ஒடிசாவில் தமிழரை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்

பிரதமர் மோடி ஒடிசாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதியில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. கனிம வளங்கள் அதிகம் இருந்தும் இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்து இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? இப்படியான ஒடிசாவில் நிலை பார்த்து நான் வேதனையடைகிறேன்" என்றார்.

ஒடிசாவில் தமிழரை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யும் பிரதமர் மோடி.. என்ன மேட்டர்

பிரதமர் மோடி

Updated On: 

20 May 2024 16:57 PM

நாடு முழுவதும் மக்களவை தேர்தல் எழு கட்டங்களாக நடைபெற்று வருகிறது.   இதுவரை நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்திருக்கிறது. இன்று ஐந்தாம் கட்ட தேர்தல் நடக்கும் நிலையில், மே 25,  ஜூன் 1ஆம் தேதி அடுத்தடுத்த தேர்தல் நடக்கிறது. இதனால், அரசியல் தலைவர்கள் பலரும் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.  இந்த நிலையில், பிரதமர் மோடி ஒடிசாவில் இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது பேசிய அவர், ”ஒடிசாவில் விவசாயிகள் நிதி பிரச்னையில் உள்ளனர். இளைஞர்கள் வேலைக்காக பிற மாநிலங்களுக்கு செல்கின்றனர். பழங்குடியினர் வாழும் பகுதியில் நிலைமை இன்னும் மோசமாக இருக்கிறது. கனிம வளங்கள் அதிகம் இருந்தும் இடம்பெயர்ந்து செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இவ்வளவு வளங்கள் இருந்து இங்குள்ள மக்கள் ஏன் வறுமையில் வாடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்? இப்படியான ஒடிசாவில் நிலை பார்த்து நான் வேதனையடைகிறேன்.

தமிழரை மையப்படுத்தி பிரச்சாரம் செய்யும் மோடி:

ஒடிசாவில் இந்த நிலைக்கு யார் பெறுப்பு? சில ஊழல்வாதிகளின் கட்டுப்பாட்டில் பிஜேடி கட்சி உள்ளது. இவர்கள் தான் முதல்வர் அலுவலகத்தையும், வீட்டையும் ஆக்கிரமித்துள்ளனர். பிஜேடியின் நிர்வாகிகள் சிலர் கோடீஸ்வரர்களாகிவிட்டனர்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், பூரி ஜெகநாதரின் கருவூலகத்தின் சாவி காணாமல் போனது பற்றி குறிப்பிட்டார். அதாவது, “ஜெகநாதரை வேண்டிக்கொள்கிறேன். பூரி ஜெகனாதரின் கருவூலகத்தின் சாவி ஆறு ஆண்டுகளாக காணவில்லை. கருவூலகத்தின் சாவி காணாமல் போனதை மீட்பதற்கு ஒடிசா மக்கள் விரும்புகின்றனர். இந்த விஷயத்தில் பிஜேடி மவுனம் காப்பது மக்களுக்கு சந்தேகத்தை எழுப்பியுள்ளது.

கருவூலகத்தின் சாவி தமிழகத்திற்கு அனுப்பப்பட்டதாக மக்கள் கூறுகின்றனர். தமிழகத்திற்கு அனுப்பியது யார்?” என்று கேள்வி எழுப்பினார். முதல்வர் நவீன் பட்நாயக்கின் நெருக்கமானவராக அறியப்படுகிறார் வி.கே.பாண்டியன். தமிழ்நாட்டை பூர்விகமாக கொண்ட இவரை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்திருக்கிறார்.

ஒடிசா தேர்தல்:

ஒடிசாவில் 21 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 247 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் தலா நான்கு கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது. ஒடிசாவில் மூன்றாம் கட்ட சட்டப்பேரவை தேர்தல் வரும் 25ஆம் தேதி நடக்கிறது. புவனேஸ்வர், கட்டாக், தேன்கனல், கியோஞ்சார், பூரி, சம்பல்பூர் மக்களவை தொகுதிகளுடன், 42 சட்டப்பேரவை தொகுதிகளுக்கும் வாக்குப்பதிவு நடக்கிறது. இப்போது பிஜு ஜனதாதளம் கட்சியின் ஆட்சி நடக்கிறது. முதல்வராக அந்த கட்சியின் தலைவர் நவீன் பட்நாயக் உள்ளார். இங்கு ஒரு கட்சி ஆட்சியை பிடிக்க வேண்டும் என்றால் 74 தொகுதிகளில் வெற்றி பெற வேண்டும்.

கடந்த 2019ல் நடந்த சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளம் கட்சி 112 இடங்களில் வென்று ஆட்சியை பிடித்தது. பாஜக 23 தொகுதிகளிலும், காங்கிரஸ் 9, மார்க்சிஸ்ட், கம்யூனிஸ்ட், சுயேச்சைகள் தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றது. இந்த நிலையில்,  2024 சட்டப்பேரவை தேர்தலில் பிஜு ஜனதா தளமும், பாஜகவும் தனித்து போட்டியிடுகின்றன. சிபிஎம், ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா உடன் காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிடுகிறது. இதன் காணரமாக ஒடிசாவில் மும்முனைப் போட்டி நிலவுகிறது.

ராஷ்மிகாவிற்கு புஷ்பா 2 படத்தில் சம்பளம் இவ்வளவா?
தளபதி 69 பட நடிகை தான் இந்த சிறுமி... யார் தெரியுதா?
மலச்சிக்கல் பிரச்னையை தடுக்க டிப்ஸ்
பச்சை ஆப்பிள் சாப்பிட்டால் இவ்வளவு நன்மைகளா?