5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்!

”பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த தேர்தலில் பிடித்த அதே இடங்களை பிடிக்கும் அல்லது கூடுதலாக சில இடங்களிலும் வெற்றி பெறலாம். ஆட்சிக்கு எதிரான மனநிலை, தலைவர்கள் மீது கோபம் இருந்தால் மக்கள் ஆளுங்கட்சியாக எதிராக வாக்களிக்கலாம். இதுவரை மோடி மீது மக்களிடையே கோபம் இருப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. ஏமாற்றம், நிறைவேறாத திட்டங்கள் போன்றவைகள் இருக்கலாம். ஆனால், மோடியின் மீது இருக்கும் கோபத்தை நான் கேள்விப்பட்டதில்லை" என்றார் பிரசாந்த் கிஷோர்.

பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்? அடித்து சொல்லும் பிரசாந்த் கிஷோர்!
பிரசாந்த் கிஷோர் – பிரதமர் மோடி
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 21 May 2024 16:45 PM

பாஜக vs காங்கிரஸ்: மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்று யார் ஆட்சியமைக்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு நாடு முழுவதும் அதிகரித்து வருகிறது. ஏழு கட்ட தேர்தல்களில் இதுவரை ஐந்து கட்ட தேர்தல்கள் நிறைவடைந்துள்ளன. ஆறாம் கட்ட தேர்தல் மே 25ஆம் தேதியும், ஏழாம் கட்ட தேர்தல் ஜூன் 1ஆம் தேதியும் நடக்கிறது. இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது. பத்தாண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற பாஜக முயன்று வருகிறது. பாஜகவுக்கு எப்படியாவது கடிவாளம் போட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்த்து இந்தியா கூட்டணியை உருவாக்கியுள்ளன. இப்படியனா சூழலில் அரசியல் ஆலோசகர் பிரசாந்த் கிஷோர் சில கருத்துகளை தெரிவித்திருக்கிறது. தேர்தலில் வெற்றி வாய்ப்பு யாருக்கு என்ற கேள்விக்கு தனியார் தொலைகாட்சிக்கு பேட்டி அளித்த அவர், “ஜூன் 4ஆம் தேதி வெளியாகும் முடிவுகள் எப்படி இருக்கும் என்பதை எதிர்காலம் காட்டும்.

பாஜக எத்தனை இடங்களில் வெல்லும்?

ஆனால், பத்திரிகையாளர்கள், அரசியல் நிபுணர்கள் தங்கள் சொந்த கருத்துகளை கொண்டுள்ளனர். என்னை பொருத்தவரை நிலைத்தன்மை சில நேரங்களில் சலிப்பை ஏற்படுத்தும். கடந்த ஐந்து மாதங்களாக, நீங்கள் தேர்தலை எப்படி மதிப்பீடு செய்கிறீர்கள் என்பது ஒரு விஷயம் இல்லை. பாஜக தலைமையிலான கூட்டணி கடந்த தேர்தலில் பிடித்த அதே இடங்களை பிடிக்கும் அல்லது கூடுதலாக சில இடங்களிலும் வெற்றி பெறலாம்.

Also Read : கோவாக்சினால் ஆபத்தான பக்க விளைவுகளா? ஆய்வு குறித்து விளக்கமளித்த ஐசிஎம்ஆர்

நாம் அடிப்படைகளை பார்க்க வேண்டும். ஆட்சிக்கு எதிரான மனநிலை, தலைவர்கள் மீது கோபம் இருந்தால் மக்கள் ஆளுங்கட்சிக்கு எதிராக வாக்களிக்கலாம். இதுவரை மோடி மீது மக்களிடையே கோபம் இருப்பதாக நான் கேள்விப்பட்டதே இல்லை. ஏமாற்றம், நிறைவேறாத திட்டங்கள் போன்றவைகள் இருக்கலாம். ஆனால், மோடியின் மீது இருக்கும் கோபத்தை நான் கேள்விப்பட்டதில்லை.

இந்த நபர் ஆட்சிக்கு வந்தால் நிலைமை சரியாகிவிடும் என்று ராகுல் காந்தி பெயரை மக்கள் சொல்வதை நான் கேட்கவில்லை. ராகுல் காந்தியின் ஆதரவாளர்கள் அப்படி சொல்லலாம். ஆனால், நான் நாடு முழுவதும் இருக்கும் மக்கள் அப்படி சொல்லி கேட்கவில்லை. ஆட்சியில் இருப்பவர்களுக்கு எதிராக பரவலான கோபமும், எதிர்ப்பு குரலும் இல்லை.

பிரசாந்த் கிஷோர் சொல்வது இதுதான்:

எனவே, எண்ணிக்கையில் பெரிய மாற்றம் இருக்காது என்று நினைக்கிறேன். கிழக்கு மற்றும் தெற்கில் மொத்த 225 மக்களவை தொகுதிகள் உள்ளன. கடந்த 10 ஆண்டுகளாக இங்கு பாஜக சிறப்பாக செயல்படவில்லை. இந்த 225 இடங்களில் பாஜக தற்போது 50க்கும் குறைவான இடங்களையே வைத்துள்ளது. பாஜக தோல்வி அடைந்தால் வடக்கு மற்றும் மேற்கு பகுதிகளில் அவர்களுக்கு ஏதேனும் சரிந்ததா என்பதை பார்க்க வேண்டும்.

என்னுடைய மதிப்பீட்டின்படி அப்படி எதுவும் இல்லை. ஆனால் கிழக்கிலும் தெற்கிலும் அதன் வாக்கு சதவீதம் அதிகரிக்கலாம். பாஜக தொடர்ந்து 370 இடங்களில் வெல்வோம் என்று கூறி வருகிறது. பாஜகவுக்கு 370 இடங்கள் கிடைக்காது.  இருப்பினும், 370 இடங்களுக்கு குறைவாகவோ அல்லது 320 இடங்கள் பெற்றோ பாஜக ஆட்சி அமைக்கும். அதே சமயத்தில் 270 இடங்களுக்கு கீழ் குறையாது” என்றார்.

கடந்த 2014 தேர்தலில் பாஜக 282 இடங்களில் வென்ற நிலையில், 2019ல் 303 இடங்களில் பாஜக தனித்து வெற்றி பெற்றது. கடந்த தேர்தலில் 303 இடங்களில் வென்றது மட்டுமில்லாமல் 224 தொகுதிகளில் 50 சதவீதத்திற்கு அதிகமான வாக்குகளை பெற்றது. எனவே, தேர்தல் பிரச்சாரத்தில் தொடக்கத்தில் இருந்தே பாஜக 400 இடங்கள் என்று கூறி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Also Read : “பஞ்சாபைச் சேர்ந்தவர்கள் பாகிஸ்தானா?” அமித்ஷாவை சாடிய கெஜ்ரிவால்!

Latest News