5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

6ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. 58 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

Loksabha Election 2024: 6ஆம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், ஹரியானா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 58 தொகுதிகளில் 11.13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர். 58 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் காலை முதலே வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

6ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. 58 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!
வாக்குப்பதிவு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 25 May 2024 08:48 AM

6ஆம் கட்ட மக்களை தேர்தல்: 18வது மக்களவையை தேர்வு செய்ய 7 கட்டத் தேத்தல் (ஏப்ரல் 19,26, மே 7,13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இதுவரை 5 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. இந்த நிலையில், 6ஆம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. உத்தர பிரதேசம், ஹரியானா, பீகார், மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் உள்ள 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த 58 தொகுதிகளில் 11.13 கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று வாக்களிக்கின்றனர்.  குறிப்பாக, டெல்லியில் இன்று மொத்தமுள்ள 7 தொகுதிகளில் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் 82 லட்சம் ஆண் வாக்காளர்களும், 69 லட்சம் பெண் வாக்களர்களும், 1,228 மூன்றாம் பாலினத்தவர் என மொத்தம் 1.52 கோடி வாக்காளர்கள் உள்ளனர். 2,627 இடங்களில் 13,000க்கும் மேற்பட்ட வாக்கச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன.  இந்த நிலையில், 58 தொகுதிகளிலும் இன்று காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது. மக்கள் காலை முதலே வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

Also Read: புனே கார் விபத்து: சிறுவனுக்கு பீட்சா, பர்கர் வழங்கிய போலீஸ்.. அடுத்த சர்ச்சை

எந்தெந்த தொகுதிகள்?

பீகாரில் 8 தொகுதிகள், ஹரியானாவில் 10 தொகுதிக்ள, ஜம்மு காஷ்மீரில் 1 தொகுதி, ஜார்கண்டில் 4 தொகுதிகள், டெல்லியில் 7 தொகுதிகள், ஒடிசாவில் 6 தொகுதிகள், உத்தர பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 8 தொகுதிகள் என மொத்தம் 58 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. ஒடிசாவில் மக்களவை தேர்தலுடன் மாநில சட்டப்பேரவைக்கும் தேர்தல் நடப்பதால், அங்கு 43 சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. யூனியன் பிரதேசமான ஜம்மு காஷ்மீரில் அனந்த்நாக் ரஜோதி தொகுதியில் 3ஆம் கட்டத்தில் வாக்குப்பதிவு நடைபெற இருந்தது. ஆனால், மோசமான வானிலை காரணமாக வாக்குப்பதிவு ஒத்திவைக்கப்பட்ட நிலையில், இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. மேற்கண்ட 58 தொகுதிகளில், 889 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இவர்களுடன் அனந்த்நாக் ராஜோரி தொகுதியைச் சேர்ந்த 20 வேட்பாளர்களும் களத்தில் உள்ளனர்.

ஸ்டார் வேட்பாளர்கள்:

டெல்லி மக்களவை தொகுதியில் மறைந்த மத்திய அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் மகள் பன்சூரி ஸ்வராஜ் பாஜக வேட்பாளராக களம் இறங்கி உள்ளார். அவரை எதிர்த்து இந்திய கூட்டணி சார்பில் ஆம் ஆத்மி மூத்த தலைவர் சோம்நாத் பார்தியும், வடகிழக்கு டெல்லியில் பாஜக மூத்த தலைவர் மனோஜ் திவாரி எம்.பி. மீண்டும் களம் இறக்கப்பட்டுள்ளார். பீகாரைச் சேர்ந்த அவரை எதிர்கொள்ள காங்கிரஸ் சார்பில் கன்னையா குமார் களம் காண்கின்றார். உத்தர பிரதேச மாநிலத்தில் கல்தான்பூரில் பாஜக சார்பில் முன்னாள் ஒன்றிய அமைச்சர் மேனகா காந்தி, ஜம்மு காஷ்மீரின் அனந்த்ராக் ரஜோரியில் முன்னாள் முதல்வர் கெமபூபா முப்தி, மேற்கு வங்கத்தில் தம்லுக்கில் உயர் நீதிமன்ற முன்னாள் நீதிபதி அபிஜித் கங்கோபாத்யாய் (பாஜக), ஹரியானாவின் கர்ணாலில் முன்னாள் முதல்வர் மனோகர் லால் கட்டார் (பாஜக), குருஷேத்ராவில் தொழிலதிபர் நவீன் ஜிண்டால் (பாஜக), ஒடிசாவில் பூரியில் பாஜகவின் சம்பித் பத்ரா, சம்பல்பூரில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் உள்ளிட்டோர் 6ஆம் கட்ட தேர்தலில் முக்கிய வேட்பாளராக களம் இறங்கி உள்ளனர்.

Also Read: வங்க தேச எம்.பி. கொலையில் திருப்பம்.. ஹனி ட்ராப்.. யார் அந்த பெண்?

Latest News