5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

“ஒடிசாவை தமிழர் ஆளலாமா?” பரப்புரையில் அமித்ஷா பேச்சு

ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விகே பாண்டியன் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.ஒடிசாவை தமிழர் ஆளலாமா? தமிழர் ஒருவர் ஒடிசா மாநிலத்தை வழி நடத்துவதா?  நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். இங்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒடியா மொழி பேசும் ஒரு இளம் முதல்வர் தேர்வு செய்யப்படுவார். நவீன் பட்நாயக் இந்த மாநிலத்தை 25 ஆண்டுகளுக்கு பின்னே தள்ளிவிட்டிருக்கிறார்” என்றார்.

“ஒடிசாவை தமிழர் ஆளலாமா?” பரப்புரையில் அமித்ஷா பேச்சு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 22 May 2024 10:57 AM

“ஒடிசாவை தமிழர் ஆளலாமா?” ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 247 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. இரண்டு கட்ட வாக்குப்பதிவு நடந்த நிலையில், அடுத்தடுத்து தேர்தல் நடைபெற உள்ளது. இதனால், ஒடிசாவில் பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக பிரதமர் மோடி கடந்த இரண்டு வாரங்களில் மூன்று முறை அங்கு பிரச்சாரம் மேற்கொண்டார். ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட மோடி, தமிழகத்தைச் சேர்ந்த முன்னாள் ஐஏஎஸ் அதிகாரியும், முதல்வர் நவீன் பட்நாயக் நெருக்கமானவருமான விகே பாண்டியன் குறித்து விமர்சித்தது பேசும் பொருளாக மாறியுள்ளது. இந்த நிலையில், நேற்று ஒடிசாவில் பரப்புரை மேற்கொண்ட  மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவும் விகே பாண்டியன் குறித்து விமர்சனம் செய்திருக்கிறார்.

கெண்டுஜார் பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், “இந்த சட்டமன்றத் தேர்தல் ஒடிசாவின் பெருமைக்குரிய தேர்தல். ஒடிசாவை தமிழர் ஆளலாமா? தமிழர் ஒருவர் ஒடிசா மாநிலத்தை வழி நடத்துவதா?  நான் உங்களுக்கு ஒரு உறுதியளிக்கிறேன். இங்கு பாஜக ஆட்சிக்கு வந்தால் ஒடியா மொழி பேசும் ஒரு இளம் முதல்வர் தேர்வு செய்யப்படுவார். நவீன் பட்நாயக் இந்த மாநிலத்தை 25 ஆண்டுகளுக்கு பின்னே தள்ளிவிட்டிருக்கிறார். ஒடிசாவில் இன்னும் 25 லட்சம் பேருக்கு வீடு இல்லை, 26 லட்சம் பேருக்கு  வீடுகளில் குடிநீர் இல்லை. பாஜக ஆட்சி அமைத்தால், 2 ஆண்டுகளில் ஒவ்வொருவருக்கும் வீடு மற்றும் குடிநீரை பாஜக அரசு வழங்கும்” என்றார்.

Also Read : “பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானா?” அமித்ஷாவை சாடிய கெஜ்ரிவால்!

மோடி சொன்னது என்ன?

ஒடிசா தேர்தல் பரப்புரையில் பேசிய பிரதமர் மோடி, “ஜெகநாதரை வேண்டிக்கொள்கிறேன். பூரி ஜெகனாதரின் கருவூலகத்தின் சாவி ஆறு ஆண்டுகளாக காணவில்லை. கருவூலகத்தின் சாவி காணாமல் போனதை மீட்பதற்கு ஒடிசா மக்கள் விரும்புகின்றனர். இந்த விஷயத்தில் பிஜேடி மவுனம் காப்பது மக்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது. கருவூலகத்தின் சாவி தமிழகத்திற்கு அனுப்பப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். தமிழகத்திற்கு அனுப்பியது யார்?” என்று கேள்வி எழுப்பினார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருக்கமானவராக அறியப்படுகிறார் வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட இவரை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

ஒடிசா நிலவரம்:

ஒடிசாவில் பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். 24ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து முதல்வராக இருந்து வருகிறார். இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும். கடந்த 2019ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 112 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது.

பாஜக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், சுயேச்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில், 2024 சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளமும், பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன. சிபிஎம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது.

Also Read : பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்!

Latest News