இன்று கூடுகிறது I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம்.. டெல்லியில் ஒன்றுகூடும் தலைவர்கள்! - Tamil News | | TV9 Tamil

இன்று கூடுகிறது I.N.D.I.A கூட்டணி ஆலோசனை கூட்டம்.. டெல்லியில் ஒன்றுகூடும் தலைவர்கள்!

டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  மக்களவை தேர்தல் குறித்தும், கூட்டணியின் எதிர்கால நடவடிக்கை குறித்து  விவாதிக்கப்பட உள்ளது. மேலும், I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி அறிவிக்கப்படாததை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இன்று அது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே இன்று மாலை வெளியாகவுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பாக ஊடக விவாதங்களில் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இன்று கூடுகிறது I.N.D.I.A  கூட்டணி ஆலோசனை கூட்டம்.. டெல்லியில் ஒன்றுகூடும் தலைவர்கள்!

I.N.D.I.A கூட்டணி

Updated On: 

01 Jun 2024 08:53 AM

ஆலோசனை கூட்டம்: மக்களை தேர்தல் இறுதி கட்டம் இன்று நடைபெறும் நிலையில், I.N.D.I.A கூட்டணியின் ஆலோசனைக் கூட்டம் இன்று டெல்லியில் நடைபெறுகிறது. பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் மக்களை தேர்தல் இன்றுடன் முடிவடைகிறது. 18வது மக்களவையை தேர்வு செய்ய 7 கட்டத் தேத்தல் (ஏப்ரல் 19,26, மே 7,13, 20, 25, ஜூன் 1) அறிவிக்கப்பட்டு, இதுவரை 6 கட்ட வாக்குப்பதிவுகள் நிறைவடைந்துள்ளன. கடைசி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்று வருகிறது. . இதில் பதிவான வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படுகிறது. இந்த தேர்தலில் பாஜகவின் என்டிஏ கூட்டணிக்கும் I.N.D.I.A கூட்டணிக்கும் இடையே தான் கடும் போட்டி நிலவுகிறது. பத்தாண்டு காலம் தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த பாஜக மீண்டும் ஆட்சிக்கட்டிலில் ஏற பாஜக முயன்று வருகிறது. பாஜகவுக்கு எப்படியாவது கடிவாளம் போட வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் ஒன்று சேர்த்து I.N.D.I.A கூட்டணியை உருவாக்கியுள்ளன. இந்த நிலையில், அனைத்து கட்சி கூட்டத்திற்கு எதிர்க்கட்சிகளின் I.N.D.I.A கூட்டணி அழைப்பு விடுத்திருந்தது.

Also Read: நாடாளுமன்ற இறுதிக்கட்ட தேர்தல்… 57 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

ஆலோசனையில் பங்கேற்கும் தலைவர்கள்:

மக்களவை தேர்தல் குறித்தும், கூட்டணியின் எதிர்கால நடவடிக்கை குறித்து விவாதிக்க இந்த கூட்டணிக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. தேர்தல் முடிவுகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்பட்டு அறிவிக்கப்படும் நிலையில், அதற்கு முன்பாக இந்த கூட்டணி இன்று நடக்க உள்ளது. டெல்லியில் உள்ள காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே வீட்டில் இந்த கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் திமுக, காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி, சமாஜ்வாதி உள்ளிட்ட கட்சிகள் கலந்து கொள்கின்றனர்.

இந்த கூட்டத்தில் ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ், சரத் பவார், உத்தவ் தாக்கரே, அரவிந்த் கெஜ்ரிவால், பிரகாஷ் கரத், டி.ராஜா, தேஜஸ்வி யாதவ் உள்ளிட்டோர் கலந்து கொள்கின்றனர். மேலும், தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் பங்கேற்பார் என கூறப்பட்ட நிலையில், அவர் டெல்லி செல்லவில்லை. அவருக்கு பதிலாக திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு பங்கேற்கிறார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல, இறுதிக் கட்ட தேர்தல் நடைபெறுவதால் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க முடியாது என மம்தா பானர்ஜி ஏற்கனவே அறிவித்துவிட்டார்.

அடுத்து என்ன?

டெல்லியில் இன்று மாலை 3 மணிக்கு நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில்  மக்களவை தேர்தல் குறித்தும், கூட்டணியின் எதிர்கால நடவடிக்கை குறித்து  விவாதிக்கப்பட உள்ளது. மேலும், கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் பற்றி அறிவிக்கப்படாததை பாஜகவினர் கடுமையாக விமர்சித்து வரும் நிலையில், இன்று அது குறித்து ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளது. இதனிடையே இன்று மாலை வெளியாகவுள்ள தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பு தொடர்பாக ஊடக விவாதங்களில் காங்கிரஸ் சார்பில் யாரும் பங்கேற்மாட்டார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read: மாஸ் காட்டிய பாஜக.. 2019 தேர்தல் முடிவுகள் ஒரு Rewind!

12 வயதுக்குள் உங்கள் குழந்தை கற்றுக்கொள்ள வேண்டிய விஷயம்!
உங்கள் பயணங்களை சிறப்பான மாற்ற சில டிப்ஸ்!
கீரை ஃப்ரெஷாக இருக்க சில டிப்ஸ்
காலையில் எழுந்தவுடன் செல்போன் பார்ப்பதால் இவ்வளவு பிரச்னையா?