காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? பிரசாந்த் கிஷோர் நறுக்!

கடந்த 2014 தேர்தலில் பாஜக 282 இடங்களில் வென்ற நிலையில், 2019ல் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 303 இடங்களில் வென்றது மட்டுமில்லாமல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றது. எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக 400 இடங்கள் என்று கூறி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் 2014 தேர்தலில் 44 இடங்களில் வென்ற நிலையில், 2019 தேர்தலில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? பிரசாந்த் கிஷோர் நறுக்!

பிரசாந்த் கிஷோர் - ராகுல் காந்தி

Updated On: 

18 Nov 2024 18:57 PM

காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும்? மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஏழு கட்ட தேர்தல்களில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. ஆறாம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது. பத்தாண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற பாஜக முயன்று வருகிறது. பாஜகவுக்கு எப்படியாவது கடிவாளம் போட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்த்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இப்படியனா சூழலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில கருத்துகளை தெரிவித்திருக்கிறது.

பிரசாந்த் கிஷோர் சொல்வது என்ன?

2024 மக்களவை தேர்தலில் காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் வெல்லும் என்ற கேள்விக்கு பதிலளித்த பிரசாந்த் கிஷோர், “50 முதல் 55 தொகுதிகளுக்குள் பெற்றிருக்கிறார்கள். இப்போது எவ்வளவு பெறுவார்கள் என எனக்கு தெரியவில்லை. 100 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் என நான் எண்ணவில்லை. இருப்பினும், காங்கிரஸ் 100 தொகுதிகளில் வெற்றி பெற்றால், பாஜக 300 இடங்களில் வெற்றி பெறாது. இதுதான் விஷயம். 3 இலக்கு எண்களில் காங்கிரஸ் வெற்றி பெறாது. நான் காங்கிரஸ் கட்சிக்கோ, பாஜகவிற்கோ ஆதரவு இல்லை. அரசை யார் அமைப்பார்கள் என்பதை தான் பார்க்கிறேன்.

Also Read: டிரக் கவிழ்ந்து விபத்து.. உடல் நசுங்கி 11 பேர் உயிரிழப்பு.. உத்தர பிரதேசத்தில் அதிர்ச்சி!

இந்த தேர்தலில் காங்கிரஸ் 65, 68, 72, அல்லது 55 வந்நதாலும் எனக்கு அது முக்கியமில்லை. 55 தொகுதியில் இருந்து 65 அல்லது 68 தொகுதிகளில் வெற்றி பெற்று முன்னேற்றம் காண்பது என்பது பற்றி யார் கவலைப்பட போகிறார்கள்? காங்கிரஸ் 100 தொகுதிகளை விட கூடுதலாக வெற்றி பெறுவதற்கான சாத்தியம் இருந்தால் அதுபற்றி யோசனை செய்ய வேண்டும். இது ஆட்டத்தின் நிலையை மாற்றும்” என்றார்.

முன்னதாக, 2024 தேர்தலில் பாஜக வெற்றி பெரும் எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். கிழக்கு மற்றும் தெற்கில் மொத்த 225 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பாஜக சிறப்பாக செயல்படவில்லை. இந்த 225 இடங்களில் பாஜக தற்போது 50க்கும் குறைவான இடங்களையே வைத்துள்ளது. பாஜக தோல்வி அடைந்தால் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அவர்களுக்கு ஏதேனும் சரிந்ததா என்பதை பார்க்க வேண்டும். பாஜக தொடர்ந்து 370 இடங்களில் வெல்வோம் என்று கூறி வருகிறது. பாஜகவுக்கு 370 இடங்கள் கிடைக்காது. இருப்பினும், 370 இடங்களுக்கு குறைவாகவோ அல்லது 320 இடங்கள் பெற்றோ பாஜக ஆட்சி அமைக்கும். அதே சமயத்தில் 270 இடங்களுக்கு கீழ் குறையாது” என்றார்.

கடந்த 2014 தேர்தலில் பாஜக 282 இடங்களில் வென்ற நிலையில், 2019ல் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 303 இடங்களில் வென்றது மட்டுமில்லாமல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றது. எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக 400 இடங்கள் என்று கூறி வருகிறது. அதே நேரத்தில் காங்கிரஸ் 2014 தேர்தலில் 44 இடங்களில் வென்ற நிலையில், 2019 தேர்தலில் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read: மளமளவென பற்றிய தீ… உடல் கருகி 7 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு.. தலைநகரில் சோகம்!

சன் டிவியா? விஜய் டிவியா? இந்த வாரம் டிஆர்பி-யில் முந்தியது யார்
மன அழுத்த பாதிப்பில் இருந்து மீண்டு வருவது எப்படி?
குளிர்காலத்தில் நாம் செல்ல முடியாத இந்தியாவின் இடங்கள்!
இஞ்சியை உணவில் சேர்ப்பதால் இவ்வளவு நன்மைகளா?