5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

2 மாத பிரச்சாரம் ஓய்கிறது.. இறுதி கட்டத்தை நோக்கி மக்களவை தேர்தல்!

Loksabha Election: நாடாளுமன்ற மக்களவை தேர்தலின் இறுதி கட்ட வாக்குப்பதிவிற்கான பரப்புரை இன்று மாலையுடன் ஓய்கிறது. ஏப்ரல் மாதம் தொடங்கிய அனல் பறந்த பிரச்சாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவடைகிறது. இதனால், பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இறுதி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர். ஜூன் 1ஆம் தேதி உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது.

2 மாத பிரச்சாரம் ஓய்கிறது.. இறுதி கட்டத்தை நோக்கி மக்களவை தேர்தல்!
பிரதமர் மோடி – ராகுல் காந்தி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 30 May 2024 08:31 AM

இறுதி கட்ட தேர்தல்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் நடந்து வரும் நாடாளுமன்ற மக்களவைத் தேர்தல் வரும் ஜூன் மாதம் ஒன்றாம் தேதியுடன் முடிவடைகிறது. கடந்த ஏப்ரல் மாதம் 19 ஆம் தேதி தொடங்கிய வாக்குப்பதிவு இதுவரை 6 கட்டங்களாக நடத்தப்பட்டுள்ளது. 25 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 486 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள கடைசி கட்ட வாக்குப்பதிவானது வரும் ஒன்றாம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தேதியில், உத்தர பிரதேசம், மேற்கு வங்கம், பீகார் உள்ளிட்ட எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடக்க உள்ளது. உத்தர பிரதேசம் 13, பஞ்சாப் 13, மேற்கு வங்கம் 9, பீகார் 8, ஒடிசா 6, இமாச்சல பிரதேசம் 4, ஜார்க்கண்ட் 3 மற்றும் சண்டிகர் யூனியன் பிரதேசத்தில் ஒரு தொகுதியில் ஜூன் 1ஆம் தேதி வாக்குப்பதிவு நடக்கிறது.

இன்றுடன் ஓய்கிறது பிரச்சாரம்:

இந்த நிலையில், இன்று மாலை 6 மணியுடன் பிரச்சாரம் ஓய்கிறது. தேர்தல் தொடங்கியதில் இருந்தே நாடு முழுவதும் பிரச்சாரம் அனல் பறந்தது. கோடை வெயிலையும் பொருட்படுத்தாமல் அரசியில் தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர். இதில், இடஒதுக்கீடு, சாதிவாரி கணக்கெடுப்பு, ஒடிசா விவகாரம் உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து பாஜகவும், காங்கிரஸ் கட்சியினரும் பேசினர். அதாவது, காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் இந்துக்களின் சொத்துகள் பறிக்கப்பட்டு ஊடுருவல்காரர்களுக்கு வழங்கப்படும் எனவும், பாஜக ஆட்சிக்கு வந்தால் இடஒதுக்கீடு ரத்து செய்யப்படும் என்றும், மதச்சார்பற்ற நாடு என்ற அடையாளம் இந்தியாவிற்கு இருக்காது எனவும் இருகட்சிகளும் குற்றம்சாட்டி வந்தனர்.

Also Read: ஜூன் 4ஆம் தேதி பொது விடுமுறையா? தெரிஞ்சுக்கோங்க!

ஏழு கட்ட பிரச்சாரத்திலும் இரண்டு பிரதான தேசிய கட்சிகள் இடையேயான மோதல் உச்சம் அடைந்தன. இதில், பிரதமர் மோடி, உள்துறை அமைச்சர் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி ஆகியோரது பிரச்சாரங்கள் கவனம் பெற்றது. இவ்வாறு அனல் பறந்து கொண்டு இருக்கும் தேர்தல் பிரச்சாரம் இன்று மாலையுடன் ஓய்கிறது. இதனால், பிரதமர் மோடி, அமித்ஷா, ராகுல் காந்தி உள்ளிட்டோர் இறுதி வாக்கு சேகரிப்பில் ஈடுபடுகின்றனர்.

ஸ்டார் வேட்பாளர்கள்:

7ஆம் கட்ட தேர்தலில் மொத்தம 904 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். அதில், பஞ்சாபில் 325 பேரும், உத்தர பிரதேசத்தில் 144 பேரும், பீகாரில் 134 பேரும், ஒடிசாவில் 66 பேரும், ஜார்க்கண்டில் 52 பேரும், ஹிமாச்சல் பிரதேசத்தில் 37 பேரும் சண்டிகரில் 4 பேரும் களத்தில் உள்ளனர்.  கடந்த 2/014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாராணசி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பிரதமர் மோடி, அதே தொகுதியில் மூன்றாவது முறையாக களம் காண்கிறார். வாராணசியில் காங்கிரஸ் சார்பில் அக்கட்சியின் மாநிலத் தலைவர் அஜய் ராய், பகுஜன் சமாஜ் சார்பில் ஏ.ஜமால் ஆகியோர் போட்டியிடுகின்றனர். ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங் விக்ரமாதித்ய சிங் போட்டியிடுகின்றனர். உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் பாஜகவிக் நடிகர் ரவி கிஷண், இமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் (பாஜக), மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொகுதியில் திரிணாமூல் காங்கிரஸின் அபிஷேக் பானர்ஜி. இவர் முதல்வர் மம்தாவின் பானர்ஜியின் சகோதரர் மகன் ஆவார்.

Also Read: கன்னியாகுமரிக்கு இன்று தியானம் செய்ய வரும் பிரதமர் மோடி.. உச்சக்கட்ட பாதுகாப்பு!

Latest News