படி இல்லை. உங்களுக்கு அதிகாரம் மட்டுமே முக்கியம். அதுதான் நிதர்சனமான உண்மை என குறிப்பிட்டு பேசியுள்ளார்.


மேலும், நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தில், சிவனின் படத்தை காண்பித்தப்படி ராகுல் காந்தி தனத் பேச்சை தொடங்கினார். அப்போது, “ பயத்தை எதிர்கொள்வதும் ஒருபோதும் பயப்படக்கூடாது என்ற எண்ணமும் சிவனிடம் இருந்து வருகிறது. சிவன் தனது கழுத்தில் இருந்து ஒரு அங்குலத்தில் மரணத்தை வைத்திருக்கிறார். உண்மையை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதை சிவனின் கழுத்தில் உள்ள பாம்பு பிரதிபலிக்கிறது. ஒருபோதும் பின்வாங்கக்கூடாது என்பதை குறிக்கிறது. அந்த உணர்வோடுதான் நாங்கள் போராடினோம்.

Also Read: 7வது முறையாக பட்ஜெட் தாக்கல் செய்யும் நிர்மலா சீதாராமன்.. என்ன எதிர்ப்பார்க்கலாம்?

ஆளுங்கட்சி வன்முறையை ஊக்குவிக்கிறது. அவர்கள், இந்துக்களே அல்ல. பாஜகவுடன் போரிட்டபோது கூட, ​​நாங்கள் வன்முறையில் ஈடுபடவில்லை. நாங்கள் உண்மையைப் பாதுகாத்தபோது கூட ​​எங்களிடம் ஒரு துளி வன்முறை வெளிப்படவில்லை” என குறிப்பிட்டார்.

அதுமட்டுமின்றி அக்னிவீர் திட்டம் குறித்தும் விமர்சித்து பேசினார். அப்போது, “ ராணுவ வீரர்களிடையே அக்னிவீர் திட்டம் பாகுபாடு காட்டுவதாக இருக்கிறது. அக்னிவீரர்கள் போரில் உயிர் இழந்தால் அவர்களுக்கு தியாகி என்ற அந்தஸ்து வழங்கப்படுவதில்லை. அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுவதில்லை. பணமதிப்பு நீக்கம் போல, அக்னிவீர் திட்டமும் பிரதமர் அலுவலகத்தால் தன்னிச்சையாக வகுக்கப்பட்டத” என பேசியுள்ளார். எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தியின் இந்த பேச்சுக்கு பாஜகவினர் கடுமையாக விமர்சனம் செய்துள்ளனர். இதனால் நாடாளுமன்றத்தில் இரு தரப்பிலும் அனல் பறக்கும் விவாதம் இருந்தது குறிப்பிடத்தக்கது.

Also Read: தமிழ்நாட்டின் 13 ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் அதிரடி பணியிடமாற்றம் .. விவரங்கள் இதோ..