I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவர்தான்.. சஸ்பென்ஸை உடைத்த உத்தவ் தாக்கரே!
Loksabha Election 2024: இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் யார் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். பிரதமர் பதவிக்கு எங்களிடம் தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளனர். பிரதமராக யார் வருவார்கள் என்பதை முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த நேரத்தில் அதை வெளியிட விரும்பவில்லை. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி போராடுகிறது என்றார் உத்தவ் தாக்கரே.
இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளர்: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் முடிவடைந்த நிலையில், நாளை ஐந்தாம் கட்ட தேர்தல் நடக்கிறது. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த முறை பாஜவின் என்டிஏ கூட்டணிக்கும் எதிர்க்கட்சிகளின் இந்தியா கூட்டணிக்கும் இடையே தான் போட்டி நிலவுகிறது. இதில் பாஜகவில் மோடி தான் பிரதமர் வேட்பாளராக இருக்கும் நிலையில், இந்தியா கூட்டணியில் யார் பிரதமர் வேட்பாளர் என இன்னும் அறிவிக்கப்படவில்லை. இதுதொடர்பாக பாஜகவினர் பல்வேறு கேள்விகளை எழுப்பி வருகின்றனர். இப்படியான சூழலில், இந்தியா கூட்டணியின் பிரதமர் வேட்பாளரை தேர்வு செய்துவிட்டதாக மகாராஷ்டிரா முன்னாள் முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் பேசுகையில், “இந்தியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் பிரதமர் யார் என்பதை ஏற்கனவே முடிவு செய்துவிட்டோம். பிரதமர் பதவிக்கு எங்களிடம் தகுதிவாய்ந்த பல தலைவர்கள் உள்ளனர். பிரதமராக யார் வருவார்கள் என்பதை முடிவு செய்துள்ளோம். ஆனால் இந்த நேரத்தில் அதை வெளியிட விரும்பவில்லை. நாட்டின் ஜனநாயகத்தை பாதுகாக்க இந்தியா கூட்டணி போராடுகிறது” என்றார்.
Also Read : அம்மாடியோவ்! தேர்தல் நேரத்தில் ரூ.8,889 கோடி பறிமுதல்.. குஜராத்தில் தான் அதிகம்!
ரகசியத்தை உடைத்த உத்தவ் தாக்கரே:
தொடர்ந்து பேசிய அவர், “இந்தியா கூட்டணியில் பிரதமர் பதவிக்கு பலர் தகுதி வாய்ந்த தலைவர்கள் இருப்பதை பிரதமர் மோடி குறைந்தபட்சம் ஒப்புக்கொண்டார். இதன் மூலம் நாங்கள் ஆட்சி அமைக்கப் போகிறேம் என பிரதமர் ஒப்புக்கொண்டார். ஆனால், பாஜகவில் பிரதமர் பதவிக்கு மோடியை தவிற வேறு யாரும் இல்லை. ஒவ்வொரு வருடமும் பாஜகவுக்கு ஒரே ஒரு முகம் மட்டுமே உள்ளது. தேர்தல் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையிலும், அந்த முகத்தை இப்போது கூட மாற்றமாட்டார்கள். மோடிக்கு பதில் வேறு யாராவது பிரதமர் வேட்பாளராக இருந்தால் அது பாஜகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தும். பாஜக எத்தனை முறை மோடியை முன்னிறுத்தப் போகிறது?” என்றார்.
காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் ராமர் கோயிலை இடித்துத் தள்ளுவோம் என்ற மோடியின் குற்றச்சாட்டுக்கு பதலளித்த காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, “எதையும் இடிப்பது எங்களது கலாச்சாரம் அல்ல. ராமர் கோயில் கோயில் அறக்கட்டளையால் கட்டப்பட்டது. மக்களைத் தூண்டுவதற்காக பாஜக தேவையற்ற குழப்பத்தை உருவாக்குகிறது.
பாஜக மீது தேர்தல் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனைத்து மதக் கட்டமைப்புகளையும் பாதுகாப்பது தங்கள் அரசாங்கத்தின் கடமை. முதலில் எங்களின் தேர்தல் அறிக்கையை இஸ்லாமிய தேர்தல் அறிக்கை என்று கூறிய மோடி, இப்போது மாவோயிஸ்ட் தேர்தல் அறிக்கை என்கிறார். குறைந்தபட்ச ஆதார விலை, ஆண்டுக்கு 2 கோடி இளைஞர்களுக்கு வேலை என்ற வாக்குறுதிகளை அவர்கள் நிறைவேற்றி இருக்கிறார்களா என்பதை பிரதமர் மோடி மக்களுக்கு சொல்ல வேண்டும். எல்லா மக்களையும் எப்போதும் ஏமாற்ற முடியாது” என்றார்.
Also Read : தள்ளாடும் வயதில் ஜனநாயக கடமையாற்றிய முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங்.. வாவ்!
டெல்லி மக்களவை தேர்தல்:
டெல்லியில் உள்ள 7 மக்களவை தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக மே 25ஆம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. டெல்லியில் அரவிந்த் கெஜ்ரிவால் தலைமையில் ஆம் ஆத்மி ஆட்சி நடக்கிறது. டெல்லியை பொருத்தவரை ஆம் ஆத்மி, பாஜக, காங்கிரஸ் ஆகிய 3 கட்சிகளே மக்கள் செல்வாக்கை கொண்டிருக்கின்றன. 2014, 2019ஆம் ஆண்டு தேர்தலின்போது பாஜக, காங்கிரஸ் ஆம் அத்மி ஆகியவை தனித்தனியாக போட்டியிட்டன.
இதில், மொத்தமுள்ள 7 தொகுதிகளையும் பாஜக கைப்பற்றியது. இந்த தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடுகிறது. ஆம் ஆத்மி கட்சி, காங்கிரஸ் கட்சியும் இந்தியா கூட்டணி சார்பில் போட்டியிடுகின்றன. இதில், ஆம் ஆத்மி 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 3 தொகுதிகளிலும் போட்டியிடுகிறது. டெல்லியில் உள்ள 7 தொகுதிகளையும் தன்வசம் வைக்க பாஜக முனைப்பு காட்டி வரும் நிலையில், இழந்த செல்வாக்கை மீட்டுக்கும் முயற்சியில் காங்கிரஸ், ஆம் ஆத்மி செயல்படுகிறது.