5
Latest Newsதமிழ்நாடுஇந்தியாபொழுதுபோக்குஆன்மீகம்லைஃப்ஸ்டைல்வெப் ஸ்டோரீஸ்வணிகம்விளையாட்டுகல்விடெக்னாலஜி

5ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. 49 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!

Loksabha Election: மக்களவை தேர்தலுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுதவிர ஒடிசா மாநிலத்தில் 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிகறது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 6 மணி வரை நடைபெறுகிறது.

5ஆம் கட்ட மக்களவை தேர்தல்.. 49 தொகுதிகளில் விறுவிறு வாக்குப்பதிவு!
வாக்குப்பதிவு
Follow Us
umabarkavi-k
Umabarkavi K | Updated On: 20 May 2024 07:13 AM

தொடங்கியது 5ஆம் கட்ட வாக்குப்பதிவு: நாடு முழுவதும் மக்களவை தேர்தல் ஏழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது. ஏற்கனவே நான்கு கட்ட வாக்குப்பதிவு நிறைவடைந்துள்ளன. மொத்தமுள்ள 543 தொகுதிகளில் 379 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடந்துள்ளது. இந்த நிலையில், ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நடைபெற்று வருகிறது. பீகார், ஜார்க்கண்ட், உத்தர பிரதேசம் உள்ளிட்ட 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதுதவிர ஒடிசா மாநிலத்தில் 35 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வாக்குப்பதிவு நடைபெறும் இடங்களில் பலத்த பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. மேலும், வாக்குச்சாவடிகளில் மக்கள் எந்த ஒரு சிரமமின்றி வாக்களிக்க ஏதுவாக தேர்தல் ஆணையம் பல்வேறு ஏற்பாடுகளை செய்துள்ளது.

Also Read : I.N.D.I.A கூட்டணியின் பிரதமர் வேட்பாளர் இவர்தான்.. சஸ்பென்ஸை உடைத்த உத்தவ் தாக்கரே!

8.95 கோடி வாக்காளர்கள்:

ஐந்தாம் கட்ட தேர்தலில் 8.95 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இவர்களில் 4.69 கோடி பேர் ஆண் வாக்காளர்களும், 4.26 கோடி பேர் பெண் வாக்காளர்களும், 5,409 பேர் மூன்றாம் பாலினத்தவர்கள் ஆவார். மேலும், வாக்காளர்களில் 85 வயதுக்கு மேற்பட்டோர் 7.81 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். 100 வயதுக்கு மேற்பட்டவர்கள் 792 பேர் உள்ளனர். மாற்றுத்திறனாளிகள் 7.03 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.

எந்தெந்த தொகுதிகள்?

இன்று 6 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் உள்ள 49 தொகுதிகளில் நடைபெற்று வருகிறது. அதில், பீகாரில் 5 தொகுதிகள், ஜார்கண்டில் 3 தொகுதிகள், மகாராஷ்டிராவில் 13 தொகுதிகள், ஒடிசாவில் 5 தொகுதிகள், உத்த பிரதேசத்தில் 14 தொகுதிகள், மேற்கு வங்கத்தில் 7 தொகுதிகள், ஜம்மு காஷ்மீரில் ஒரு தொகுதி, லடாக் தொகுதி என 49 தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. இதில் பதிவாகும் வாக்குகள் ஜூன் 4ஆம் தேதி எண்ணப்படுகிறது.

தொகுதிகள் விவரம்:

  1. பீகார் – சிதாமர்ஹி, முசாபர்பூர், சரண், ஹாஜிபூர், மதுபானி
  2. மகாராஷ்டிரா – துலே, டிண்டோரி, நாசிக், கல்யாண், பால்கர், பிவாண்டி, வடகிழககு, மும்பை வட மத்திய, மும்பை தெற்கு, மத்திய மும்பை, தானே, மும்பை வடக்கு, மும்பை வடமேற்கு
  3. ஒடிசா – பர்கர், போலங்கிர், கந்தமால், அஸ்கா, சுந்தர்கர்
  4. உத்தர பிரதேசம் – லக்னோ, அமேதி, ரேபரேலி, ஜலான், ஜான்சி, மோகன்லால்கஞ்ச், கௌசாம்பி, பாரபங்கி, பைசாபாத், கைசர்கஞ்ச், கோண்டா, ஹமிர்பூர், பண்டா
  5. மேற்கு வங்கம் – ஆரம்பாக், ஸ்ரீராம்பூர், உலுபெரியா, பாரக்பூர், பங்கான், ஹூக்ளி, பங்கான், ஹவுரா
  6. ஜார்கண்ட் – சத்ரா, கோடர்மா, ஹசாரிபாக்
  7. ஜம்மு காஷ்மீர் – பாரமுல்லா
  8. லடாக் – லடாக்

நட்சத்திர வேட்பாளர்கள்:

ஐந்தாம் கட்ட தேர்தலில் 675 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். உத்தர பிரதேசத்தின் ரேபரேலியில் காங்கிரரஸ் மூத்த தலைவர் ராகுல் காந்தி போட்டியிடுகிறார். இவர் ஏற்கனவே கேராளவின் வயநாடு தொகுதியில் போட்டியிட்டுள்ளார். கடந்த முறை ராகுல் காந்தி தோல்வி அடைந்த அமேதி தொகுதியில் காங்கிரஸின் கே.எல்.சர்மா நிறுத்தப்பட்டுள்ளார். அவரை எதிர்த்து பாஜக சார்பில் மத்திய அமைச்சர் ஸ்மிருதி இரானி களம் காண்கிறார். மேலும், உ.பி லக்னோ தொகுதியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங், பீகார் சாரன் தொகுதியில் லாலு பிரசாத் யாதவின் மகள் ரோகினி ஆச்சாரயா, மகாராஷ்டிராவில் முதல்வர் ஏக்நாத் ஷிண்டே மகள் ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யாண் தொகுதியிலும், மும்பை வடக்கு தொகுதியில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயலும் போட்டியிடுகின்றனர். கைசர்கஞ்ச் தொகுதியில் பாலியல் புகாரில் சிக்கிய பிரிஜ் பூஷன் சரண் சிங்கின் மகன் கரண் பூஷன் சிங், ஜம்மு காஷ்மீரின் பாரமுல்லாவில் உமர் அப்துல்லா உள்ளிட்டோர் போட்டியிடுகின்றனர்.

Also Read : “ஆம் ஆத்மியை அழிக்க சதி திட்டம்” கெஜ்ரிவால் பரபர குற்றச்சாட்டு!

 

Latest News