திரௌபதி முர்மு டூ ராகுல் காந்தி வரை.. ஜனநாயக கடமையாற்றிய தலைவர்கள்! - Tamil News | | TV9 Tamil

திரௌபதி முர்மு டூ ராகுல் காந்தி வரை.. ஜனநாயக கடமையாற்றிய தலைவர்கள்!

Updated On: 

25 May 2024 14:39 PM

மக்களவை தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6ஆம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசியில் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர்.

1 / 8மக்களவை

மக்களவை தேர்தலுக்கான ஆறாம் கட்ட வாக்குப்பதிவு இன்று விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 6ஆம் கட்டமாக 7 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தைச் சேர்ந்த 58 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அரசியில் தலைவர்கள், சினிமா பிரபலங்கள் என பலரும் வரிசையில் காத்திருந்து வாக்களித்து வருகின்றனர். இந்தநிலையில், ராஷ்டிரபதி பவன் வளாகத்தில் உள்ள டாக்டர் ராஜேந்திர பிரசாத் கேந்திரிய வித்யாலயாவில் உள்ள வாக்குச்சாவடியில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வாக்களித்தார்.

2 / 8

குடியரசுத் துணைத் தலைவர், ஜகதீப் தன்கர் மற்றும் அவரது மனைவி சுதேஷ் தங்கர் ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

3 / 8

காங்கிரஸின் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர். பின்னர், இருவரும் சேர்ந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர்.

4 / 8

காங்கிரஸின் பிரியங்கா காந்தி அவரது மகன் ரைஹான் ராஜீவ் வத்ரா, மகள் மிராயா வத்ரா ஆகியோருடன் டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்தனர்.

5 / 8

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் வாக்களித்தார். இவர் வாக்களித்ததற்கான சான்றிதழ் ஒன்று வழங்கப்பட்டுள்ளது. இவர் வாக்களித்த வாக்குச்சாவடியில் முதல் ஆண் வாக்காளராக ஜெய்சங்கர் உள்ளார். இதற்காக தான் அவருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

6 / 8

ஒடிசா மாநிலம் புபனேஸ்வரில் உள்ள வாக்குச்சாவடியில் அம்மாநில முதல்வர் நவீன் பட்நாயக் வாக்களித்தார்.

7 / 8

ஒடிசா மாநிலம் புபனேஸ்வர் வாக்குச்சாவடிக்கு ஆட்டோவில் வந்த பிஜேடி தலைவர் விகே பாண்டியன் தனது வாக்கை செலுத்தினார்.

8 / 8

டெல்லியில் உள்ள வாக்குச்சாவடியில் ஆம் ஆத்மி மாநிலங்களவை எம்பி ஸ்வாதி மலிவால் வாக்களித்தார்

பப்பாளி விதையில் கொட்டிக்கிடக்கும் நன்மைகள்
தினமும் ஒரு ஸ்பூன் தேங்காய் எண்ணெய் குடித்தால் என்னாகும்?
இரத்த சோகை உள்ளவர்கள் எடுத்துக்கொள்ள வேண்டிய உணவுகள்..!
காலையில் 10 நிமிடங்கள் ஓடுவதால் கிடைக்கும் நன்மைகள்..!