Loksabha Election: நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்… 57 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!
Loksabha Election 2024: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 18வது மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. அதாவது, இன்று இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால், காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்களான வாக்குகளை செலுத்தி வருகின்றனர்.
மக்களவை இறுதிக்கட்ட தேர்தல்: பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் 18வது மக்களவை தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. அதாவது, இன்று இறுதிக்கட்டத் தேர்தல் நடைபெற்று வருகிறது. எட்டு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 57 தொகுதிகளுக்கு தேர்தல் நடைபெற்று வருகிறது. இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. இதனால், காலை முதலே வாக்காளர்கள் வரிசையில் காத்திருந்து தங்களான வாக்குகளை செலுத்தி வருகின்றனர். பஞ்சாபில் உள்ள 13 தொகுதிகளிலும், ஹிமாச்சல பிரதேசத்தில் உள்ள 4 தொகுதிகளில்லும், யூனியன் பிரதேசமான சண்டிகரில் உள்ள ஒரு தொகுதியிலும் ஒரே கட்டமாக தேர்தல் நடத்தப்படுகிறது. மேலும், உத்தர பிரதேசம், மேற்கு வங்கத்தில் உள்ள 9 தொகுதிகளிலும், பீகாரில் உள்ள 8 தொகுதிகளிலும், ஜார்க்கண்டில் உள்ள 3 தொகுதிகளிலும் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் உள்ள ஆறு மக்களவைத் தொகுதிகளிலும், 42 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
Also Read: தேர்தலுக்கு பிந்தைய கருத்துக்கணிப்பு என்றால் என்ன? எவ்வாறு கணக்கிடப்படும்.. முழு விவரம் இதோ!
ஸ்டார் வேட்பாளர்கள்:
கடந்த 2014 மற்றும் 2019 மக்களவை தேர்தலில் உத்தர பிரதேச மாநிலம் வாராணாசி தொகுதியில் போட்டியிட்டு அமோக வெற்றி பெற்ற பிரதமர் மோடி, அதே தொகுதியில் 3வது முறையாக பாஜக வேட்பாளராக போட்டியிடுகிறார். அவரை எதிர்த்து காங்கிரஸ் சார்பில் அஜய் ராய் போட்டியிடுகிறார். ஹிமாச்சல பிரதேசத்தின் மண்டி தொகுதியில் பாஜக சார்பில் நடிகை கங்கனா ரணாவத்தும், காங்கிரஸ் சார்பில் முன்னாள் முதல்வர் வீரபத்ர சிங்கின் மகனும் மாநில அமைச்சருமான விக்ரமாதித்யசிங்கும் போட்டியிடுகின்றனர்.
உத்தர பிரதேச மாநிலம் கோரக்பூர் தொகுதியில் நடிகர் ரவி கிஷண் (பாஜக), ஹிமாச்சல பிரதேச மாநிலம் ஹமிர்பூர் தொகுதியில் மத்திய அமைச்சர் அனுராக் தாக்கூர் (பாஜக), மேற்கு வங்க மாநிலம் டயமண்ட் ஹார்பர் தொதியில் முதல்வர் மம்தா பானர்ஜியின் சகோதரர் மகன் அபிஷேக் பானர்ஜி என மொத்தம் 904 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு இன்று மாலை 6 மணிக்கு வெளியாகிறது. ஜூன் 4ஆம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுக்ள அறிவிக்கப்பட உள்ளன. 4ஆம் தேதி நண்பகலுக்குள் ஆட்சி அமைக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும். ஜூன் 2ஆம் தேதி அருசணாச்லப் பிரதேசம், சிக்கிம் ஆகிய 2 மாநிலங்களில் சட்டமன்ற தேர்தல் முடிவுகள் வெளியாகிவிடும்.
Also Read: மாஸ் காட்டிய பாஜக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Rewind!