5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்!

பிரதமர் மோடி உத்தர பிரதேசத்தின் வாரணாசி மக்களவைத் தொகுதியில் இன்று வேட்புமனு தாக்கல் செய்ய உள்ளார்.

வாரணாசியில் பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்!
பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 14 May 2024 09:10 AM

பிரதமர் மோடி இன்று வேட்புமனு தாக்கல்:

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. இதுவரை நான்கு கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில், மே 20ஆம் தேதி ஐந்தாம் கட்ட தேர்தல் நடைபெறுகிறது. இதற்கான பிரச்சாரம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், பிரதமர் மோடி தான் போட்டியிடும் வாரணாசி தொகுதியில் வேட்புமனுவை தாக்கல் செய்ய உள்ளார். முன்னதாக, நேற்று வாரணாசிக்கு வந்த அவர், மாலையில் 6 கி.மீ தொலைவுக்கு நகரின் முக்கிய பகுதிகள் வழியாக பிரம்மாண்டமான வாகன பேரணி நடத்தினார். நேற்று நடந்த பேரணியில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யாத் உள்ளிட்ட பாஜக தலைவர்கள் கலந்து கொண்டனர். மோடியின் வாகனத்துக்கு முன்பு காவி நிற உடையணிந்த பாஜக தொண்டர்கள் அணிவகுத்து சென்றனர். சாலையின் இருபுறமும் வாரணாசி மக்கள் கூடி நின்று மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

வாரணாசி தொகுதி:

இதுகுறித்து தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ள அவர், “எனது உடலில் ஓடும் ஒவ்வொரு துளி ரத்தமும் காசியை வணங்குகிறது. பேரணியில் நீங்கள் தந்த பாசமும் ஆசீர்வாதங்களும் கற்பனை செய்ய முடியாதவை. உங்கள் பாசத்தில் 10 ஆண்டுகள் என்பது மிக வேகமாக ஓடிவிட்டது. முதலில் இங்கு வந்தபோது கங்கை தாய் என்னை அழைத்தாக சொன்னேன். இன்று சொல்கிறேன். கங்கை தாய் என்னை தத்தெடுத்துக் கொண்டாள்” என்றார்.

இந்த நிலையில், பிரதமர் மோடி இன்று காலை 11.30 மணிக்கு வேட்புமனு தாக்கல் செய்யவுள்ளார். வேட்புமனு தாக்கல் செய்யும் நிகழ்வில் பாஜக ஆளும் மற்றும் பாஜக கூட்டணி ஆட்சி நடைபெறும், மாநிலங்களைச் சேர்ந்த 12 முதல்வர்கள் பங்கேற் உள்ளனர். அதன்படி, உ.பி முதல்வர் யோகி ஆதித்யாத், பீகார் முதல்வர் நிதிஷ் குமார், உத்தரகாண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமி, மத்திய பிரதேச முதல்வர் மோகன் யாதவ் உள்ளிட்ட 12 முதல்வர்கள் பங்கேற் உள்ளனர். அதற்கு முன்னதாக, பிரதமர் மோடி காலை 10 மணிக்கு தசாஷ்வமேத் கட்டில் உள்ள கங்கைகு சென்று வழிபாடு செய்ய உள்ளார்.

வாரணாசியில் 7வது கட்ட தேர்தலின்போது (ஜூன் 1) வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இத்தொகுதியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர போட்டியிடுகின்றனர். 2014 மக்களவைத் தேர்தலில் வாரணாசி தொகுதியில் முதல்முறையாக போட்டியிட்ட மோடி 5.81 லட்சம் வாக்குகள் பெற்றார். மொத்த பதிவான வாக்குகளில் இது 56 சதவீமாகும். 2019 தேர்தலில் 6.74 லட்சம் வாக்குகளை பெற்றார். மொத்த வாக்குகளில் இது 63 சதவீதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : பீகார் முன்னாள் துணை முதல்வர் சுசில் குமார் மோடி காலமானார்!

 

 

Latest News