தள்ளாடும் வயதில் ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.. வாவ்!

Loksabha Election: தலைநகர் டெல்லியில் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. அதன்படி முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் கோஷி உள்ளிட்டோர் வீட்டில் இருந்தே வாக்களித்துள்ளனர். இவர்கள் வாக்களித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

தள்ளாடும் வயதில் ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.. வாவ்!

மன்மோகன் சிங், ஹமித் அன்சாரி, முரளி மனோகர் ஜோஷி

Updated On: 

18 May 2024 16:37 PM

மன்மோகன் சிங்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல் நடந்து முடிந்த நிலையில், ஐந்தாம் கட்ட தேர்தல் நாளை மறுநாள் நடைபெறுகிறது. குறிப்பாக, தலைநகர் டெல்லியில் மே 25ஆம் தேதி வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இந்த நிலையில், டெல்லியில் வயதானவர்கள், மாற்றுத்திறனாளிகளின் வீடுகளுக்கே சென்று வாக்குகளை பெறும் பணி தொடங்கியது. அதாவது, 85 வயது மற்றும் அதனை தாண்டிய மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகள் வீட்டில் இருந்தே வாக்களிக்க தேர்தல் ஆணையம் ஏற்பாடு செய்துள்ளது.

வீட்டில் இருந்தே வாக்களிக்க டெல்லியில் 5,500 பேர் விண்ணப்பித்துள்ளனர். விண்ணப்பம் செய்தவர்களின் வீடுகளுக்கே சென்று தேர்தல் அதிகாரிகள் வாக்குகள் இன்று முதல் பெற்று வருகின்றன. அதன்படி, இன்று டெல்லியில் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், முன்னாள் துணை குடியரசுத் தலைவர் ஹமித் அன்சாரி, பாஜக மூத்த தலைவர் முரளி மனோகர் ஜோஷி உள்ளிட்டோர் தங்களின் வீடுகளில் இருந்தே தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர். இவர்கள் வாக்களித்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

Also Read : 5ஆம் கட்ட வாக்குப்பதிவு.. 49 தொகுதிகளில் இன்றுடன் ஓய்கிறது தேர்தல் பரப்புரை!

டெல்லி மக்களவை தேர்தல்:

டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டெல்லியை பொருத்தவரை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளே மக்கள் செல்வாக்கை கொண்டிருக்கின்றன. 2014, 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் ஆம் அத்மி ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன.

இதில், மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன. இதில், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. சாந்தினி சௌக், வடகிழக்கு டெல்லி மற்றும் வடமேற்கு டெல்லி ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிடும் நிலையில், மேற்கு டெல்லி, தெற்கு டெல்லி, புது டெல்லி, கிழக்கு டெல்லி, வடகிழக்கு டெல்லி தொகுதியில் ஆம் ஆத்மி போட்டியிடுகின்றன.

டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் தன்வசம் வைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், இழந்த செல்வாக்கை மீட்டுக்கும் முயற்சியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி செயல்படுகிறது. கருத்து கணிப்புகளிலும், பாஜகவே அதிக இடங்களைக் கைப்பற்றும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. குறைந்தது 5 தொகுதிகளிலும், அதிகபட்சம்ம 7 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று கணிப்புகள் தெரிவிக்கின்றன. அதே நேரத்தில், இந்தியா கூட்டணி அதிகபட்சமாக 2 தொகுதிகளில் வெற்றி பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : ஸ்வாதி மலிவால் மீது தாக்குதல்..கெஜ்ரிவாலின் உதவியாளர் அதிரடி கைது!

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!